- Advertisement -
இந்திய கிரிக்கெட்

ஆஸ்திரேலிய அணிக்கெதிரான ஒருநாள் தொடரில் இடம்பெறாதது ஏன்? – மனம் திறந்த முகமது ஷமி

சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடைபெற்று வரும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த டெஸ்ட் தொடர் முடிந்த கையோடு ஆஸ்திரேலியா நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணியானது அங்கு நடைபெறவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடயிருக்கிறது.

இந்திய அணியில் தேர்வு செய்யப்படாதது குறித்து : முகமது ஷமி விளக்கம்

இந்த சுற்றுப்பயணத்திற்கான இரண்டு அணியும் பிசிசிஐ அண்மையில் அறிவித்தது. அதில் இந்திய ஒருநாள் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்த ரோஹித் சர்மா நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக புதிய கேப்டனாக சுப்மன் கில் அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் மீண்டும் இடம் பிடித்துள்ளது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

அதன் காரணமாக இந்த ஒருநாள் தொடரின் மீதான ஆவலும் அனைவரது மத்தியிலும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் இந்த ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒருநாள் தொடரின் போது வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் அவருக்கு இந்த தொடரிலும் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான டெஸ்ட் அணியில் இடம்பெறாத அவர் ஆஸ்திரரேலிய அணிக்கெதிரான ஒருநாள் தொடரிலும் இடம்பெறாததால் அவரது கிரிக்கெட் கரியர் முடிவுக்கு வரலாம் என்று தெரிகிறது. ஏனெனில் அடிக்கடி காயத்தால் அவதிப்படும் அவர் சமீபகாலமாகவே உள்ளூர் போட்டிகளில் விளையாடி வந்தாலும் அவரை இதுவரை இந்திய அணி கண்டு கொள்ளாமல் இருந்து வருகிறது.

- Advertisement -

35 வயதான அவர் தனது கரியரின் கடைசி கட்டத்தில் இருப்பதினால் இனி இந்திய அணிக்கு அவர் திரும்புவது கடினம் என்று பலரும் கூறி வருகின்றனர். இந்நிலையில் ஆஸ்திரேலிய அணிக்கெதிரான தொடரில் தேர்வு செய்யப்படாது குறித்து பேசியுள்ள முகமது ஷமி கூறுகையில் : இந்திய அணியில் விளையாட நான் தேர்வு செய்யப்படுவேன் என்பது என் கைகளில் கிடையாது. தேர்வுக்குழுவினர், பயிற்சியாளர், கேப்டன் ஆகியோர் சேர்ந்து தான் அந்த முடிவை எடுப்பார்கள்.

இதையும் படிங்க : வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி இதுதான் – உத்தேச பிளேயிங் லெவன்

தற்போதைக்கு அவர்கள் என்னை தேர்வு செய்யவில்லை. ஆனால் நான் அங்கு இருக்க வேண்டும் என்று நினைத்தால் நிச்சயம் அவர்கள் தேர்ந்தெடுப்பார்கள். அதற்கு சிறிது நேரம் தேவை. அவர்களின் கையில் தான் என்னுடைய வாய்ப்பு இருக்கிறது. எனவே நிச்சயம் நான் என்னுடைய திறமையை மீண்டும் வெளிப்படுத்தி அணியில் வாய்ப்பினை பெற முயற்சிப்பேன் என முகமது ஷமி கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -