IND vs AUS : கபில் தேவுக்கு அடுத்து நான் தான். ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக கெத்து காட்டிய – முகமது ஷமி

Shami
- Advertisement -

மொகாலி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதன்படி இன்று செப்டம்பர் 22-ஆம் தேதி துவங்கிய இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இந்திய அணியின் கேப்டன் கே.எல் ராகுல் முதலில் தங்களது அணி பந்துவீசும் என்று அறிவித்தார்.

அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா அணியானது நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 276 ரன்களை குவித்தது. ஆஸ்திரேலிய அணி சார்பாக டேவிட் வார்னர் 52 ரன்களையும், ஜாஸ் இங்கிலீஷ் 45 ரன்களையும், ஸ்டீவன் ஸ்மித் 41 ரன்களையும் குவித்து அசத்தினர்.

- Advertisement -

பின்னர் 277 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி பேட்டிங் செய்து வருகிறது. இந்நிலையில் இந்த போட்டியில் இந்திய அணி சார்பாக அசத்தலான பந்துவீச்சை வெளிப்படுத்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி 10 ஓவர்கள் வீசி ஒரு மெய்டன் உட்பட 51 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

அவர் எடுத்த இந்த ஐந்து விக்கெட்டுகளையும் மூலம் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக மாபெரும் சாதனை ஒன்றிணையும் நிகழ்த்தியுள்ளார். அந்த வகையில் இதுவரை சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக அதிக விக்கெட் கைப்பற்றிய வீரராக முதலிடத்தில் இருக்கும் கபில் தேவுக்கு அடுத்து அவர் தற்போது இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார்.

- Advertisement -

இதுவரை ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 45 விக்கெட்டுகளை கபில் தேவ் முதலிடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்து தற்போது முகமது ஷமி 37 விக்கெட்டுகளுடன் இரண்டாவது இடத்தினை பிடித்துள்ளார்.

இதையும் படிங்க : ஐசிசி உலக கோப்பை 2023 : இந்திய மண்ணில் கருப்பு குதிரையாக கோப்பை வெல்லுமா – நியூஸிலாந்து அணியின் முழுமையான அலசல்

அவர்களைத் தொடர்ந்து அஜித் அகார்கர் 36 விக்கெட்டுகளுடன் மூன்றாவது இடத்திலும், ஜவஹல் ஸ்ரீநாத் 33 விக்கெட்டுகளுடன் நான்காவது இடத்திலும், ஹர்பஜன் சிங் 32 விக்கெட்களுடன் ஐந்தாவது இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement