போட்டிக்கு முன்பாகவே பாகிஸ்தான் கொடுத்த அதிர்ச்சி வைத்தியத்தை நாம கொடுக்கனும் – ரோஹித்துக்கு முன்னாள் வீரர் சூப்பர் கோரிக்கை

Rohith
- Advertisement -

புகழ்பெற்ற ஆசிய கோப்பை வரும் ஆகஸ்ட் 27 முதல் ஐக்கிய அரபு நாடுகளில் நடைபெறுகிறது. வரலாற்றில் 15 முறையாக நடைபெறும் இந்த தொடரின் கோப்பையை வெல்வதற்கு ஆசியாவின் டாப் 6 அணிகள் மோத உள்ளன. வரும் அக்டோபரில் நடைபெறும் டி20 உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் 20 ஓவர் தொடராக நடைபெறும் இந்தத் தொடருக்காக அறிவிக்கப்பட்டுள்ள ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா தனது முதல் போட்டியில் வரும் ஆகஸ்ட் 28ஆம் தேதியன்று பாகிஸ்தானை துபாயில் எதிர்கொள்கிறது. கடைசியாக இதே மைதானத்தில் இவ்விரு அணிகளும் மோதிய போது பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தானிடம் விராட் கோலி தலைமையிலான இந்தியா வரலாற்றிலேயே முதல் முறையாக உலக கோப்பையில் தோற்றது.

INDvsPAK

- Advertisement -

அதனால் லீக் சுற்றுடன் வெளியேறி அவமானத்தை சந்தித்த இந்தியா இம்முறை 5 ஐபிஎல் கோப்பையை வென்ற ரோகித் சர்மா தலைமையில் பதிலடி கொடுக்குமா என்ற எதிர்பார்ப்பு இந்திய ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது. மேலும் வரலாற்றில் 7 சாம்பியன் பட்டங்களையும் கடைசியாக நடந்த ஆசிய கோப்பையை வென்று நடப்பு சாம்பியனாக களமிறங்கும் இந்தியா பாகிஸ்தான் உட்பட அனைத்து அணிகளையும் தோற்கடித்து கோப்பையை மீண்டும் கைப்பற்றும் வலுவான அணியாக திகழ்கிறது. இருப்பினும் கடந்த முறை தோல்விக்கு முக்கிய பங்காற்றிய பாகிஸ்தானின் சாஹீன் அப்ரிடி இம்முறை காயத்தால் வெளியேறியுள்ளதால் இந்தியா தப்பித்து விட்டதாக அந்நாட்டு முன்னாள் வீரர்களும் ரசிகர்களும் வம்பிழுத்து வருகிறார்கள்.

மிரட்டிய பாகிஸ்தான்:
அதனால் கோபமடைந்துள்ள இந்திய ரசிகர்கள் களத்தில் சிறப்பாக செயல்பட்டு ரோகித் சர்மா தலைமையில் பழி தீர்க்குமா என்று ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். முன்னதாக கடந்த வருடம் துபாயில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் ஆரம்பம் முதலே பாகிஸ்தான் இந்தியாவை அடித்து நொறுக்கும் வகையில் செயல்பட்டது என்று கூறலாம். ஏனெனில் போட்டி துவங்குவதற்கு ஒருநாள் முன்பாகவே விளையாடு 11 பேர் கொண்ட அணியை தைரியமாக அறிவித்த அந்த அணி களத்திலும் ரோகித் சர்மா, ராகுல் போன்றவர்களை திட்டம் போட்டு கச்சிதமாக சாய்த்து சரித்திர வெற்றி கண்டது.

INDvsPAK

மறுபுறம் வழக்கம்போல டாஸ் வீசுவதற்கு முன்பாக 11 பேர் இந்திய அணியை அறிவித்த அப்போதைய கேப்டன் விராட் கோலி அரை சதமடித்து போராடினாலும் எஞ்சிய பேட்ஸ்மேன்கள் மற்றும் பவுலர்களின் சொதப்பலால் படுதோல்வியை சந்திக்க நேரிட்டது. அப்படி கடந்த வருடம் போட்டிக்கு முன்பாகவே அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த பாகிஸ்தானுக்கு இம்முறை அதை வைத்தியத்தை இந்தியா கொடுக்க வேண்டும் என்று முன்னாள் இந்திய வீரர் முகமது கைஃப் கேட்டுக்கொண்டுள்ளார்.

- Advertisement -

சூப்பர் கோரிக்கை:
பாகிஸ்தானுக்கு எதிரான போட்டி துவங்குவதற்கு இன்னும் ஒருசில நாட்களே எஞ்சியுள்ள நிலையில் முன்கூட்டியே 11 பேர் கொண்ட இந்திய அணியை அறிவித்து தைரியத்தை காட்ட வேண்டும் என்று கேப்டன் ரோகித் சர்மாவுக்கு அவர் வெளிப்படையாக கோரிக்கை வைத்துள்ளார். இது பற்றி சோனி ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “இது சாதுரியமான முடிவு என்பதை மட்டும் பொருத்தல்ல. இதுதான் எங்களுடைய 11 பேர் அணி என்று ரோகித் சர்மா ஸ்டேட்மெண்ட் கொடுக்க வேண்டுமென்று நான் கேட்டுக் கொள்கிறேன்”

Kaif-and-Rohit-Dravid

“அனைத்து வீரர்களுக்கும் எனது வாழ்த்துக்கள். இந்த ஆசிய கோப்பையை வெல்லுங்கள். நாம் இந்தப் பெரிய தொடரில் வெற்றி பெற்று பாகிஸ்தானை தோற்கடிக்க வேண்டும். அவர்களிடம் நாம் டி20 உலகக்கோப்பையில் தோற்றுள்ளோம். எனவே நாம் ஆரம்பத்திலேயே திட்டத்துடன் செல்ல வேண்டும். ஒருசில நாட்களுக்கு முன்பாகவே இந்தியா தங்களுடைய 11 பேர் அணியை அறிவித்து பெரிய முடிவை எடுக்க வேண்டும். ரோகித் சர்மா தைரியமாக முன்வந்து இதுதான் எங்களுடைய 11 பேர் அணி என்று அறிவிக்க வேண்டும். ஏனெனில் கடந்த வருடம் ஒருநாள் முன்பாக பாகிஸ்தான் தங்களுடைய அணியை அறிவித்தது. ஆனால் நாம் வழக்கம்போல மைதான கால சூழ்நிலைகளை பார்த்துவிட்டு டாஸ் வீசிய பின்பாக அறிவித்தோம்”

“அவ்வாறு செய்வது எதிரணிக்கு நாங்கள் முழுமையாக தயார் என்ற மிகப்பெரிய எச்சரிக்கையை ஆரம்பத்திலேயே விடுக்கும். மேலும் நம்முடைய அணியில் கடைசி நேரத்தில் முடிவெடுக்கும் அளவுக்கு எந்த குளறுபடிகளும் கிடையாது. நமக்கு தேவை இந்த பெரிய போட்டியை வெல்ல வேண்டும். எனவே அதில் விளையாடும் வீரர்கள் நாம் 11 பேர் அணியில் விளையாடுவோமா என்ற குழப்பத்தில் இல்லாமல் தெளிவுடன் விளையாட வழிவகுக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டுள்ளார். இவர் சொல்வதும் ஒரு வகையில் நல்ல ஆலோசனையாக இருப்பதால் இதற்கு ரோகித் சர்மா செவி சாய்ப்பாரா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

Advertisement