தரமான எதிரி.. அவர் தான் 2023 உலக கோப்பையின் சிறந்த பவுலர்.. இந்திய வீரரை பாராட்டிய பென் ஸ்டோக்ஸ்

Ben Stokes
- Advertisement -

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி சொந்த மண்ணில் நடைபெற்று வரும் ஐசிசி உலகக் கோப்பை 2023 தொடரில் இதுவரை விளையாடிய 7 போட்டிகளிலும் தொடர்ச்சியாக 7 வெற்றிகளை பெற்றுள்ளது. அதன் காரணமாக புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ள இந்தியா செமி ஃபைனல் சுற்றுக்கு முதல் அணியாகவும் தகுதி பெற்று சொந்த மண்ணில் தங்களை கில்லி என்பதை மீண்டும் நிரூபித்து வருகிறது.

இத்தொடரில் பேட்ஸ்மேன்களுக்கு நிகராக பவுலர்களும் தங்களுடைய அபார திறமையால் எதிரணிகளை தெறிக்க விட்டு வருவதே இந்தியாவின் வெற்றிகளுக்கு காரணம் என்று சொல்லலாம். குறிப்பாக முதல் 4 போட்டிகளில் பெஞ்சில் அமர்ந்திருந்த முகமது ஷமி காயத்தால் வெளியேறிய பாண்டியவுக்கு பதில் வாய்ப்பு பெற்று 5 விக்கெட்டுகளை சாய்த்து ஐசிசி தொடரில் நியூசிலாந்தை 20 வருடங்கள் கழித்து இந்தியா தோற்கடிக்க முக்கிய பங்காற்றி ஆட்டநாயகன் விருதை வென்றார்.

- Advertisement -

சிறந்த பவுலர்:
அதே வேகத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் வெறும் 230 ரன்களை கட்டுப்படுத்தும் போது பென் ஸ்டோக்ஸ் உள்ளிட்ட 4 வீரர்களின் விக்கெட்டை சாய்த்த அவர் 100 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற உதவினார். அதைத்தொடர்ந்து இலங்கைக்கு எதிரான போட்டியிலும் 5 விக்கெட்டுகள் சாய்த்த அவர் 302 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தார்.

அந்த வகையில் வெறும் 14 இன்னிங்ஸில் 45 விக்கெட்டுகளை எடுத்துள்ள அவர் ஜஹீர் கான், ஜவகள் ஸ்ரீநாத் போன்ற ஜாம்பவான்களை முந்தி உலகக்கோப்பை வரலாற்றில் அதிக விக்கெட்டுகள் எடுத்த இந்திய லெஜெண்டாக உருவெடுத்துள்ளார் என்றே சொல்லலாம். இந்நிலையில் இத்தொடரில் விளையாடி வரும் எதிரணிகளில் முகமது ஷமி இந்த உலகக் கோப்பையின் மிகச்சிறந்த பவுலராக செயல்பட்டு வருவதாக இங்கிலாந்தின் நட்சத்திர ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் வெளிப்படையாக பாராட்டியுள்ளார்.

- Advertisement -

இது பற்றி ஆஸ்திரேலிய போட்டிக்கு முன் அவர் பேசியது பின்வருமாறு. “ஷமிக்கு எதிராக நான் நிறைய கிரிக்கெட்டை விளையாடியுள்ளேன். மிகவும் அற்புதமான பவுலரான அவர் நேற்றிரவு உலகக்கோப்பையில் படைத்த சாதனையை பார்த்தது உண்மையில் தனித்துவமானது. வெளிப்படையாக சொல்ல வேண்டுமெனில் அவர் இந்த உலகக் கோப்பையின் சிறந்த பந்து வீச்சாளராக இருக்கிறார் என்று நான் நினைக்கிறேன்”

இதையும் படிங்க: லாக் டவுன் மாதிரி இருக்கு.. பிசிசியின் அந்த முடிவும் பாகிஸ்தான் தோல்விக்கு காரணம்.. மிக்கி ஆர்தர் விமர்சனம்

“இதுவரை அவர் அனைத்து போட்டிகளிலும் விளையாடவில்லை. ஆனாலும் இதுவரை விளையாடிய போட்டிகளில் அவர் பெரிய விக்கெட்டுகளை எடுத்துள்ளார். அவர் விக்கெட்டை எடுக்கும் வழியை கண்டுபிடித்து விடுகிறார். குறிப்பாக இந்த உலகக் கோப்பையில் அவர் எங்களுக்கு எதிராக வீசியது பல சிறந்த ஸ்பெல்களில் ஒன்றாகும். சில சமயங்களில் எதிரணிகளில் தரமானவர்கள் இருப்பார்கள் என்று நீங்கள் சொல்வீர்கள். அந்த வகையில் இந்த உலகக்கோப்பை முழுவதும் ஷமி சிறப்பாக இருப்பதாக சொல்லலாம்” என்று கூறினார்.

Advertisement