வேகம் முக்கியம் அல்ல. உம்ரான் மாலிக்கிற்கு அட்வைஸ் கொடுத்த முகமது ஷமி – விவரம் இதோ

shami
- Advertisement -

இந்த ஆண்டு சன் ரைசர்ஸ் அணிக்காக விளையாடி வரும் இந்திய வேகப்பந்து வீச்சாளரான உம்ரான் மாலிக் தனது அசாத்தியமான வேகப்பந்து வீச்சின் காரணமாக அனைவரது மத்தியிலும் கவனத்தைப் பெற்றுள்ளார். அதோடு இந்தத் தொடரில் மிகவும் அபாயகரமாக பந்து வீசி வரும் அவர் தொடர்ச்சியாக விக்கெட்டுகளையும் வீழ்த்தி வருவதால் இந்திய அணியில் அவருக்கு இடம் கொடுக்க வேண்டும் என்றும் பல்வேறு தரப்பிலும் இருந்தும் கோரிக்கைகள் எழுந்து வருகின்றன.

Umran Malik Pace

- Advertisement -

ஆனால் அவருடைய வேகம் எந்த அளவிற்கு இருக்கிறதோ அந்த அளவிற்கு ரன்களும் அவர் ஓவரில் கடைசி சில போட்டிகளாக கசிய தொடங்கியுள்ளன. இதன் காரணமாக முன்னுக்குப் பின் முரணாக அவரது பவுலிங் குறித்து சில விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. எனவே அவர் என்ன வேகத்தில் பந்து வீசினாலும் ரன்கள் அவர் ஓவரில் கசிவதால் அவரை இன்னும் பயிற்சி எடுத்துக் கொள்ள வேண்டும் என்று பலரும் தங்களது அறிவுரைகளை வழங்கி வருகின்றனர்.

அந்த வகையில் இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமியும் உம்ரான் மாலிக் இன்னும் நிறைய பயிற்சி செய்ய வேண்டியது அவசியம் என்று தனது கருத்தினைத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : உங்களிடம் நல்ல வேகம் இருக்கிறது. ஆனால் என்னை பொறுத்தவரை வேகம் என்பது முக்கியம் கிடையாது. 140 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீசினால் கூட அது கிரிக்கெட்டிற்கு போதுமான ஒன்று.

Umran Malik 3

ஆனால் பந்தை இருபுறமும் ஸ்விங் செய்யும் திறமை உங்களிடம் இருக்க வேண்டும். அதே போன்று பேட்ஸ்மேன்களின் மனநிலையை அறிந்து அவர்கள் எப்படி விளையாடுகிறார்கள் என்பதையும் கணித்து பந்துவீச வேண்டியது அவசியம், அந்த வகையில் நல்ல வேகத்தை வைத்திருந்தாலும் போட்டியின் தன்மை மற்றும் சூழ்நிலை ஆகியவற்றை அறிந்து அதற்கேற்றார்போல் பந்து வீசும் திறனை வைத்துக்கொள்ள வேண்டும்.

- Advertisement -

அப்படி சூழ்நிலையை அறிந்து அவர் தனது பந்துவீச்சில் சில மாற்றங்களை செய்தால் நிச்சயம் பெரிய வீரராக வருவார் என்றும் அவர் கூறியுள்ளார். இந்த நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை 11 போட்டிகளில் விளையாடியுள்ள மாலிக் 15 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தாலும் அவரது எக்கானமி என்பது மிகவும் அதிகமாக உள்ளது.

இதையும் படிங்க : தோனி பண்றதெல்லாம் நியாயமே இல்ல. இது வெறும் கண்துடைப்பா – சென்னை ரசிகர்கள் கொந்தளிப்பு

எனவே நிச்சயம் இனி வரும் போட்டிகளில் அவர் ரன்களை அதிகமாக கொடுப்பதை நிறுத்திக் கொள்ள கற்றுக் கொள்ள வேண்டும். அதேவேளையில் நல்ல வேகத்துடன் கூடிய கட்டுக்கோப்பான பந்துவீச்சு இருந்தால் நிச்சயம் அவர் இந்திய அணிக்காக நீண்ட நாட்கள் விளையாடுவார் என முகமது ஷமி கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement