அவரை போய் விராட் கோலியுடன் கம்பேர் செய்வது என்ன நியாயம் – முகமது ஷமி ஆதங்கம்

shami
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டில் கடந்த தசாப்தத்தில் சச்சின் டெண்டுல்கர், ரிக்கி பாண்டிங் போன்ற பேட்டர்கள் அனைத்து விதமான கிரிக்கெட்டிலும் அபாரமாக செயல்பட்டு காலத்தால் அழிக்கமுடியாத ஜாம்பவான்களாக ஓய்வெடுத்தார்கள். அவர்களுக்கு பின் விராட் கோலி, கேன் வில்லியம்சன், ஜோ ரூட், ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் 3 வகையான கிரிக்கெட்டிலும் பல வருடங்களாக அபாரமாக செயல்பட்டு தங்களை சிறந்த பேட்டர்கள் என நிரூபித்துள்ளார்கள்.

Kohli

- Advertisement -

கடினமான சூழ்நிலைகளிலும் கூட எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்து தங்களது அணிகளை வெற்றி பெறச் செய்ததால் இவர்களை “பேப் 4” என மனதார ரசிகர்கள் அழைக்கிறார்கள். இதில் குறிப்பாக இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி டெஸ்ட், ஒருநாள், டி20 என 3 வகையான கிரிக்கெட்டிலும் மற்ற 3 வீரர்களை காட்டிலும் 50% க்கும் பேட்டிங் சராசரியை கொண்டுள்ள ஒரு மகத்தான வீரராக ஜொலித்து வருகிறார்.

அடம் பிடிக்கும் பாக் ரசிகர்கள் :
அந்த நிலையில் கடந்த சில வருடங்களாகவே பாகிஸ்தானை சேர்ந்த நட்சத்திர வீரர் மற்றும் கேப்டன் பாபர் அசாம் மேற்கூறிய வீரர்களை போல அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் அபாரமாக செயல்பட்டு வருகிறார். இதன் காரணமாக 3 வகையான கிரிக்கெட்டின் ஐசிசி தரவரிசையிலும் விராட் கோலியை முந்தி தற்போது அவர் டாப் வீரராக உள்ளார்.

azam 1

குறிப்பாக ஒருநாள் கிரிக்கெட்டில் கடந்த 2016ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து உலகின் நம்பர் ஒன் பேட்டராக இருந்த விராட் கோலி கடந்த 2 வருடங்களாக ஒரு சதம் அடிக்க முடியாத காரணத்தால் அவரை முந்தைய பாபர் அசாம் தற்போது உலகின் புதிய நம்பர்-1 பேட்டராக இருந்து வருகிறார். அதேபோல் டி20 தரவரிசையில் நம்பர் ஒன் இடத்தில் இருக்கும் அவர் டெஸ்ட் தரவரிசையில் 9வது இடத்தில் உள்ளார். அத்துடன் கடந்த 2021ஆம் ஆண்டிற்கான சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரர் என்ற ஐசிசி விருதையும் அவர் வென்றுள்ளார்.

- Advertisement -

என்ன நியாயம்:
இதன் காரணமாக விராட் கோலியை விட பாபர் அசாம் தான் சிறந்தவர் என அந்நாட்டு ரசிகர்கள் சமீப காலங்களாகவே சமூக வலைதளங்களில் இந்திய ரசிகர்களுடன் வாய்த்தகராறில் ஈடுபடுவது வழக்கமாக இருந்து வருகிறது. இந்நிலையில் விராட் கோலியுடன் பாபர் அசாமை ஒப்பிடுவது எந்த வகையிலும் நியாயமில்லை என இந்தியாவின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் முகமது சமி தெரிவித்துள்ளார்.

Babar

இது பற்றி அவர் கூறியது பின்வருமாறு. “சமீப காலங்களாக பாகிஸ்தான் கிரிக்கெட் அணி அபாரமாக விளையாடி வருகிறது. அந்த அணியை சேர்ந்த 3 – 4 வீரர்கள் தொடர்ச்சியாக அந்த அணியின் வெற்றியில் உதவி வருகிறார்கள். அதேபோல் பாபர் அசாம் ஒரு சிறந்த வீரர் என்பதில் சந்தேகமே இல்லை. ஆனாலும் அவரை ஜோ ரூட், கேன் வில்லியம்சன், ஸ்டீவ் ஸ்மித் அல்லது விராட் கோலி போன்றவர்களிடம் ஒப்பிடுவது எந்த வகையிலும் நியாயமில்லை” என தெரிவித்துள்ளார்.

- Advertisement -

நவீன கிரிக்கெட்டில் பாபர் அசாம் ஒரு மிகச்சிறந்த வீரர் என இந்திய ரசிகர்கள் உட்பட பலரின் பாராட்டையும் பெற்றுள்ளார். ஆனால் பாகிஸ்தான் ரசிகர்கள்தான் தொடர்ச்சியாக சமூக வலைதளங்களில் இவ்வாறு சண்டையிட்டு அவரின் மானத்தை காற்றில் பறக்க விடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.

Shami

இப்போதைக்கு இல்லை :
“முதலில் அவர் இன்னும் நீண்ட நாட்கள் விளையாட வேண்டும். அப்போது அவரை மதிப்பிட்டு கொள்ளலாம். ஆனால் தற்போதைய நிலைமையில் இப்போது போலவே அவர் விளையாடும் பட்சத்தில் பாகிஸ்தானின் ஒரு வரலாற்று சிறப்புமிக்க பேட்டராக உருவெடுக்க அவருக்கு வாய்ப்புள்ளது. எனவே தற்போதைய நிலைமையில் உங்களுக்கு வாழ்த்துக்கள் பாபர் அசாம் என்று தான் நான் கூறுவேன்” என இதுபற்றி முகமது ஷமி மேலும் கூறியுள்ளார்.

தற்போது போலவே பாபர் அசாம் விளையாடினால் வரலாற்றில் மிகச்சிறந்த வீரராக போற்றப்பட வாய்ப்புகள் உள்ளதாக இதுபற்றி மேலும் தெரிவித்துள்ள முகமது சமி தற்போதைக்கு அவரை சிறப்பாக விளையாட விடுங்கள் என பாகிஸ்தான் ரசிகர்கள்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர் கூறுவது போல விராட் கோலி போன்ற வீரர்கள் கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக சர்வதேச கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடி தங்களை நிரூபித்தவர்கள். ஆனால் பாபர் அசாம் தற்போது சில வருடங்கள் மட்டுமே சிறப்பாக விளையாடி வருகிறார் என்பதால் இவர்களிடையே பேசப்படும் ஒப்பீடுகள் என்பது எந்த வகையிலும் நியாயமில்லை என்பதே உண்மையாகும்.

Advertisement