இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான நான்கு போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரானது தென்னாப்பிரிக்க நாட்டில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் இரண்டு ஆட்டங்கள் முடிவடைந்த வேளையில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றுள்ளதால் இந்த தொடரானது தற்போது ஒன்றுக்கு ஒன்று (1-1) என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.
இந்திய அணியில் ஏற்படவுள்ள மாற்றம் :
அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டி20 போட்டியானது நவம்பர் 13-ஆம் தேதியான இன்று செஞ்சூரியன் நகரில் நடைபெற இருக்கிறது. இந்த மூன்றாவது போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் ஏதாவது மாற்றம் இருக்குமா? என்பதே பலரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது.
ஏனெனில் இரண்டாவது போட்டியில் இந்திய அணி அடைந்த தோல்விக்கு பேட்ஸ்மேன்கள் போதிய அளவு ரன்களை குவிக்காததே காரணமாக பார்க்கப்பட்டது. அதேபோன்று பின்வரிசை வீரர்களிடம் பெரிய பங்களிப்பு வழங்கும் வீரர் இல்லை என்பதனாலும் அணியில் மாற்றம் தேவை என்றும் கூறப்படுகிறது.
இதன் காரணமாக முதல் இரண்டு போட்டியிலும் விளையாடிய சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் அக்சர் படேல் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் ரமன்தீப் சிங் சேர்க்கப்பட அதிகவாய்ப்புள்ளதாக பார்க்கப்படுகிறது. அதனால் இன்றைய போட்டியில் அவர் அறிமுகமாக நிறைய வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
ஏனெனில் தென்னாப்பிரிக்க மைதானங்களில் 2 சுழற்பந்து வீச்சாளர்கள் அணிக்கு போதும் என்பதனால் வருண் சக்கரவர்த்தி மற்றும் ரவி பிஷ்னாய் ஆகிய இருவரே போதும். அதேவேளையில் ஹார்டிக் பாண்டியாவிற்கு தோள் கொடுக்கும் வகையில் ரமன்தீப் சிங் இணைந்தால் அது இந்திய அணிக்கு நல்லது.
இதையும் படிங்க : அவர் இல்லாதது இந்தியாவுக்கு இழப்பு.. அஸ்வினை விட லயன் தான் சிறந்த ஸ்பின்னர்.. பால் ஆடம்ஸ் பேட்டி
இந்தியாவில் நடைபெற்று முடிந்த 2024 ஐ.பி.எல் தொடரில் கொல்கத்தா அணி சாம்பியன் பட்டம் வென்றபோது ரமன்தீப் சிங் அந்த தொடர் முழுவதுமே அந்த அணிக்கு ஒரு அதிரடி பினிஷராகவும், பகுதிநேர பந்துவீச்சாளராகவும் சிறப்பாக செயல்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.



