யாரு சாமி தோனி.. 2004இல் டிகே’வுக்கு பவுலிங் போட்டு.. 140கி.மீ பாக் பவுலரை தெறிக்க விட்டாரு.. ஆகாஷ் சோப்ரா பேட்டி

Aakash Chopra
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் வீரர் எம்எஸ் தோனி மிகச் சிறந்த கேப்டனாக போற்றப்படுகிறார். 3 விதமான ஐசிசி வெள்ளைப்பந்து கோப்பைகளை வென்ற ஒரே கேப்டனாக சாதனை படைத்துள்ள அவர் சிறந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாகவும் ஃபினிஷராகவும் பாராட்டப்படுகிறார். முன்னதாக தோனி அறிமுகமான 2004 காலகட்டங்களில் தமிழக வீரர் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் தினேஷ் கார்த்திக் அவருக்கு போட்டியாக இருந்தார்.

இருப்பினும் அவரை விட சிறப்பாக செயல்பட்டதால் தோனி நிலையான இடத்தை பிடித்து நாளடைவில் கேப்டனாகவும் முன்னேறினார். அதே போல 2007 – 08 டெஸ்ட் தொடரில் பவுன்சர் பந்துகளால் தம்மை அச்சுறுத்திய பாகிஸ்தானின் சோயப் அக்தருக்கு சிக்ஸர்களால் தோனி பதிலடி கொடுத்ததை ரசிகர்களால் மறக்க முடியாது. இந்நிலையில் 2004இல் இந்தியாவுக்காக விளையாடும் வாய்ப்பு கிடைப்பதற்கு முன்பாக தினேஷ் கார்த்திகிற்கு போட்டியாளர் என்று பார்க்காமல் தோனி பந்து வீசியதாக ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார்.

- Advertisement -

அதிரடி தோனி:

அத்துடன் 140கி.மீ வேகத்தில் வீசக்கூடிய ஒரு பாகிஸ்தான் பவுலருக்கு எதிராக சிக்ஸர் அடித்த போது “யார் சாமி இந்த தோனி” என்ற வகையில் முதல் முறையாக தாம் திரும்பி பார்த்ததாகவும் ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “தோனி கவலையற்றவர். ஆனால் அஜாக்கிரதியானவர் கிடையாது. அவர் இருக்கும் இடத்தில் தன்னம்பிக்கையுடன் இருந்ததால் கவலையற்றவராக இருந்தார்”

“தனது வாய்ப்பு கிடைக்கும் போது அதை அவர் அஜாக்கிரதையுடன் கையாள்வதில்லை. ஒருமுறை நாங்கள் கென்யாவில் இந்தியா ஏ அணிக்காக விளையாடினோம். அதுவரை நான் ஒரு பவுலருக்கு எதிராக பேட்ஸ்மேன் ரிவர்ஸ் ஸ்வீப் அடித்து பார்த்ததில்லை. அத்தொடரில் ஏற்கனவே பாகிஸ்தானுக்காக விளையாடிய இப்திகார் அஞ்சும் எனும் 140கி.மீ வேகத்தில் வீசக்கூடிய பவுலர் விளையாடினர்”

- Advertisement -

வேகமான கீப்பர் தோனி:

“அவருக்கு எதிராக தோனி ஃபைன் லெக்கில் பவுண்டரி அடித்தார். அதனால் பவுலர் ஃபீல்டிங்கை மாற்றி தோனிக்காக தேர்ட் மேனை கொண்டு வந்தார். ஆனால் அடுத்த பந்தில் அதே தேர்டு மேன் திசையில் தோனி சிக்ஸர் அடித்தார். அப்போது “யார் இந்த பையன்?” என்ற வகையில் நான் தோனியை பார்த்தேன். மேலும் தோனி வலைப்பயிற்சியில் அதிகம் பேட்டிங் செய்ய மாட்டார்”

இதையும் படிங்க: 23 வருட சாதனை படைத்த கம்போஜ்.. மேட்ச் ட்ராவாகியும் ருதுராஜ் அணி முதலிடம்.. கோப்பையை வெல்லப்போவது எப்படி?

“சொல்லப்போனால் அவர் தன்னுடைய போட்டியாளரான தினேஷ் கார்த்திக்கிற்கு பந்து வீசுவார். இத்தனைக்கும் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. அப்போது நீங்கள் ஏன் பேட்டிங் செய்யாமல் கார்த்திக்கிற்கு பந்து வீசுகிறார்கள்? என்று தோனியிடம் நான் கேட்டேன். அதற்கு நான் பவுலிங்கை என்ஜாய் செய்வதால் பந்து வீசுவதாக தோனி சொன்னார். உண்மையில் அவர் அதிக பயிற்சிகளை செய்ய மாட்டார். ஆனால் இப்போதும் அவரது கைகள் மற்றவர்களை விட வேகமாக இருக்கிறது” என்று கூறினார்.

Advertisement