சொன்னாலும் கேட்க மாட்டீங்க, பும்ராவுக்கு பதில் டி20 உ.கோ’யில் அவர் தான் சரியான மாற்று வீரர் – வாசிம் அக்ரம்

- Advertisement -

அனைவரிடமும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள 2022 ஐசிசி டி20 உலகக் கோப்பை வரும் அக்டோபர் 16 முதல் ஆஸ்திரேலியாவில் தொடங்குகிறது. இத்தொடரில் 2வது கோப்பையை வெல்வதற்காக ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா ஒரு வாரம் முன்னதாகவே பயணித்து பயிற்சி போட்டிகளில் விளையாடி வருகிறது. இருப்பினும் என்னதான் உலகின் நம்பர் ஒன் டி20 அணியாக இருந்தாலும் சமீபத்தில் ஆசிய கோப்பையில் சந்தித்த தோல்வியும் கடைசி நேரத்தில் முதன்மை வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா காயத்தால் வெளியேறியதும் இந்தியாவுக்கு பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

IND Japrit Bumrah

- Advertisement -

அதிலும் குறிப்பாக டி20 கிரிக்கெட்டில் அனைத்து நேரங்களிலும் கச்சிதமாக பந்துவீசி விக்கெட்டுகளை எடுத்து வெற்றியை இந்தியாவின் பக்கம் திருப்பக்கூடிய துருப்புச்சீட்டு பவுலராக போற்றப்படும் ஜஸ்பிரித் பும்ரா கடைசி நேரத்தில் வெளியேறியது முதல் அடியிலேயே சறுக்கலை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் அவருக்கு பதில் தேர்வாகியுள்ள புவனேஸ்வர் குமார் போன்ற பவுலர்கள் குறைவான வேகத்தில் பந்து வீசுபவர்கள் என்பதுடன் கடைசி கட்ட ஓவர்களில் ரன்களை வாரி வழங்குபவர்களாக உள்ளனர். எது எப்படியானாலும் நிலைமையைச் சமாளிக்க ஸ்டேண்ட் பை லிஸ்டில் விளையாட காத்திருந்த தீபக் சஹரும் கடைசி நேரத்தில் காயத்தால் விலகியதால் தற்போது பும்ராவுக்கு பதில் முகமது சமி விளையாடுவார் என்ற செய்திகள் வெளியாகியுள்ளது.

சரியான வீரர்:
இருப்பினும் வேகத்துக்கு கை கொடுக்கக்கூடிய ஆஸ்திரேலிய மைதானங்களில் எக்ஸ்பிரஸ் வேகத்தில் பந்து வீசும் இளம் வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக் முதன்மையான அணியில் தேர்வு செய்யப்பட்டிருக்க வேண்டும் என்ற கருத்துகள் பரவலாக காணப்படுகிறது. கடந்த 2021 ஐபிஎல் தொடரில் அறிமுகமாகி 2022 சீசனில் 22 விக்கெட்டுகளை எடுத்த அவர் தொடர்சியாக 150 கி.மீ வேகத்தில் வீசி எதிரணி பேட்ஸ்மேன்களின் ஸ்டம்ப்களை பறக்கவிட்டார். அதனால் உலகக்கோப்பையில் தேர்வு செய்ய வேண்டும் என சுனில் கவாஸ்கர் போன்ற ஜாம்பவான்கள் ஆதரவு கொடுத்தனர். அந்த நிலையில் அதன்பின் நடந்த அயர்லாந்து தொடரில் அறிமுகமான அவர் 2 போட்டிகளில் ரன்களை வாரி வழங்கியதால் அதிரடியாக நீக்கப்பட்டார்.

