- Advertisement -
இந்திய கிரிக்கெட்

ஆஸி அணிக்கெதிரான முதல் 2 போட்டிகளுக்கு பிறகு எஞ்சியுள்ள 3 போட்டிகளுக்கான இந்திய அணியில் முகமது ஷமி – இடம்பெற வாய்ப்பு

கடந்த 2023-ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் போது காயமடைந்த முன்னணி வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி கடந்த ஏழு மாதங்களாக எவ்வித போட்டிகளிலும் பங்கேற்காமல் இருந்து வந்தார். அவ்வேளையில் பெங்களூரு சென்றிருந்த அவர் தேசிய கிரிக்கெட் அகாடமியில் தொடர்ச்சியான சிகிச்சை மற்றும் பயிற்சியில் ஈடுபட்டு வந்தார்.

இந்திய அணியில் ஷமி இடம்பிடிக்க வாய்ப்பு :

இந்நிலையில் பல மாதங்களுக்கு பிறகு தற்போது நடைபெற்று வரும் ரஞ்சி கோப்பை தொடரில் மத்தியபிரதேச அணிக்கு எதிராக நடைபெற்று வரும் போட்டியில் பெங்கால் அணிக்காக இடம் பிடித்து விளையாடி வரும் அவர் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் கடைசி மூன்று மூன்று ஆட்டங்களில் இடம் பிடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

- Advertisement -

அந்த வகையில் எதிர்வரும் நவம்பர் 22-ஆம் தேதி பெர்த் நகரில் துவங்க இருக்கு ஆஸ்திரேலிய அணிக்கெதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே அங்கு பயணித்திட்ட வேளையில் முதல் போட்டி பெர்த் நகரிலும், இரண்டாவது போட்டி அடிலெய்டு நகரிலும் நடைபெற இருக்கிறது.

இந்த இரண்டு போட்டிகள் முடிவடைந்த பின்னர் மூன்றாவது, நான்காவது மற்றும் ஐந்தாவது போட்டிக்கான இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி இடம்பெற வாய்ப்பு உள்ளது. ஏனெனில் தற்போது ரஞ்சி கோப்பை தொடரில் விளையாடி வரும் அவர் இந்த போட்டியில் விளையாடி தனது முழு உடற்தகுதியை நிரூபித்தால் நிச்சயம் அவர் ஆஸ்திரேலிய நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வார்.

- Advertisement -

அப்படி அவர் ஆஸ்திரேலியா பயணிக்க பி.சி.சி.ஐ அனுமதித்தால் தற்போதைய இந்திய அணியில் ரிசர்வ் வீரர்களாக இடம் பிடித்துள்ள கலீல் அஹமது, முகேஷ் குமார் மற்றும் பிரசித் கிருஷ்ணா ஆகிய மூவரில் ஒருவரை நீக்கிவிட்டு அவருக்கு பதிலாக முகமது ஷமியை இந்திய அணியில் இணைக்கவும் வாய்ப்பிருக்கிறது.

இதையும் படிங்க : அந்த 3 பேரும் சேர்ந்து என் பையனோட 10 வருஷ கரியரை பாழாக்கிட்டாங்க – சஞ்சு சாம்சன் தந்தை புகார்

ஆனாலும் இதுகுறித்து இந்திய அணியின் நிர்வாகமான பி.சி.சி.ஐ தான் முடிவெடுக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய அணியின் அனுபவ வீரரான முகமது ஷமி அப்படி இந்திய அணியில் இடம்பிடித்தால் அது இந்திய அணிக்குத்தான் பலம்.

- Advertisement -