
அண்மையில் இலங்கை நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணியானது அங்கு நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரை மூன்றுக்கு பூஜ்யம் (3-0) என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. அதனை தொடர்ந்து ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியானது ஒருநாள் தொடரை அந்த அணியிடம் இழந்து ஏமாற்றத்தை அளித்தது.
இதன் காரணமாக இந்திய அணி அடுத்து விளையாடப்போகும் தொடர்களின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. அந்த வகையில் இந்த ஒரு மாதமாக இந்திய அணிக்கு எவ்வித போட்டிகளும் இல்லாத வேளையில் அடுத்த மாதம் வங்கதேச அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது.
இந்த தொடருக்கான இந்திய அணியில் முதன்மை வீரர்கள் அனைவரும் பங்கேற்று விளையாட இருப்பதன் காரணமாக இந்த தொடரானது விறுவிறுப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்த டெஸ்ட் தொடரின் போது இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி மீண்டும் அவசரப்பட்டு இந்திய அணிக்கு திரும்ப வேண்டாம் என்று பல்வேறு கிரிக்கெட் நிபுணர்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
ஏனெனில் கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற ஐம்பது ஓவர் உலக கோப்பை தொடரின் போது ஏற்பட்ட காயம் காரணமாக கடந்த சில மாதங்களாகவே சிகிச்சை மற்றும் ஓய்வில் இருந்து வருகிறார். அதேபோன்று அவ்வப்போது தனது பண்ணை வீட்டில் பயிற்சியிலும் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில் அவர் விரைவாக அணிக்கு திரும்பும் பட்சத்தில் மீண்டும் அவருக்கு காயம் ஏற்பட்டால் அடுத்த ஆறு மாதம் முதல் ஒரு வருடம் அவருக்கு சோதனை கட்டமாக மாறும் எனவே அவரை இந்த தொடரில் பயன்படுத்தாமல் அடுத்து வரும் நியூஸிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா தொடரில் பயன்படுத்தினால் அது அவருக்கும் நல்லது, இந்திய அணிக்கும் நல்லது என்று நிபுணர்கள் கூறி வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : தோனியை மறந்து தப்பு பண்ணிட்டேன்.. அவர் எல்லா இடத்திலும் இருப்பாரு.. தினேஷ் கார்த்திக் பேட்டி
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னதாக இந்திய அணி மொத்தமாக 10 டெஸ்ட் போட்டிகளில் அடுத்தடுத்து விளையாட இருப்பது அனைவரது மத்தியிலும் கூடுதல் கவனத்தை ஈர்த்துள்ளது.