- Advertisement -
இந்திய கிரிக்கெட்

முகமது சமி சூதாட்டத்தில் ஈடுபட்டாரா – போலீஸ் விசாரணைக்கு உத்தரவு.

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவர் முகமது சமி. இவரது மனைவி ஹசின் ஜஹான். இருவருக்கும் திருமணமாகி ஒரு கைக்குழந்தையும் உள்ளது.இந்நிலையில் இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமிக்கு பல பெண்களுடன் தவறான தொடர்பு உள்ளதாக அவரது மனைவி ஹசின் ஜகான் சென்றவாரம் பரபரப்பு குற்றம்சாட்டியிருந்தார்.

இதுகுறித்து மேலும் தனது கணவர் முகமது சமி சமூகவலைத்தளங்களில் பல பெண்களுடன் அந்தரங்கமாகவும் சில பெண்களுடன் ஆபாசமாகவும் பேசிய ஸ்கிரீன்ஷாட்களை வெளியிட்டிருந்தார். மேலும் தனது கணவர் பேசிய சில பெண்களின் மொபைல் எண்ணையும் இணைத்திருந்தார்.பின்னர் இதுகுறித்து காவல்நிலையத்திலும் புகார் அளித்திருந்தார். தற்போதுஅந்த புகாரின் மீது போலீசார் விசாரித்து ஏற்கனவே முகமது சமி மீது 498A/323/307/376/506/328/34 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

- Advertisement -

அதுமட்டுமில்லாமல் தனது கணவர் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதாகவும்
தென்ஆப்பிரிக்க சுற்றுப்பயணம் முடிந்து இந்தியா வரும் முன் முகமது ஷமி துபாய் சென்று பாகிஸ்தான் பெண்ணான அலிஸ்பா என்பவரை சந்தித்து இங்கிலாந்து தொழில் அதிபரான முகமது பாய் என்பவர் கொடுத்து அனுப்பிய பணத்தை அலிஸ்பாவிடம் இருந்து முகமது ஷமி பெற்றுக்கொண்டார் என்றும் அந்த பரபரப்பு குற்றச்சாட்டை ஆடியோ ஆதாரங்களுடன் ஹசிர் ஜஹான் தெரிவித்து இருந்தார்.

ஹசிர் ஜஹானின் இந்த குற்றச்சாட்டுகளால் முகமது ஷமியுடனான ஒப்பந்தத்தை பிசிசிஐ உடனடியாக ரத்துசெய்துவிட்டு “குடும்ப பிரச்சனைகளை முடித்துவிட்டு அணிக்கு திரும்பும்படி” தெரிவித்திருந்தது.இந்நிலையில் முகமதுஷமி மனைவியுடன் சமரசமாக செல்ல முன்னெடுத்த அனைத்தும் தோல்வியிலேயே முடிந்தது. ஹசிர் ஜஹான் சமரசத்திற்கு முன்வரவில்லை.

தற்போது முகமது ஷமி மீது மனைவி அளித்திருந்த சூதாட்ட குற்றச்சாட்டை குறித்து விசாரிக்க இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவெடுத்துள்ளது.அதன்படி முகமது ஷமி மீதான புகாரை விசாரித்து ஒரு வாரத்தில் அறிக்கை சமர்பிக்குமாறு இந்திய கிரிக்கெட் வாரியத்தின் ஊழல் தடுப்பு பிரிவு தலைவர் நீரஜ்குமாருக்கு இந்திய கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாக கமிட்டி சேர்மன் வினோத்ராய் பரிந்துரைத்துள்ளார்.

- Advertisement -