GT vs DC : 4 விக்கெட் எடுத்து என்ன புண்ணியம்? கடைசில இப்படி ஆயிடுச்சே – ஆட்டநாயகன் முகமது ஷமி வருத்தம்

Mohammed-Shami
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 44-ஆவது லீக் போட்டி நேற்று அகமதாபாத் நகரில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய டெல்லி கேப்பிடல்ஸ் அணியானது 5 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணியை வீழ்த்தி அவர்களுக்கு அதிர்ச்சி அளித்தது. அதன்படி நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற குஜராத் அணி முதலில் பந்துவீச்சை தீர்மானம் செய்தது. அதனை தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணியானது முதல் ஓவரின் முதல் பந்திலேயே பில் சால்டின் விக்கெட்டை பறிகொடுத்தது.

DC

- Advertisement -

அதன் பிறகு இரண்டாவது ஓவரில் வார்னரும் ரன் அவுட்டாக டெல்லி அணி 6 ரன்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை இழந்து தவித்தது. பின்னர் அற்புதமான பந்துவீச்சை வெளிப்படுத்திய முகமது ஷமி பிரியம் கார்க், ரைலி ரூசோ, மணிஷ் பாண்டே ஆகியோரை அடுத்தடுத்து வீழ்த்த போட்டியின் ஐந்தாவது ஓவரிலேயே டெல்லி அணி 23 ரன்களுக்கு ஐந்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறிறது. பவர்பிளே ஓவர்களுக்குள் ஷமி நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார்.

பின்னர் எப்படியோ டெல்லி அணியின் வீரர்கள் அமான் கான், ரிப்பல் பட்டேல் மற்றும் அக்சர் பட்டேல் ஆகியோர் போராடி ரன்களை குவிக்க நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் டெல்லி அணியானது எட்டு விக்கெட்டுகளை இழந்து 130 ரன்களை குவித்தது. பின்னர் 131 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற எளிய இலக்கினை நோக்கி துரத்திய குஜராத் எவ்வளவோ போராடியும் இறுதியில் 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 125 ரன்கள் மட்டுமே குவித்தது.

Mohammed Shami 1

இதன் காரணமாக டெல்லி அணி ஐந்து ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியினை பெற்றது. இந்த போட்டியின் போது குஜராத் அணி தோல்வியை சந்தித்திருந்தாலும் அந்த அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி 4 ஓவர்கள் வீசி 11 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியதால் அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

- Advertisement -

இந்நிலையில் போட்டி முடிந்து தனது சிறப்பான பந்துவீச்சு குறித்து பேசிய ஆட்டநாயகன் முகமது ஷமி கூறுகையில் : நான் என்னுடைய திட்டத்திற்கு ஏற்ப பந்தினை வீசினேன். அதேபோன்று சரியான லைன் மற்றும் லென்த்தில் நான் பந்து வீசியதால் டெல்லி அணியின் டாப் ஆர்டரை மொத்தமாக வீழ்த்த முடிந்தது. இந்த போட்டியை எங்களது அணி நிச்சயம் வெற்றிகரமாக முடித்திருக்க வேண்டும்.

இதையும் படிங்க : DC vs GT : குஜராத் அணியை வீழ்த்தி நாங்கள் பெற்ற இந்த அற்புதமான வெற்றிக்கு காரணம் இவங்க 2 பேர் தான் – வார்னர் மகிழ்ச்சி

131 ரன்கள் என்பது அவ்வளவு கடினமான இலக்கு கிடையாது. இருந்தாலும் எங்களால் இந்த இலக்கை வெற்றிகரமாக துரத்த முடியவில்லை. சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை அடுத்தடுத்து நாங்கள் இழந்ததால் நல்ல பார்ட்னர்ஷிப் இன்றி இந்த போட்டியில் தோல்வியடைந்து விட்டோம். என்னுடைய தனிப்பட்ட பந்துவீச்சு இந்த போட்டியில் சிறப்பாக இருந்தாலும் இறுதியில் தோல்வி அடைந்தது வருத்தம் அளிக்கிறது என முகமது ஷமி கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement