- Advertisement -
இந்திய கிரிக்கெட்

அறுவைசிகிச்சை செய்ததுக்கு அப்புறம் இப்போ வரைக்கும் அந்த 2 வீரர்கள் தான் எனக்கு போன் பண்ணி கேர் பன்றாங்க – முகமது ஷமி

இந்தியாவில் கடந்த ஆண்டு நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் போது காயமடைந்த முகமது ஷமி அந்த தொடர் முடிந்த கையோடு இந்திய அணியில் இருந்து வெளியேறி தனது காலில் ஏற்பட்ட காயத்திற்கான அறுவை சிகிச்சை மேற்கொண்டார். அதன்பிறகு தற்போது வரை ஓய்வில் இருந்து வரும் அவர் படிப்படியாக கிரிக்கெட் பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

இன்னும் இரண்டு மாதங்களில் அவரது காயம் முழுமையாக குணமடையும் பட்சத்தில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் பார்டர் கவாஸ்கர் தொடருக்கான இந்திய அணியில் அவர் மீண்டும் திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

50 ஓவர் உலகக் கோப்பை தொடரில் அட்டகாசமான பந்துவீச்சை வெளிப்படுத்திய முகமது ஷமி டி20 உலக கோப்பையில் இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் காயம் காரணமாக அவரால் டி20 உலக கோப்பையில் விளையாட முடியாமல் போனது. இந்நிலையில் தற்போது சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட முகமது ஷமி கிரிக்கெட் குறித்த பல்வேறு சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார்.

இது குறித்து அவர் கூறுகையில் : டி20 உலக கோப்பை தொடரில் நமது அணியின் பந்துவீச்சாளர்கள் ஸ்விங் செய்து வீசியதை பாகிஸ்தான் பிரபலங்கள் விமர்சித்து இருந்தனர். எப்போதுமே இந்திய வீரர்கள் சிறப்பாக விளையாடினால் பாகிஸ்தானில் இருந்து யாரும் பாராட்ட மாட்டார்கள். இந்திய அணியின் பவுலர்கள் சிறப்பாக பந்துவீசி இருந்தாலும் அதில் ஏகப்பட்ட குறைகளை அவர்கள் சுட்டிக் காட்டி இருந்தார்கள்.

- Advertisement -

ஆனால் அதையெல்லாம் தாண்டி நமது அணியின் வீரர்கள் திறமையானவர்கள் என்று கூறினார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் : நான் காயமடைந்து இந்திய அணியில் இருந்து வெளியேறிய பின்னர் அறுவை சிகிச்சை மேற்கொண்டேன். அதன் பிறகு தற்போது வரை பல மாதங்களாக ஓய்வில் இருந்திருக்கிறேன். ஆனால் இன்றளவும் இந்திய அணியில் இருந்து விராட் கோலி மற்றும் இஷாந்த் சர்மா ஆகிய இரண்டு நண்பர்கள் தான் தொடர்ச்சியாக எனக்கு போன் செய்து என்னுடைய உடல் நலம் குறித்து விசாரித்து வருகிறார்கள்.

இதையும் படிங்க : சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஆடவேண்டும் என்றால் இதை செய்தே ஆக வேண்டும்.. பாண்யாவுக்கு கம்பீர் வைத்த செக்

அவர்கள் இருவரையும் என்னுடைய சிறந்த நண்பர்கள் என்று சொல்வேன். விரைவில் காயத்திலிருந்து மீண்டு நிச்சயம் இந்திய அணிக்கு பலமான கம்பேக் கொடுப்பேன் என முகமது ஷமி கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -