டி20 உ.கோ’யில் பும்ராவுக்கு பதில் விளையாட ஆஸ்திரேலியா புறப்பட்ட வீரர் – பிசிசிஐ அறிவிக்கும் முன் அவரே கன்பார்ம் பண்ணிட்டாரு

IND Japrit Bumrah
- Advertisement -

ஐசிசி டி20 உலகக் கோப்பை அக்டோபர் 16 முதல் ஆஸ்திரேலியாவில் வரலாற்றில் 8வது முறையாக நடைபெறுகிறது. இந்த தொடரில் கோப்பையை வெல்வதற்காக அறிவிக்கப்பட்ட ரோகித் சர்மா தலைமையிலான 15 பேர் கொண்ட இந்திய கிரிக்கெட் அணியில் நம்பிக்கை நட்சத்திர முதன்மை வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா கடைசி நேரத்தில் காயத்தால் வெளியேறியதால் 14 வீரர்கள் மட்டுமே ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ளனர். கடந்த 5 வருடங்களாக 3 வகையான இந்திய அணியிலும் தன்னுடைய வித்தியாசமான பந்து வீச்சு ஆக்சனால் எதிரணிகளை திணறடித்த ஜஸ்பிரித் பும்ரா இந்திய பவுலின் துறையின் முதுகெலும்பாக பார்க்கப்படுகிறார்.

குறிப்பாக டி20 கிரிக்கெட்டில் பவர்பிளே முதல் டெத் ஓவர்கள் வரை போட்டியின் அனைத்து நேரங்களிலும் பந்து வீசி குறைவான ரன்களைக் கொடுத்து விக்கெட்டுகளை எடுத்து வெற்றியை இந்தியாவின் பக்கம் திருப்பக்கூடிய கருப்பு குதிரையாக கருதப்படும் அவர் கடைசி நேரத்தில் வெளியேறியது ஆரம்பத்திலேயே உலகக்கோப்பை கனவை தகர்த்து விட்டதாக இந்திய ரசிகர்கள் கவலையடைந்துள்ளனர். ஏனெனில் அவரை தவிர்த்து விளையாடும் புவனேஸ்வர் குமார் போன்ற பவுலர்கள் 130 கி.மீ வேகத்தில் மட்டும் வீசக்கூடியவர்கள் என்பதுடன் சமீபத்திய போட்டிகளில் டெத் ஓவர்களில் ரன்களை வாரி வழங்கி சுமாரான பார்மில் உள்ளனர்.

- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு பயணம்:
இருப்பினும் நிலைமையைச் சமாளிப்பதற்காக ஸ்டேண்ட் பை லிஸ்டில் அறிவிக்கப்பட்டிருந்த முகமது ஷமி மற்றும் தீபக் சஹர் ஆகியோரில் உலக கோப்பையில் பங்கேற்க போவது யார் என்ற எதிர்பார்ப்பு கடந்த ஒரு வாரமாகவே நிலவி வருகிறது. அதில் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஹாட்ரிக் எடுத்த முதல் இந்திய பவுலராக சாதனை படைத்து உலக கோப்பையில் விளையாட காத்திருந்த தீபக் சஹர் ஐபிஎல் தொடருக்கு முன்பாக சந்தித்த காயத்திலிருந்து குணமடைந்து 2 மாதங்கள் கழித்து அணிக்கு திரும்பி சமீபத்திய ஜிம்பாப்வே மற்றும் தென் ஆப்ரிக்க தொடரில் அசத்தலாக செயல்பட்டு கம்பேக் கொடுத்தார்.

குறிப்பாக புதிய பந்தை ஸ்விங் செய்து பேட்டிங்கில் லோயர் ஆர்டரில் கணிசமான ரன்களை அதிரடியாக சேர்த்த அவர் உலக கோப்பையில் விளையாட வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்தன. ஆனால் கடைசி நேரத்தில் மீண்டும் காயத்தால் அவர் வெளியேறியுள்ளதால் வேறு வழியின்றி மற்றொரு சீனியர் பவுலர் முகமது ஷமி தான் விளையாடுவார் என்ற செய்திகள் வெளியானது. இருப்பினும் அது பற்றிய அதிகாரப்பூர்வ செய்திகள் இன்னும் வெளியாகாத நிலையில் அக்டோபர் 12ஆம் தேதியன்று இரவு முகமது ஷமி பெங்களூருவிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளார்.

- Advertisement -

அதை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பகிர்ந்துள்ளதால் பிசிசிஐ அறிவிக்கும் முன்னரே அவர் உலக கோப்பையில் பும்ராவுக்கு பதிலாக விளையாடப் போவது 100% உறுதியாகியுள்ளது. நல்ல திறமையும் அனுபவமும் கொண்டுள்ள ஷமி கடந்த வருடம் துபாயில் நடைபெற்ற உலகக் கோப்பையில் முழுமையாக விளையாடினார். இருப்பினும் 30 வயதை கடந்து விட்டார் என்பதற்காக அடுத்த தலைமுறை பவுலர்களை உருவாக்க நினைத்த பிசிசிஐ அதன்பின் அவருக்கு ஒரு போட்டியில் கூட வாய்ப்பு கொடுக்காமல் கழற்றி விட்டது.

ஆனால் அவருக்கு பதில் வாய்ப்பு பெற்ற ஹர்ஷல் படேல், ஆவேஷ் கான் போன்ற இளம் பவுலர்கள் அவரை விட மோசமாக பந்து வீசிய நிலையில் ஐபிஎல் 2022 தொடரில் 20 விக்கெட்டுகளை எடுத்த ஷமி குஜராத் முதல் கோப்பையை வெல்ல முக்கிய பங்காற்றினார். அதனால் கடந்த சில மாதங்களாகவே அவர் மீண்டும் விளையாட வேண்டும் என்று முன்னாள் வீரர்கள் கோரிக்கை வைத்த நிலையில் நடைபெற்று முடிந்த ஆஸ்திரேலிய மற்றும் தென் ஆப்ரிக்க தொடரில் துரதிர்ஷ்டவசமாக வெளியேறிய அவருக்கு பும்ரா விலகியதால் மீண்டும் பொன்னான வாய்ப்பு கிடைத்துள்ளது.

இதையும் படிங்க: சொன்னாலும் கேட்க மாட்டீங்க, பும்ராவுக்கு பதில் டி20 உ.கோ’யில் அவர் தான் சரியான மாற்று வீரர் – வாசிம் அக்ரம்

இருப்பினும் கடந்த ஒரு வருடமாக எவ்வித சர்வதேச டி20 போட்டியிலும் பங்கேற்காத அவர் சில பயிற்சி போட்டிகளில் மட்டும் விளையாடிவிட்டு நேரடியாக உலக கோப்பையில் விளையாடப் போவது தான் ரசிகர்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்துகிறது. ஏனெனில் தற்சமயத்தில் அவர் எந்தளவுக்கு பார்மில் உள்ளார் என்பது தெரியாது. ஒருவேளை சுமாரான பார்மில் இருக்கும் பட்சத்தில் அதை மீட்டெடுப்பதற்கு முன்பாகவே முதன்மை போட்டிகள் முடிந்து வெளியேறும் நிலைமை ஏற்பட்டுவிடும் என்பதால் முதல் போட்டியிலிருந்தே அவர் பழைய பன்னீர் செல்வமாக விளையாட வேண்டியது அவசியமாகிறது.

Advertisement