இந்திய கிரிக்கெட் அணியின் இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான சஞ்சு சாம்சன் வங்கதேச அணிக்கு எதிரான டி20 தொடரின் கடைசி போட்டியில் சதம் அடித்து அசத்தியிருந்தார். அதனை தொடர்ந்து தற்போது தென்னாப்பிரிக்க நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய அணியில் இடம் பிடித்துள்ள அவர் முதல் போட்டியில் அற்புதமான செயல்பாட்டை வெளிப்படுத்தி சதம் அடித்து இருந்தார்.
சஞ்சு சாம்சனின் வாழ்க்கையை சீரழித்து விட்டார்கள் :
இந்த சதத்தின் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அடுத்தடுத்த போட்டிகளில் சதம் அடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை நிகழ்த்தினார். கடந்த 2015 ஆம் ஆண்டே சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக அறிமுகமாக இருந்தாலும் கிட்டத்தட்ட 9 ஆண்டுகளாக நிரந்தர இடம் இல்லாமல் தவித்து வந்த அவர் தற்போது ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோரது ஓய்வுக்கு பின்னர் துவக்க வீரராக தொடர்ச்சியாக இடம் பிடித்து விளையாடி வருகிறார்.
மேலும் எதிர்வரும் 2026 டி20 உலக கோப்பையில் அவரே துவக்க வீரராக களம் இறங்குவார் என்று பேசப்பட்டு வரும் வேளையில் இந்த தென்னாப்பிரிக்க தொடரானது அவருக்கு மிக முக்கியமான தொடராக மாறி உள்ளது. இந்த தொடரின் முதல் போட்டியில் சதம் அடித்த அவர் இரண்டாவது போட்டியில் டக் அவுட்டாகினாலும் இனி வரும் போட்டிகளில் அவருக்கு தொடர்ந்து வாய்ப்பு கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் தனது மகனின் 10 ஆண்டுகால கரியரை முன்னாள் கேப்டன்களான தோனி, விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர்தான் பாழடித்து விட்டனர் என அவரது தந்தை சில வெளிப்படையான கருத்துக்களை பகிர்ந்து உள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் :
இந்திய அணியின் முன்னாள் கேப்டன்களாக இருந்த தோனி, விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் இணைந்து எனது மகனின் 10 ஆண்டுகால கிரிக்கெட் வாழ்க்கையை பாழித்து விட்டார்கள். ஆனாலும் எந்த ஒரு கட்டத்திலும் என் மகன் கலங்காமல் தற்போது மீண்டும் தற்போது கம்பேக் கொடுத்துள்ளார். அதேபோன்று முன்னாள் வீரரான ஸ்ரீகாந்தின் வார்த்தைகளும் எங்களை காயப்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க : இன்றைய 3 ஆவது டி20 போட்டிக்கான இந்திய அணியில் ஏற்படவுள்ள முக்கிய மாற்றம் – புதிய வீரருக்கு வாய்ப்பு
சஞ்சு சாம்சன் வங்கதேச அணிக்கு எதிரான போட்டியின் போது சதம் அடிக்கையில் அவர் சாதாரண அணிக்கு எதிராக சதம் அடித்து விட்டதாக கிண்டல் செய்தார். ஆனால் சஞ்சு சாம்சன் அடித்த சதம் மிகச் சிறப்பான ஒன்றுதான் என்று நான் கருதுகிறேன். தற்போது இந்திய அணிக்காக தொடர்ந்து விளையாடி வரும் அவர் நிச்சயம் இந்திய அணிக்காக நிறைய சாதிப்பார் என அவரது தந்தை கூறியது குறிப்பிடத்தக்கது.



