- Advertisement -
டி20

நீங்க அடிச்சது போதும் வெளியே வாங்க.. ஆஸியில் அவமான வரலாற்று சாதனை படைத்த பாக் வீரர் ரிஸ்வான்

ஆஸ்திரேலியாவில் பிக்பேஷ் 2025/26 டி20 கிரிக்கெட் நடைபெற்று வருகின்றது. அத்தொடரில் ஜனவரி 12ஆம் தேதி சிட்னி மைதானத்தில் நடைபெற்ற 33வது போட்டியில் மெல்போர்ன் – சிட்னி அணிகள் மோதின. அப்போட்டியில் டாஸ் வென்ற சிட்னி தண்டர்ஸ் அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

அதைத் தொடர்ந்து களமிறங்கிய மெல்போர்ன் அணிக்கு 62 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்திய ஜோஸ் பிரவுன் 35 (25) ரன்னில் அவுட்டானார். அடுத்து வந்த ஜேக் பிரேஷர் அதிரடியாக விளையாட முயற்சித்து 19 (9) ரன்கள் குவித்து பெவிலியன் திரும்பினார். அப்போது களமிறங்கிய பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வான் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

- Advertisement -

தடுமாறிய ரிஸ்வான்:

மறுபுறம் நிதானமாக விளையாடி வந்த மற்றொரு துவக்க வீரர் டிம் சைபர்ட் 29 (25) ரன்கள் குவித்த போது அவுட்டானார். அடுத்து வந்த காலேப் ஜூவல் 4 ரன்னில் அவுட்டான நிலையில் முகமது ரிஸ்வான் தொடர்ந்து நிதானமாகவே விளையாடினார். அடுத்ததாக வந்த ஹசன் கான் அதிரடியாக விளையாடிய போதிலும் மறுபுறம் நன்கு செட்டிலான முகமது ரிஸ்வான் அதிரடி காட்டத் தடுமாறினார்.

குறிப்பாக 18 ஓவரில் மெல்போர்ன் 154/4 என்ற நிலையில் தடுமாறிய போதும் ரிஸ்வான் அதிரடியாக விளையாட முயற்சி செய்யவில்லை. அதனால் பொறுமையிழந்த மெல்போன் அணியன் கேப்டன் வில் சதர்லேண்ட் “நீங்கள் விளையாடியது போதும் வெளியே வாருங்கள்” என்று ரிஸ்வானை அழைத்ததுடன் தாமே பேட்டிங் செய்ய களத்திற்கு சென்றார்.

- Advertisement -

ஆஸியில் அவமானம்:

அதனால் 23 பந்தில் 26 ரன்களை 113.04 ஸ்ட்ரைக் ரேட்டில் எடுத்த ரிஸ்வான் அவமானத்துடன் ரிட்டையர்டு அவுட்டாகி களத்திலிருந்து வெளியேறினார். இதன் வாயிலாக பிக்பேஷ் வரலாற்றில் நிக் மேடின்சனுக்கு பின் ரிட்டையர்ட் அவுட்டான 2வது வீரர் என்ற மோசமான சாதனையை ரிஸ்வான் படைத்துள்ளார்.

அடுத்து வந்த கேப்டன் சதர்லேண்ட் 1 ரன்னில் ரன் அவுட்டானார். இறுதியில் ஹசன் கான் 46 (31), சாம் எலைட் 4 (2) ரன்களை எடுத்த உதவியுடன் 20 ஓவரில் மெல்போர்ன் 170/8 ரன்கள் எடுத்தது. சிட்னிக்கு அதிகபட்சமாக ரியான் ஹாட்லி, வெஸ் அகர், டேவிட் வில்லி தலா 2 விக்கெட்டுகள் சாய்த்தனர். அடுத்ததாக மழை வந்ததால் சிட்னி வெற்றி பெற 16 ஓவரில் 140 தேவை என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

இதையும் படிங்க: இந்தியாவின் தேசிய மொழி ஹிந்தியை நம்புவதே நல்லது.. சுந்தர் – ராகுல் பற்றிய சஞ்சய் பங்கர் கருத்தால் சர்ச்சை

அதை துரத்திய சிட்னிக்கு கேப்டன் சாம் பில்லிங்ஸ் 33, நிக் மெடின்சன் 30*, கிறிஸ் க்ரீன் 32*, சாம் கோன்ஸ்டஸ் 18, கேமரூன் பேன்கிராப்ட் 17 ரன்கள் எடுத்து 15.2 ஓவரில் வெற்றி பெற வைத்தார்கள். மெல்போர்னுக்கு குரிந்தர் சந்து அதிகபட்சமாக 4 விக்கெட்டுகள் எடுத்தும் தோல்வியைத் தவிர்க்க முடியவில்லை. மொத்தத்தில் மெல்போர்ன் தோல்வியைச் சந்திக்க ரிஸ்வான் வெளிப்படுத்திய தடவலான ஆட்டமும் ஒரு காரணமாக அமைந்தது.

- Advertisement -