இவரையா இவ்வளவு நாள் டீம்ல எடுக்காம இருந்தீங்க? தெறிக்கவிட்ட முகமது ஷமி – இனிமே அவரோட ரிட்டர்ன் கஷ்டம் தான்

Shami
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 2023-ஆம் ஆண்டிற்கான 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரானது தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ஏற்கனவே 20 போட்டிகள் முடிவடைந்த வேளையில் இந்த தொடரில் பங்கேற்றுள்ள 10 அணிகளுமே தலா நான்கு போட்டிகளில் விளையாடி முடித்துள்ளனர். அதனை தொடர்ந்து தற்போது அடுத்த கட்ட போட்டிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இன்று அக்டோபர் 22-ஆம் தேதி தர்மசாலா நகரில் துவங்கியுள்ள 21-வது லீக் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. அந்த வகையில் இன்றைய போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இந்திய அணியானது முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 273 ரன்கள் குவித்ததால் 274 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி தற்போது சேசிங் செய்து வருகிறது.

- Advertisement -

இந்நிலையில் இன்றைய போட்டியின் போது ஆல்ரவுண்டர் ஷர்துல் தாகூர் வெளியேற்றப்பட்டு அவருக்கு பதிலாக இந்த தொடரில் முதல்முறையாக வாய்ப்பை பெற்ற முகமது ஷமி அசத்தலான பந்துவீச்சை வெளிப்படுத்தி 10 ஓவர்கள் முழுவதுமாக வீசி 54 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 5 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

அவரது பந்துவீச்சு போட்டியின் ஆரம்பத்திலும் சரி, இறுதி நேரத்திலும் சரி அற்புதமாக இருந்தது. இதன் காரணமாக ஷர்துல் தாகூர் மீண்டும் இந்த உலகக்கோப்பை தொடரில் விளையாட வாய்ப்பு இல்லை என்றும் முகமது ஷமியே தொடர்ச்சியாக விளையாட வேண்டும் என்று ரசிகர்கள் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

- Advertisement -

அதோடு பின் வரிசையில் பேட்டிங் டெப்த் வேண்டும் என்பதற்காக ஷர்துல் தாகூரை சேர்ப்பதை தவிர்த்து முழுநேர வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமியை விளையாட வைத்தால் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு கூட்டணியும் பலமடையும் என்பதனால் ஷமியை தொடர்ச்சியாக விளையாட வைக்க வேண்டும் என ரசிகர்கள் தங்களது ஆதரவுகளை அளித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : இந்தியாவுக்கு மெகா சவாலை கொடுத்த டார்ல் மிட்சேல்.. 48 வருடத்துக்கு பின் மாபெரும் வரலாற்று சாதனை

மேலும் இப்படி முதல் போட்டியிலேயே ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்திய அவரையா? இவ்வளவு நாள் உலகக் கோப்பை போட்டிகளில் விளையாட வைக்காமல் இருந்தீர்கள்? என்ற கேள்வியையும் ரசிகர்கள் எழுப்பி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement