- Advertisement -
ஆசிய கோப்பை

என் கேரியர் முடியப்போகுது.. அதுக்கு ஃபிட்டான என்னால் ஆசியக் கோப்பையில் ஆட முடியாதா? ஷமி ஆதங்கம்

இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரம் முகமது ஷமியை பிசிசிஐ கொஞ்சம் கொஞ்சமாக கழற்றி விட முயற்சித்து வருகிறது. குறிப்பாக 2023 ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகள் எடுத்த ஷமி ஆரஞ்சு தொப்பி வென்று சாதனை படைத்தார். 2023 உலகக் கோப்பையில் முதல் 4 போட்டிகளில் பெஞ்சில் அமர்ந்திருந்த அவருக்கு பாண்டியா காயமடைந்ததால் வாய்ப்பு கிடைத்தது.

அந்த வாய்ப்பில் நெருப்பாக பவுலிங் செய்த அவர் அதிக விக்கெட்டுகள் எடுத்து இந்தியா ஃபைனல் வரை செல்ல முக்கிய பங்காற்றினார். அத்தொடரில் சந்தித்த காயத்துக்காக அறுவை சிகிச்சை மேற்கொண்ட அவர் குணமடைய ஒரு வருடத்திற்கும் மேல் எடுத்துக்கொண்டார். இருப்பினும் அவரால் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் ஃபிட்டாகி விளையாட முடியவில்லை.

- Advertisement -

கேரியர் முடியப்போகுது:

அதனால் அடுத்து நடைபெற்ற இங்கிலாந்து தொடரில் முழுமையாக ஃபிட்டாக என்று சொல்லி தேர்வுக்குழு அவரை கழற்றி விட்டது. அத்துடன் 2025 சாம்பியன்ஸ் ட்ராபியை இந்தியா வெல்வதற்கு உதவிய ஷமி 2025 ஆசியக் கோப்பையில் கழற்றி விடப்பட்டுள்ளார். இந்நிலையில் இனியும் இந்திய அணிக்காக விளையாடும் வாய்ப்பை தமக்கு தேர்வுக்குழுவினர் தருவார்கள் என்ற நம்பிக்கையை இழந்து விட்டதாக ஷமி தெரிவித்துள்ளார்.

அதனால் தம்முடைய கேரியர் முடியப்போவதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “என்னை தேர்ந்தெடுக்காததற்கு யாரையும் நான் குற்றம் அல்லது புகார் சொல்லவில்லை. அணியின் தேர்வுக்கு நான் சரியாக இருந்தால் தேர்ந்தெடுங்கள். இல்லையென்றால் விடுங்கள். அதில் எனக்கு எந்த பிரச்சனையுமில்லை. இந்திய அணிக்கு சிறந்தவற்றை செய்வதற்கான பொறுப்பு தேர்வாளர்களிடம் உள்ளது”

- Advertisement -

ஆசியக் கோப்பையில் புறக்கணிப்பு:

“எனக்கு வாய்ப்பு கொடுக்கப்படும் போது என்னுடைய சிறந்த செயல்பாடுகளைக் கொடுப்பதற்கான திறன் என்னிடம் இருப்பதாக நான் நம்புகிறேன். அதற்காக நான் கடினமாக உழைக்கிறேன். என்னால் அடுத்து நடைபெறும் 2025 துலீப் கோப்பையில் விளையாட முடிந்தால் டி20 கிரிக்கெட்டில் மட்டும் (ஆசியக் கோப்பை) ஏன் விளையாட முடியாது? தற்சமயத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் என்னால் கம்பேக் கொடுக்க முடியும் என்ற நம்பிக்கை இல்லை”

இதையும் படிங்க: சஞ்சு சாம்சனால் துவக்க வீரராக மட்டுமின்றி அந்த இடத்திலும் களமிறங்கி அசத்த முடியும் – கோச் அளித்த பேட்டி

“ஒருவேளை அவர்கள் எனக்கு வாய்ப்பு கொடுத்தால் நான் என்னுடைய 100% செயல்பாடுகளைக் கொடுக்க முயற்சிப்பேன். ஆனால் வாய்ப்பைக் கொடுப்பது என்னுடைய கைகளில் இல்லை. துலீப் கோப்பை போன்ற உள்ளூர் டெஸ்ட் தொடரில் விளையாடும் நான் இந்தியாவுக்காக அனைத்து ஃபார்மெட்டிலும் விளையாட தயாராக உள்ளேன். பெங்களூருவில் நடைபெற்ற ஃபிட்னஸ் சோதனையிலும் நான் தேர்ச்சி பெற்றுள்ளேன். அதனால் மீண்டும் விளையாட நான் தயாராக உள்ளேன்” என்று கூறினார்.

- Advertisement -