விராட் கோலிக்கு அப்றம் அவர் தான் கிங், ஆனால் பெரிய பெயர் இல்லாததால் ட்ராப் பண்ணிட்டாங்க – முகமத் கைப் அதிருப்தி

Kaif
- Advertisement -

வங்கதேசத்துக்கு எதிராக விளையாடி வரும் முதல் டெஸ்டில் முதல் இன்னிங்ஸில் இந்தியா 350 ரன்கள் கடந்து அசத்தியது. ராகுல் 22, சுப்மன் கில் 20, விராட் கோலி 1 என டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ஆரம்பத்திலேயே சொற்ப ரன்களில் அவுட்டானதால் 48/3 என தடுமாறிய இந்தியாவை 3வது பேட்ஸ்மேனாக களமிறங்கிய செட்டேஸ்வர் புஜாரா மற்றொரு வீரர் ஷ்ரேயாஸ் ஐயருடன் இணைந்து 149 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து முழுமையாக மீட்டெடுத்தார். இருப்பினும் ஆரம்ப முதல் நங்கூரமாக நின்று அற்புதமாக பேட்டிங் செய்த அவர் சதத்தை நெருங்கிய போதிலும் துரதிஷ்டவசமாக 11 பவுண்டரியுடன் 90 (203) ரன்களில் ஆட்டமிழந்தார்.

Cheteswar Pujara

- Advertisement -

அதனால் கடைசியாக கடந்த 2019ஆம் ஆண்டு அடிலெய்டில் 193 ரன்களை விளாசி சதமடித்திருந்த அவர் 3 வருடங்களாக அடுத்த சதத்தை அடிக்க முடியாமல் தவிக்கும் சோகம் தொடர்கிறது. கடந்த 2010இல் அறிமுகமாகி டெஸ்ட் கிரிக்கெட்டுக்கே உரித்தான பொறுமையாக பேட்டிங் செய்யும் ஸ்டைலை கொண்ட புஜாரா பெரும்பாலான தருணங்களில் நங்கூரத்தை நின்று அதிக பந்துகளை எதிர்கொண்டு எதிரணி பவுலர்களை களைப்படையை வைத்து பெரிய ரன்களை குவித்து இந்தியாவை வெற்றி பெற வைக்கும் திறமை கொண்டவர்.

ட்ராப் பண்ணிட்டாங்க:

சொல்லப்போனால் ஜாம்பவான் ராகுல் டிராவிட் இல்லாத குறையை தீர்க்கும் அளவுக்கு பொறுமையின் சிகரமாய் பேட்டிங் செய்யும் தன்மை கொண்ட அவர் 2019 பார்டர் – கவாஸ்கர் கோப்பையில் 500க்கும் மேற்பட்ட ரன்களை குவித்து ஆஸ்திரேலிய மண்ணில் முதல் முறையாக இந்தியா டெஸ்ட் தொடரை வென்று சரித்திரம் படைக்க கருப்பு குதிரையாக செயல்பட்டார். ஆனால் அதன் பின் சரிவை சந்தித்து சதமடிக்க முடியாமல் தவித்த அவர் கடந்த பிப்ரவரி மாதம் அதிரடியாக நீக்கப்பட்டார். ஆனாலும் மனம் தளராமல் இங்கிலாந்தின் கவுண்டி சாம்பியன்ஷிப் தொடரில் சதங்களையும் இரட்டை சதங்களையும் விளாசிய அவர் கடந்த ஜூலை மாதம் இங்கிலாந்துக்கு எதிரான ரத்து செய்யப்பட்ட 5வது போட்டியில் மீண்டும் கம்பேக் கொடுத்து அசத்தி வருகிறார்.

pujara 1

குறிப்பாக இப்போட்டியில் 90 ரன்கள் எடுத்த அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த 8வது இந்திய பேட்ஸ்மேன் என்ற திலீப் வெங்ர்க்கார் சாதனையை தகர்த்து புதிய சாதனை படைத்தார். மேலும் தற்போது விளையாடி வரும் பேட்ஸ்மேன்களில் விராட் கோலிக்கு பின் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த இந்திய வீரராக சாதனை படைத்து 10 வருடங்களுக்கு மேலாக நிறைய வெற்றியகளில் பங்காற்றி வந்தாலும் அவருக்கு கிடைக்கும் வாய்ப்புகளும் மதிப்பும் மரியாதையும் புஜாராவுக்கு கிடைக்கவில்லை என்று முன்னாள் வீரர் முகமது கைஃப் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

- Advertisement -

இருப்பினும் தேர்வுக்குழு தாமாக முன்வந்து தேர்வு செய்யும் அளவுக்கு புஜாரா அசத்துவதாக பாராட்டியுள்ள அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு. “அணியிலிருந்து நீக்கப்பட்டால் எப்படி கம்பேக் கொடுக்க வேண்டும் என்பதில் இளம் வீரர்களுக்கு அவர் எடுத்துக்காட்டாக திகழ்கிறார். அவர் 6500+ ரன்கள் அடித்திருந்தும் நீக்கப்பட்டார். குறிப்பாக தற்போதைய அணியில் அதிக ரன்கள் எடுத்த வீரர்களின் பட்டியலில் அவரது பெயர் விராட் கோலிக்கு அடுத்தபடியாக இருந்தும் நீக்கப்பட்டார். இருப்பினும் மனம் தளராமல் கவுண்டி கிரிக்கெட் தொடரில் அபாரமாக செயல்பட்டதால் “எங்களை மன்னித்து விடுங்கள்” என்ற வகையில் மீண்டும் தாமாக தேர்வுக்குழு முன்வந்து தேர்வு செய்தது”

Kaif

“அவர் தேர்வு குழுவினரை தன் முன்னே மண்டியிட வைத்து விட்டார். அது தான் புஜாரா. கிரிக்கெட்டில் வயதுக்கு தடை இல்லை. ஏனெனில் அது நுணுக்கத்தை அடிப்படையான விளையாட்டு என்பதுடன் கால்பந்து போல போட்டி முழுவதும் நீங்கள் தொடர்ந்து ஓடிக் கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை. சொல்லப்போனால் வயது என்பது வரப்பிரசாதமாகும். அதில் அனுபவத்தை கற்றுக்கொண்டு முன்னேறலாம். புஜாரா, கோலி, ரோகித் ஆகியோர் அதற்கு எடுத்துக்காட்டாகும்”

இதையும் படிங்க:  IND vs BAN : பேட்டிங்கை விட பந்து வீச்சில் மாஸ் காட்டும் இந்தியா, மீண்டும் சவாலை கொடுக்கும் தனி ஒருவன் – 2வது நாள் ஸ்கோர் இதோ

“வரலாற்றில் அனைத்து ஜாம்பவான்களும் 34 – 35 வயதில் தான் சிறந்து விளங்கினார்கள். குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் நீங்கள் அதிக நேரம் விளையாடுவதற்கு அனுபவம் தேவை. அதிலும் குறிப்பாக சுழலுக்கு சாதகமான ஆடுகளங்களில் அனுபவம் அவசியமாகும். அதற்கு புஜாரா எடுத்துக்காட்டாக உள்ளார்” என்று கூறினார். முன்னதாக 2019க்குப்பின் சதமடிக்கவில்லை என்றாலும் 51 இன்னிங்ஸில் 14 அரை சதங்களை கடந்துள்ள புஜாரா காபா போன்ற முக்கியமான வெற்றிகளில் தனது அனுபவத்தால் பங்காற்றி இந்தியாவுக்கு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement