
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலிய மண்ணில் விளையாட உள்ள 2024 – 25 பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடருக்கு இப்போதே ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு காணப்படுகிறது. ஏனெனில் ஆஸ்திரேலிய மண்ணில் கடைசியாக விளையாடிய 2 தொடர்களில் இந்தியா சரித்திர வெற்றி பெற்றது. அந்த வரிசையில் இம்முறை ரோகித் சர்மா தலைமையில் களமிறங்கி இந்தியா ஹாட்ரிக் வெற்றியை பெறுமா என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது.
மறுபுறம் கடந்த 2 தோல்விகளுக்கு பதிலடி கொடுத்து இம்முறை இந்தியாவை 3 – 1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா வீழ்த்தும் என ரிக்கி பாண்டிங் சமீபத்தில் கணித்துள்ளார். அத்துடன் இம்முறை இந்தியாவை தோற்கடிக்க இப்போதே தயாராகி வருவதாக கேப்டன் பட் கமின்ஸ், நேதன் லயன் போன்ற ஆஸ்திரேலிய வீரர்களும் சமீபத்தில் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் என்ன தான் வெளியே இந்தியாவை வீழ்த்துவோம் என்று சொன்னாலும் உண்மையில் ஆஸ்திரேலியா கொஞ்சம் கவலையுடன் இருக்கும் என்று இந்திய வீரர் முகமது ஷமி கூறியுள்ளார். அத்துடன் இம்முறையும் அனுபவம் மற்றும் திறமையான வீரர்களுடன் களமிறங்கும் இந்திய அணி ஆஸ்திரேலியாலில் வெல்லும் என்று ஷமி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மேலும் காயத்திலிருந்து 100% முழுமையாக குணமடையாத வரை கம்பேக் கொடுக்கப் போவதில்லை என்றும் ஷமி கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “நாங்கள் தொடரை வெல்பவர்களாக இருக்கிறோம். அதற்காக ஆஸ்திரேலியா கவலைப்படுவார்கள். முடிந்தளவுக்கு நான் மீண்டும் சீக்கிரமாக விளையாட முயற்சித்து வருகிறேன். ஏனெனில் நான் நீண்ட காலமாக விளையாடவில்லை என்பது எனக்குத் தெரியும்”
“ஆனால் நான் கம்பேக் கொடுக்கும் போது என்னுடைய மனதில் சந்தேகம் இருக்கக் கூடாது என்பதில் உறுதியாக உள்ளேன். வலுவாக நான் திரும்பி வரும் போது மீண்டும் காயமடைவதற்கான வாய்ப்புகள் குறைவாக இருக்கும். எனவே வங்கதேசம், நியூசிலாந்து அல்லது ஆஸ்திரேலியா என எந்தத் தொடரில் கம்பேக் கொடுக்கப் போகிறேன் என்பது முக்கியமில்லை. இப்போதே நான் பந்து வீச துவங்கி விட்டேன். ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை”
இதையும் படிக்க: யாரு சாமி தோனி.. 2004இல் டிகே’வுக்கு பவுலிங் போட்டு.. 140கி.மீ பாக் பவுலரை தெறிக்க விட்டாரு.. ஆகாஷ் சோப்ரா பேட்டி
“100% முழுமையாக குணமடைந்து விட்டேன் என்று நான் உணராத வரை எந்த ஃபார்மட் அல்லது எதிரணி எதுவாக இருந்தாலும் நான் கம்பேக் கொடுக்க ஒப்புக்கொள்ள மாட்டேன். ஒருவேளை உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாட வேண்டுமெனில் நான் அதை செய்வேன்” என்று கூறினார். முன்னதாக 2023 உலகக் கோப்பையில் காயத்துடன் விளையாடி இந்தியா ஃபைனல் வரை செல்ல முக்கிய பங்காற்றிய ஷமி அறுவை சிகிச்சைக்குப் பின்