
நவீன யுகத்தில் மக்களின் அன்றாட வாழ்வில் சமூக வலைதளங்கள் இன்றியமையாததாக உருவெடுத்துள்ளது. அதை பயன்படுத்தி மக்கள் பல்வேறு செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்கின்றனர். ஆனால் அதே சமூக வலைதளங்களில் பொய்யான வதந்தியான செய்திகள் வருவது வழக்கமாகும். பொதுவாக உண்மையை விட போலியே நன்றாக இருக்கும், உண்மையை விட வதந்திகள் தீ போல பரவும் என்று சொல்வார்கள்.
அந்த வகையில் இப்போதெல்லாம் உண்மையை விட பொய்யான செய்திகள் தான் மிகவும் வேகமாக பரவுகிறது என்றே சொல்லலாம். அந்த வரிசையில் நட்சத்திர முன்னாள் டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவை இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமி திருமணம் செய்ய உள்ளதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகின. குறிப்பாக பாகிஸ்தான் வீரர் சோயப் மாலிக் சமீபத்தில் சானியா மிர்சாவை விவாகரத்து செய்து இருந்தார்.
ஷமி பதிலடி:
மறுபுறம் முகமது ஷமியும் தன்னுடைய மனைவியுடன் ஏற்பட்ட பிரச்சனையால் விவகாரத்தை செய்து கொண்டார். எனவே அந்த இருவரும் விரைவில் இரண்டாவது திருமணம் செய்து கொள்ள உள்ளதாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில் அது போன்ற உண்மையற்ற செய்திகளை அதிகாரப்பூர்வமற்ற பக்கங்களில் சிலர் பொழுதுபோக்குக்காக பரப்புவதாக முகமது ஷமி தெரிவித்துள்ளார்.
அத்துடன் தைரியம் இருந்தால் அது போன்ற நபர்கள் அதிகாரப்பூர்வ பக்கங்களில் செய்திகளை பரப்புமாறு ஷமி சவால் விடுத்துள்ளார். மேலும் சானியா மிர்சாவுடன் திருமணம் என்ற செய்தி முற்றிலும் பொய்யானது என்று தெரிவிக்கும் ஷமி இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு. “சமூக ஊடகங்களில் பொறுப்புடன் நடந்து கொள்ளவும். இது போன்ற ஆதாரமற்ற செய்திகளை பரப்புவதை தவிர்க்குமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்”
“இது வித்தியாசமானது. சிலர் நொண்டி வேடிக்கைக்காக வேண்டுமென்றே இப்படி செய்யப்படுகிறது. எனவே நான் என்ன செய்ய முடியும்? கைபேசிய திறந்தால் இது போன்ற மீம்ஸ்களை தான் பார்க்க முடிகிறது. எனவே அந்த மீம்ஸ்கள் வேடிக்கையாக உருவாக்கப்பட்டவை என்று மட்டுமே நான் கூற விரும்புகிறேன். ஆனால் அது ஒருவரின் வாழ்க்கையுடன் தொடர்புடையதாக இருப்பதால் நீங்கள் அதைப் பற்றி சிந்தித்து பகிர வேண்டும்”
இதையும் படிங்க: யாரை யாரோட சில்லித்தனமா கம்பேர் பண்றிங்க? தோனி தான் நம்பர் ஒன்.. பாக் நிரூபரை விளாசிய ஹர்பஜன்
“அந்த நபர்கள் இது போன்ற செய்திகளை அதிகாரப்பூர்வமற்ற பக்கங்களில் வெளியிட்டு தப்பிக்கிறார்கள். ஆனால் உண்மையாக உங்களுக்கு தைரியம் இருந்தால் அதிகாரப்பூர்வ பக்கத்தில் அதை சொல்லுங்கள். நான் பதிலளிக்கிறேன். இவற்றையெல்லாம் விட்டுவிட்டு வெற்றியடைய முயற்சி செய்யுங்கள். மக்களுக்கு உதவுங்கள். உங்களை மேம்படுத்திக் கொள்ளுங்கள். அப்போது நீங்கள் ஒரு நல்ல மனிதர் என்று நான் நம்புகிறேன்” எனக் கூறினார்.