இந்தியாவை ஜெயித்த பிறகு எனக்கு பாகிஸ்தானில் எப்படிப்பட்ட மரியாதை கிடைச்சது தெரியுமா? – ரிஸ்வான் பேட்டி

Rizwan
Advertisement

எப்பொழுதுமே இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு எதிரேயான கிரிக்கெட் போட்டி நடைபெற்றால் அது ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான் என்று கூறலாம். ஏனெனில் அந்த அளவிற்கு இவ்விரு அணிகளுக்கும் இடையேயான போட்டி விளையாட்டையும் தாண்டி, இரு நாட்டு ரசிகர்களுக்கும் இடையே ஒரு கௌரவமாக பார்க்கப்படுவதால் இந்த இந்தியா பாகிஸ்தான் போட்டி ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பினை பெற்று வருகிறது. அந்த வகையில் கடந்த 2021-ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை தொடருக்கு முன்பாக ஐ.சி.சி தொடர்களில் பாகிஸ்தான் அணி இந்திய அணியை வீழ்த்தியதே இல்லை என்ற நிலையே நீடித்தது.

Rizwan

ஆனால் 2021-ஆம் ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற டி20 உலக கோப்பை தொடரில் முதல் முறையாக பாகிஸ்தான் அணி இந்திய அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி முதல் முறையாக ஐசிசி தொடர்களில் இந்திய அணிக்கு எதிராக முதல் வெற்றியை பதிவு செய்திருந்தது.

- Advertisement -

இந்நிலையில் அந்த உலகக் கோப்பை தொடரின் வெற்றிக்கு பின்னர் பாகிஸ்தானில் தனக்கு எவ்வித மரியாதை கிடைத்தது என்பது குறித்து முகமது ரிஸ்வான் தற்போது பேட்டி ஒன்றினை அழித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் : இந்திய அணிக்கு எதிராக நாங்கள் பெற்ற அந்த வெற்றியை என்னால் மறக்கவே முடியாது. பாகிஸ்தான் அணியின் 30 ஆண்டுகால காத்திருப்பதற்குப் பிறகு கிடைத்த அந்த வெற்றி எங்களுக்கு மிகவும் பெரிசாக இருந்தது.

rizwan

அதோடு மட்டுமின்றி இந்திய அணிக்கு எதிராக நான் அதுவரை விளையாடாததால் அது எனக்கு ஒரு சாதாரண போட்டியாக மட்டுமே இருந்தது. ஆனால் நான் பாகிஸ்தானுக்கு திரும்பிய போது தான் அங்குள்ள மக்கள் அந்த போட்டி எவ்வளவு முக்கியம் என்பதை எனக்கு உணர்த்தினர். அந்த வகையில் பாகிஸ்தானில் நான் எந்த ஒரு கடைக்கு சென்றாலும் அவர்கள் என்னிடம் பணம் வாங்க மாட்டார்கள்.

- Advertisement -

“நீங்கள் போங்கள், “நீங்கள் போங்கள்”, உங்களிடம் பணம் வாங்க மாட்டோம். இங்கே உங்களுக்கு எல்லாம் இலவசம் என்றும் மக்கள் கூறினர். இப்படி ஒரு அன்பினை நான் அவர்களிடம் இருந்து எதிர்பார்க்கவே இல்லை. இந்திய அணியை வீழ்த்திய பிறகு அப்படி ஒரு அனுபவம் எனக்கு பாகிஸ்தானில் கிடைத்தது என முகமது ரிஸ்வான் கூறியிருந்தார்.

இதையும் படிங்க : விராட் கோலிக்கு அப்றம் அவர் தான் கிங், ஆனால் பெரிய பெயர் இல்லாததால் ட்ராப் பண்ணிட்டாங்க – முகமத் கைப் அதிருப்தி

கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற அந்த டி20 உலக கோப்பை தொடரில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 151 ரன்கள் மட்டுமே அடிக்க பின்னர் இரண்டாவதாக பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி ஒரு விக்கெட்டை கூட இழக்காமல் 152 ரன்கள் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை அபாரமாக வீழ்த்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement