இனி அனுபவ வீரர்களே வேணாம்.. புதிய கேப்டனை அறிவித்து அதிரடி காட்டிய – பாகிஸ்தான் வாரியம்

Rizwan
- Advertisement -

பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் கிரிக்கெட் அணியானது இந்தியாவில் நடைபெற்று முடிந்த 50 ஓவர் உலகக் கோப்பை தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி படுதோல்வி அடைந்தது. இதன் காரணமாக பாகிஸ்தான் அணியின் கேப்டன் பதவியில் இருந்து பாபர் அசாம் அந்த தொடர் முடிந்த கையோடு ராஜினாமா செய்திருந்தார். அதன் பிறகு பாகிஸ்தான் டி20 அணியின் கேப்டனா ஷாஹீன் அப்ரிடி கொண்டுவரப்பட்டார்.

பாகிஸ்தான் அணிக்கு புதிய கேப்டன் :

ஆனால் அவரது தலைமையின் கீழ் மீண்டும் பாகிஸ்தான அணி தொடர்ச்சியான மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்தவே நிர்வாகிகள் மற்றும் ரசிகர்கள் பாகிஸ்தான் அணியின் மீது அதிருப்தி அடைந்தனர்.

- Advertisement -

மேலும் டி20 உலக கோப்பை தொடருக்கு முன்னதாகவே கேப்டன்சி அனுபவம் இல்லாத ஷாஹீன் அப்ரிடி நீக்கப்பட்டு மீண்டும் பாபர் அசாம் பாகிஸ்தான் டி20 அணியின் கேப்டனாக கொண்டுவரப்பட்டார். ஆனாலும் நடைபெற்று முடிந்த டி20 உலக கோப்பை தொடரின் லீக் சுற்று போட்டிகளிலேயே பாகிஸ்தான் அணி படுதோல்வியை சந்தித்து.

அதன் காரணமாக ஆரம்ப கட்ட சுற்றோடு அந்த தொடரில் இருந்து பாகிஸ்தான் அணி வெளியேறியது. அதன் காரணமாக மீண்டும் பாபர் அசாம் கேப்டன்சியை ராஜினாமா செய்வதாக அறிவித்திருந்தார். இந்நிலையில் தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரில் இருந்தும் நீக்கப்பட்டார்.

- Advertisement -

இந்நிலையில் ஆஸ்திரேலியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடவுள்ள பாகிஸ்தான் அணிக்கு புதிய கேப்டனை முடிவு செய்ய ஆலோசனை நிகழ்த்தப்பட்டு அந்த அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான முகமது ரிஸ்வானை ஒருநாள் மற்றும் டி20 அணிகளின் கேப்டனாக அறிவித்துள்ளது.

இதையும் படிங்க : அவங்க 2 பேரால் மட்டும் எல்லா மேட்சையும் ஜெயிச்சி குடுக்க முடியாது – ரோஹித் சர்மா ஆதங்கம்

இனி அனுபவ வீரர்களான யாரையும் நம்பி கேப்டன்சி வழங்குவதை விட தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திவரும் ரிஸ்வானுக்கு அந்த வாய்ப்பு வழங்கப்பட்டது. அதேபோன்று அவருக்கு உறுதுணையாக இளம் வீரரான ஆஹா சல்மானுக்கு துணைக்கேப்டன் பதவி வழங்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் அணிக்காக இதுவரை 2 டெஸ்ட் போட்டியில் மட்டுமே கேப்டன்சி செய்துள்ள ரிஸ்வானை நம்பி அந்த அணியின் நிர்வாகம் பெரிய பொறுப்பினை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement