இங்கிலாந்து அணிக்கெதிரான முதல் 2 டெஸ்ட் போட்டியில் நட்சத்திர இந்திய வீரர் பங்கேற்க மாட்டார் – வெளியான தகவல்

IND
- Advertisement -

அண்மையில் தென்னாப்பிரிக்க நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது அங்கு நடைபெற்ற இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடியது. இதுவரை தென் ஆப்பிரிக்கா மண்ணில் டெஸ்ட் தொடரை இந்திய அணி கைப்பற்றியதே இல்லை என்கிற குறையை போக்கி வரலாறு படைக்கும் என்று ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்தனர்.

ஆனால் அந்த தொடரின் முதல் போட்டியில் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்த இந்திய அணியாதது ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் பின்தங்கி இருந்த நிலையில் இரண்டாவது போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா அணியை வீழ்த்தி அந்த தொடரை ஒன்றுக்கு ஒன்று (1-1) என்ற கணக்கில் சமன் செய்தது.

- Advertisement -

அதனை தொடர்ந்து தற்போது நாடு திரும்பியுள்ள இந்திய அணியானது ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட இருக்கிறது. அதற்கு அடுத்து இந்திய அணி இம்மாத இறுதியில் துவங்க இருக்கும் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் பங்கேற்று விளையாட இருக்கிறது.

அதன்படி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இங்கிலாந்து கிரிக்கெட் அணியானது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் அட்டவணையில் உள்ளபடி இந்திய அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது.

- Advertisement -

இந்த தொடரானது ஜனவரி 25-ஆம் தேதி துவங்க உள்ள நிலையில் இப்போதே இந்த தொடரின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உச்சம் தொட்டுள்ளது. இந்நிலையில் இந்த 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு ஆட்டங்களில் இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி இடம்பெற மாட்டார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

இதையும் படிங்க : 5 விக்கெட்ஸ் எடுத்த ரிச்சர்ட்.. டஃப் கொடுத்த ஜிம்பாப்வே.. வெறும் 208 ரன்ஸ் சேசிங்கில் திணறிய இலங்கை

ஏனெனில் 50 ஓவர் உலகக்கோப்பை தொடரின் போதே கணுக்காலில் காயமடைந்த ஷமி அந்த வலியுடனே உலகக்கோப்பை தொடர் முழுவதும் விளையாடி இருந்தார். அதனை தொடர்ந்து தற்போது சிகிச்சை மேற்கொண்டு வரும் அவர் எவ்வித கிரிக்கெட்டிலும் விளையாடாமல் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement