ஐசிசி பேட்டிங் தரவரிசையில் தனது முதல் இடத்துக்கு போட்டிக்கு வந்துள்ள – சூரியகுமார் பற்றி ரிஸ்வான் பேசியது இதோ

Suryakumar YAdav Mohammed Rizwan
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் வரலாற்றில் 8வது முறையாக ஐசிசி டி20 உலகக் கோப்பை 2022 தொடரை வெல்லும் முனைப்பில் உலகின் அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன. மொத்தம் 16 அணிகள் கோப்பைக்காக பலப்பரீட்சை நடத்தும் இந்த தொடரில் அக்டோபர் 23ஆம் தேதியன்று புகழ்பெற்ற மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் பரம எதிரிகளான இந்தியாவும் பாகிஸ்தானும் மோதும் போட்டி உலக அளவில் எதிர்பார்ப்பு நிலவுகிறது. அதில் வெற்றி வாகை சூடி நாட்டுக்கு பெருமை சேர்க்கப்பதற்கு அவ்விரு அணிகளிலும் தற்சமயத்தில் உச்சகட்ட பார்மில் இருக்கும் முகமது ரிஸ்மான் மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோரது ஆட்டம் அப்போட்டியின் வெற்றியை தீர்மானிப்பதில் முக்கிய பங்காற்றும் என்றே கூறலாம்.

Rizwan

- Advertisement -

ஏனெனில் சமீபத்திய ஆசிய கோப்பைக்கு முன்பு நம்பர் ஒன் டி20 பேட்ஸ்மேனாக இருந்த பாபர் அசாம் பார்மை இழந்து சுமாராக செயல்படுவதால் அந்த இடத்தை இழந்தார். மறுபுறம் கடந்த டி20 உலக கோப்பையில் இந்தியாவை தோற்கடிப்பதற்கு முக்கிய காரணமாக அமைந்த முகமது ரிஸ்மான் கடந்த ஒரு வருடமாகவே தொடர்ச்சியாக நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தியதால் தற்சமயத்தில் உலகின் நம்பர் ஒன் டி20 பேட்ஸ்மேனாக திகழ்கிறார். மேலும் பாபர் அசாம் பார்மில் இல்லாத இந்த சமயத்தில் பலவீனமான மிடில் ஆர்டரை கொண்டிருக்கும் பாகிஸ்தான் உலகக்கோப்பையில் வெற்றி பெறுவதற்கு இவரது பங்களிப்பு இன்றியமையாததாக பார்க்கப்படுகிறது.

போட்டிக்கு சூரியகுமார்:
மறுபுறம் கேஎல் ராகுல், கேப்டன் ரோகித் சர்மா ஆகியோர் தடுமாறிக் கொண்டிருக்கும் நிலையில் என்னதான் விராட் கோலி ஃபார்முக்கு திரும்பினாலும் 30 வயதில் அறிமுகமாகி மைதானத்தின் நாலாபுறமும் சுழன்றடிக்கும் சூரியகுமார் யாதவ் அறிமுகமான கடந்த ஒன்றரை வருடங்களில் இதர இந்திய வீரர்களைக் காட்டிலும் அதிகபட்சமாக 6 ஆட்ட நாயகன் விருதுகளை வென்று இந்தியாவின் லேட்டஸ்ட் மேட்ச் வின்னராக அவதரித்துள்ளார். அதிலும் பெரும்பாலான போட்டிகளில் களமிறங்கும் முதல் பந்திலிருந்தே வெளுத்து வாங்கும் அவர் கிடுகிடுவென வெறும் 32 போட்டிகளிலேயே உலகின் நம்பர் 2 பேட்ஸ்மேனாக முன்னேறியுள்ளார்.

Suryakumar-Yadav

எனவே மற்ற இந்திய பேட்ஸ்மேன்களை விட தற்சமயத்தில் அட்டகாசமான பார்மில் இருக்கும் இவரது ஆட்டம் இந்தியாவின் வெற்றிக்கு அவசியமாகிறது. முன்னதாக கடந்த ஒரு மாதம் முன்பாகவே தரவரிசையில் நம்பர் 2 இடத்தை எட்டிய சூரியகுமார் சமீபத்திய தென்ஆப்பிரிக்க தொடரின் 2வது போட்டியில் 61 (22) ரன்களைக் குவித்த போது சத்தமின்றி நம்பர் ஒன் இடத்தை எட்டினார். ஆனாலும் 3வது போட்டியில் 2 ரன்னில் அவுட்டானதால் மீண்டும் 2வது இடத்திற்கு வந்து விட்டார். அப்படி தனக்கு போட்டியாக வந்துள்ள சூரியகுமார் யாதவ் நல்ல வீரர் என்று பாராட்டும் முகமது ரிஸ்வான் டாப் ஆர்டரில் விளையாடும் தமக்கும் மிடில் ஆர்டரில் விளையாடும் அவருக்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளதாக கூறியுள்ளார்.

- Advertisement -

இது பற்றிய சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “சூரியகுமார் யாதவ் நல்ல வீரர். அவர் பேட்டிங் செய்யும் விதம் எனக்கு மிகவும் பிடிக்கும். ஆனாலும் நிதர்சனத்தை நீங்கள் பார்க்கும் போது வித்தியாசங்கள் தெரியும். ஏனெனில் டாப் ஆர்டரில் பேட்டிங் செய்பவருக்கும் மிடில் ஆர்டரில் பேட்டிங் செய்பவருக்கும் முற்றிலும் வித்தியாசம் உள்ளது. மேலும் நான் நம்பர் ஒன் இடத்தை அடைவேன் என்று எப்போதும் நினைத்ததில்லை. நான் எப்போதும் அணிக்கு தேவையானவற்றை மட்டுமே செய்கிறேன்”

Rizwan-2

“மேலும் இந்த நம்பர் ஒன் இடம், ஆட்டநாயகன் விருதுகள் போன்றவை உங்களை எதிர்மறையான இடத்திற்கு எடுத்துச் செல்லும் என்பதால் அதை பற்றி நான் எப்போதும் சிந்திப்பதில்லை” என்று கூறினார். பவர் பிளே ஓவர்களில் 2 பீல்டர்களை மட்டும் வெளியில் வைத்து ரன்களை குவிக்கும் டாப் ஆர்டரில் விளையாடும் ரிஸ்வானை விட 4 – 5 பீல்டர்கள் வெளியில் நிற்கும் மிடில் ஆர்டரில் களமிறங்கி ரன்களை குவிக்கும் சூரியகுமார் இங்கு உண்மையாகவே சற்று அதிகப்படியான திறமை கொண்டவர் எனலாம்.

மேலும் சமீபத்தில் ஆசிய கோப்பை பைனல் உட்பட ஓப்பனிங்கில் களமிறங்கினாலும் முஹம்மது ரிஸ்வான் எப்போதும் குறைவான ஸ்டிரைக் ரேட்டில் விளையாடுவதை வழக்கமாக வைத்துள்ளார். மறுபுறம் மிடில் ஆர்டரில் அழுத்தமான சூழ்நிலையில் களமிறங்கினாலும் பெரும்பாலும் 150 – 180 ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடும் சூர்யகுமார் யாதவ் நம்பர் 1 இடத்தில் ஜொலிப்பதற்கு தகுதியானவர் எனலாம். அதை அவர் விரைவில் தொட்டு விடுவார் என்பதில் சந்தேகமுமில்லை.

Advertisement