Umran Malik IND vs IRE

ஆனால் ஆரம்பத்தில் சச்சின் டெண்டுல்கர் உட்பட அனைவருமே தடுமாறுவார்கள் என்ற நிலைமையில் வெறும் 2 போட்டியில் தடுமாறிய அவரை முடிந்து போனவர் என்று முத்திரை குத்தி ஒதுக்கியுள்ளது சரியல்ல என்று திலிப் வெங்சர்க்கார் போன்ற முன்னாள் வீரர்கள் ஆதரவு கொடுத்தனர். அதைவிட சூப்பர்காரை போன்ற வேகத்தை கொண்ட அவரை வேகத்துக்கு கைகொடுக்கும் ஆஸ்திரேலியாவில் பயன்படுத்தாமல் ஓர்க் ஷாப்’பிலேயே விட்டுள்ளது தமக்கு ஆச்சரியமளிப்பதாக ஆஸ்திரேலிய ஜாம்பவான் பிரட் லீ தெரிவித்திருந்தார்.

- Advertisement -

இந்நிலையில் பும்ராவுக்கு பதில் நீங்கள் யாரை தேர்வு செய்தாலும் தம்மை பொறுத்தவரை உம்ரான் மாலிக் தான் சரியான மாற்று வீரர் என்று பாகிஸ்தான் ஜாம்பவான் வாசிம் அக்ரமும் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். இதுபற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “அங்கே ஒருவர் இருப்பதை நீங்கள் பார்க்கவில்லையா? உம்ரான் மாலிக் என்பவர் வேகமாக வீசுபவர். அவரை அயர்லாந்துக்கு இந்தியா அழைத்துச் சென்றதில் அவர் சரமாரியாக அடி வாங்கினார். ஆனால் டி20 கிரிக்கெட்டில் அவ்வாறு நடப்பது சாதாரணம் என்பதால் நீங்கள் தொடர்ந்து அவருக்கு வாய்ப்பளித்திருக்க வேண்டும்”

wasimakram

“என்னை கேட்டால் அவர் என்னுடைய அணியில் அனைத்து நேரமும் இருப்பார். ஏனெனில் எந்தளவுக்கு விளையாடுகிறாரோ அந்தளவுக்கு அவர் சிறந்த வீரராக உருவெடுத்தார். குறிப்பாக டி20 கிரிக்கெட்டில் அனுபவம் தான் உங்களை சிறந்தவராக மாற்றும். துரதிர்ஷ்டவசமாக டி20 என்பது பந்து வீச்சாளர்களுக்கு சாதகமான கிரிக்கெட் கிடையாது. இந்த வகையான கிரிக்கெட் ஒரு மணி நேரத்தில் அனைவரையும் மகிழ்விக்கும் வகையில் உள்ளதாலேயே உலகளவில் பிரபலமடைந்துள்ளது. எனவே பவுலர்கள் அதை புரிந்துகொண்டு ஒரு சில போட்டிகளில் அடிவாங்கினாலும் அதற்காக மனம் தளராமல் தொடர்ந்து முன்னேற வேண்டும்”

இதையும் படிங்க : சோளியை முடிக்க அவர் வராரு, உங்களிடம் பும்ராவும் இல்ல – டி20 உ.கோ’யில் பாகிஸ்தான் வெல்லும் – முன்னாள் பாக் வீரர் உறுதி

“அத்துடன் டி20 கிரிக்கெட்டில் பயன்படுத்தப்படும் பிளாட்டான பிட்ச்கள் ஒருதலைபட்சமாக உள்ளது. துபாயில் இருக்கும் பிட்ச்கள் ஓரளவு பவுலர்களுக்கு சாதகமாக இருந்தாலும் அடுத்த நாளே பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக அமைந்தது. வருங்காலத்திலும் அவ்வாறு தான் அமையப் போகிறது” என்று கூறினார். முன்னதாக உலக கோப்பையில் பங்கேற்க விட்டாலும் இந்திய அணியின் நெட் பவுலராக ஆஸ்திரேலியா பறக்க காத்திருந்த உம்ரான் மாலிக்க்கு விசா கிடைக்காததால் அந்த வாய்ப்பும் பறிபோயுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement