நியூஸிலாந்து 243/4 டூ 273 ஆல் அவுட்.. ஷமி மாபெரும் வரலாற்று சாதனை.. அபார கம்பேக் கொடுத்த இந்தியா

- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் அக்டோபர் 22ஆம் தேதி தர்மசாலா நகரில் நடைபெற்ற 21வது லீக் போட்டியில் புள்ளி பட்டியலில் டாப் 2 இடங்களில் இருக்கும் வலுவான இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின. அப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்த நிலையில் பாண்டியாவுக்கு பதிலாக தாகூர் நீக்கப்பட்டு சூரியகுமார் யாதவ், ஷமி தேர்வு செய்யப்பட்டார்கள்.

அதைத் தொடர்ந்து களமிறங்கிய நியூசிலாந்துக்கு டேவோன் கான்வே ஆரம்பத்திலேயே சிராஜ் வேகத்தில் டக் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்த நிலையில் மறுபுறம் தடுமாறிய வில் எங்கை 17 ரன்களில் முகமது ஷமி போல்ட்டாக்கினார். அதனால் 19/2 என்ற சுமாரான துவக்கத்தை பெற்ற நியூசிலாந்துக்கு அடுத்ததாக ஜோடி சேர்ந்த ரச்சின் ரவீந்தரா மற்றும் டார்ல் மிட்சேல் ஆகியோர் நிதானமான பேட்டிங்கை வெளிப்படுத்தி சரிவை சரி செய்ய போராடினார்கள்.

- Advertisement -

அசத்திய மிட்சேல் – ஷமி:
அதில் ஆரம்பத்திலேயே கொடுத்த எளிதான கேட்ச்சை ரவீந்திர ஜடேஜா தவற விட்டதை பயன்படுத்திய ரவீந்தரா இந்தியாவுக்கு மிகப்பெரிய சவாலாக மாறினார். நேரம் செல்ல செல்ல நிதானமான பேட்டிங்கை வெளிப்படுத்தி 50 ரன்கள் கடந்த அவர் 34 ஓவர்கள் வரை நங்கூரமாக நின்று 3வது விக்கெட்டுக்கு 169 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து 6 பவுண்டரி 1 சிக்சருடன் 75 (87) ரன்களில் ஆட்டமிழந்தார்.

அந்த நிலைமையில் வந்த கேப்டன் டாம் லாதம் 5 ரன்களில் குல்தீப் யாதவ் சுழலில் சிக்கினாலும் மறுபுறம் தொடர்ந்து அசத்திய டார்ல் மிட்சேல் மிகச் சிறப்பான சதமடித்தார். குறிப்பாக வலுவான இந்தியாவுக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் இந்த உலகக் கோப்பையில் சதமடித்த முதல் வீரர் என்ற பெருமையும் அவர் பெற்றார். இருப்பினும் எதிர்ப்புறம் வந்த கிளன் பிலிப்ஸ் 23 ரன்களில் அவுட்டாக மிட்சேல் சான்ட்னரை சேதப்படுத்த விடாமல் 1 ரன்னில் கிளீன் போல்டாக்கிய முகமது ஷமி அடுத்ததாக வந்த மாட் ஹென்றியின் ஸ்டம்ப்களையும் தெறிக்க விட்டு டக் அவுட்டாக்கினார்.

- Advertisement -

இறுதியில் டார்ல் மிட்சேல் 9 பவுண்டரி 5 சிக்ஸருடன் 130 (127) ரன்கள் எடுத்து அவுட்டானதால் 50 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த நியூசிலாந்து 273 ரன்கள் மட்டுமே எடுத்தது. குறிப்பாக 243/4 என்ற நல்ல நிலையில் இருந்த நியூஸிலாந்தை டெத் ஓவர்களில் அபாரமாக பந்து வீசி 300 ரன்கள் தொட விடாமல் அசத்திய இந்தியா சார்பில் அதிகபட்சமாக முகமது ஷமி 5 விக்கெட்டுகளை எடுத்து மிகச்சிறப்பான கம்பேக் கொடுத்து தம்மை குறைத்து எடை போட்டு வாய்ப்பு கொடுக்காத இந்திய அணி நிர்வாகத்திற்கு பதிலடியுடன் தரத்தை காட்டினார்.

இதையும் படிங்க: மைதானத்தில் இருந்து வெளியேறிய ரோஹித். சிறிதுநேரம் கேப்டனாக மாறிய கே.எல் ராகுல் – என்ன நடந்தது?

சொல்லப்போனால் ஏற்கனவே 2019இல் இங்கிலாந்துக்கு எதிராக 5 விக்கெட்டுகளை எடுத்துள்ள முகமது ஷமி இதையும் சேர்த்து உலகக்கோப்பை வரலாற்றில் அதிக முறை ஒரு போட்டியில் 5 விக்கெட்டுகளை எடுத்த இந்திய பந்து வீச்சாளர் என்ற மாபெரும் சாதனையை படைத்துள்ளார். இதற்கு முன் கபில் தேவ், வெங்கடேஷ் ப்ரசாத், ராபின் சிங், ஆஷிஷ் நெஹ்ரா, யுவ்ராஜ் சிங் ஆகியோர் தலா 1 முறை மட்டுமே 5 விக்கெட்டுகளை எடுத்துள்ளனர்.

Advertisement