வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி இதுதான் – உத்தேச பிளேயிங் லெவன்

IND vs WI
- Advertisement -

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரானது தற்போது இந்தியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதலாவது போட்டி ஏற்கனவே அகமதாபாத் நகரில் நடைபெற்று முடிந்த வேளையில் அந்த போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது வெஸ்ட் இண்டீஸ் அணியை ஒரு இன்னிங்ஸ் மற்றும் 140 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து இந்த தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் :

அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது நாளை அக்டோபர் 10-ஆம் தேதி டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இதன் காரணமாக தற்போது இரு அணிகளை சேர்ந்த வீரர்களும் தீவிர பயிற்சியினை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இந்த இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் ஏதாவது மாற்றம் இருக்குமா? என்பது குறித்த எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் எழுந்துள்ளது.

- Advertisement -

ஏனெனில் ஏற்கனவே முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ள வேளையில் இரண்டாவது போட்டியிலும் எளிதாக வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக இந்திய அணியில் ஒரு சில மாற்றங்கள் இருக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால் இந்திய அணியை பொறுத்தவரை முதலாவது போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி எளிதாக வெற்றி பெற்றதால் அதேபோன்று இரண்டாவது போட்டியிலும் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி இந்த தொடரை இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் கைப்பற்ற வேண்டி காத்திருக்கிறது.

இதன் காரணமாக இந்திய அணியின் பிளேயிங் லெவனில் பெரியளவு மாற்றங்கள் இருக்காது என்று கூறப்படுகிறது. ஒருவேளை பும்ராவிற்கு ஓய்வு வழங்கப்படுமோ? மூன்றாவது இடத்தில் சாய் சுதர்சன் நீக்கப்பட்டு தேவ்தத் படிக்கல் இடம் பெறுவாரோ என்ற கேள்வி இருந்தாலும் அவற்றிற்கெல்லாம் வாய்ப்பு இருக்காது என்று தெரிகிறது.

- Advertisement -

எனவே நிச்சயம் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடிய அதே இந்திய அணியே இரண்டாவது போட்டியிலும் பங்கேற்று விளையாடும் என்று தெரிகிறது. இந்த வெஸ்ட் இண்டீஸ் தொடர் முடிந்த கையோடு இந்திய அணிக்கு ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதால் இந்த தொடரை இந்திய அணி வெற்றியுடன் பூர்த்தி செய்துவிட்டு ஆஸ்திரேலியா நாட்டிற்கு செல்லும் என்று தெரிகிறது. அதன்படி இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச பிளேயிங் லெவன் இதோ :

இதையும் படிங்க : ஒரு பந்துக்கு 2 வருஷமா? ஹர்ஷித் ராணாவை விமர்சித்து பேசிய ரவிச்சந்திரன் அஷ்வின் – விவரம் இதோ

1) யாஷஸ்வி ஜெய்ஸ்வால், 2) கே.எல் ராகுல், 3) சாய் சுதர்சன், 4) சுப்மன் கில், 5) துருவ் ஜுரேல், 6) ரவீந்திர ஜடேஜா, 7) வாஷிங்டன் சுந்தர்ம், 8) நிதீஷ் ரெட்டி, 9) குல்தீப் யாதவ், 10) ஜஸ்ப்ரீத் பும்ரா, 11) முகமது சிராஜ்.

Advertisement