இந்தியாவின் தேசிய மொழி ஹிந்தியை நம்புவதே நல்லது.. சுந்தர் – ராகுல் பற்றிய சஞ்சய் பங்கர் கருத்தால் சர்ச்சை

Sanjay Bangar
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்துக்கு எதிராக 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகின்றது. அந்தத் தொடரில் முதல் போட்டியில் நியூசிலாந்தை 4 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த இந்தியா 1 – 0* என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. நேற்று வதோதராவில் நடைபெற்ற அப்போட்டியில் முதலில் விளையாடிய நியூஸிலாந்து 301 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது.

அதைத் துரத்திய இந்திய அணி 49 ஓவரில் 306/6 ரன்களை குவித்து வெற்றி பெற்றது. இந்திய அணிக்கு பேட்டிங் துறையில் ஸ்ரேயாஸ் ஐயர் 49, சுப்மன் கில் 56, விராட் கோலி 93 ரன்களை குவித்து வெற்றியில் முக்கிய பங்காற்றினர். பவுலிங் துறையில் பிரசித் கிருஷ்ணா, முகமது சிராஜ், ஹர்ஷித் ராணா தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர்.

- Advertisement -

நேரலையில் மொழி பிரச்சனை:

முன்னதாக அந்தப் போட்டியில் தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் 13வது ஓவரை வீசினார். அப்போது விக்கெட் கீப்பர் கே.எல் ராகுல் அவருக்கு இந்தியில் சில வழிகாட்டுதல்களை கொடுத்ததாகத் தெரிகிறது. ஆனால் தமிழை தாய்மொழியாகக் கொண்ட வாசிங்டன் சுந்தருக்கு அது தெளிவாக புரியவில்லை என்று தெரிகிறது. எனவே சுந்தருக்கு இந்திக்கு பதிலாக ராகுல் தமிழில் வழிகாட்டுதல் கொடுக்க வேண்டும் என்று நேரலையில் முன்னாள் வீரர் வருண் ஆரோன் வர்ணித்தார்.

அதைக் கேட்ட மற்றொரு முன்னாள் வீரர் சஞ்சய் பங்கர் நான் தேசிய மொழியான இந்தியை மட்டுமே நம்புகிறேன் என்று பதிலளித்தது சர்ச்சையை உண்டாக்கியது. ஏனெனில் பல்வேறு மொழிகள் பேசக்கூடிய இந்தியாவுக்கு எந்த மொழியும் அதிகாரப்பூர்வ மொழியாக அறிவிக்கப்படவில்லை. அந்த நிலையில் சஞ்சய் பங்கர் சொன்ன அந்த சர்ச்சை கருத்தை தென்னிந்தியாவைச் சேர்ந்த ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.

- Advertisement -

ரசிகர்கள் விமர்சனம்:

அந்த நேரலை உரையாடல்கள் பின்வருமாறு.
ஆரோன்: கே.எல் ராகுல் தமிழில் வாஷிங்டன் சுந்தரிடம் பேச வேண்டும். ஏனெனில் அவரிடம் மெதுவாக பந்து வீசுமாறு ராகுல் சொல்கிறார். இருப்பினும் அது சுந்தருக்கு புரியாதது போல் தெரிகிறது. எனவே வாஷிங்டன் சுந்தர் தமிழில் சொன்னால் நன்றாக புரிந்து கொள்வார் என்று நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களா சஞ்சய் பாய்?
பங்கர்: நான் என்னுடைய தேசிய மொழியை (ஹிந்தி) நம்புகிறேன்.

இதையும் படிங்க: வேற லெவல் கோலி எங்க பிளானோட சேத்து அதையும் உடைச்சுட்டாரு.. ஆட்டத்தை ரசித்து பாத்தேன்.. ஜெமிசன் பேட்டி

ஆரோன்: அப்படியானால் நான் பிராந்திய மொழிகளை மட்டுமே நம்புகிறேன் என்று சொன்னேனா?
பங்கர்: “பாருங்கள் சுந்தர் முந்தைய பந்தை 92 கி.மீ வேகத்தில் பந்து வீசினார். எனவே மொழியை பற்றி நாம் இங்கே அதிகம் பேசுவது முக்கியம் என்று நான் நினைக்கவில்லை” என்று சொல்லி அந்த உரையாடலை மேற்கொண்டு சர்ச்சையாகாமல் முடித்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement