யுஸ்வேந்திர சாஹலுக்கு எதிரா இப்படி செய்தது தவறு.. ஷ்ரேயாஸ் ஐயரின் கேப்டன்சியை விமர்சித்த – முகமது கைப்

Mohammed Kaif
- Advertisement -

டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு எதிராக நேற்று தரம்சாலா நகரில் நடைபெற்ற நடப்பு 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 55-வது லீக் போட்டியில் விளையாடியிருந்த ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் அணி சொந்த மண்ணில் தோல்வியை சந்தித்தது. இந்த தொடரின் ஆரம்ப கட்டத்தில் தொடர்ச்சியாக 6 வெற்றிகளை பெற்ற அந்த அணி தற்போது தொடர்ச்சியாக நான்கு தோல்விகளை சந்தித்துள்ளது. இதன் காரணமாக தற்போதைய நிலையில் 11 ஆட்டங்களில் விளையாடி 13 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் நான்காம் இடத்தில் உள்ளது.

ஷ்ரேயாஸ் ஐயரின் கேப்டன்சியை விமர்சித்த : முகமது கைப்

இந்த போட்டியில் முதலில் விளையாடி பஞ்சாப் கிங்ஸ் அணியானது 210 ரன்களை குவிக்க அடுத்ததாக இரண்டாவதாக பந்து வீசுகையில் டெல்லி அணியை தடுத்து நிறுத்த முடியாமல் தோல்வியை சந்தித்தது. இந்த போட்டியில் பஞ்சாப் அணி சார்பாக வேகப்பந்து வீச்சாளர்கள் மட்டுமே 19 ஓவர்களை வீசியிருந்தனர்.

- Advertisement -

இந்த போட்டியில் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான யுஸ்வேந்திர சாஹலுக்கு கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் ஒருவர் கூட பந்துவீச வாய்ப்பு வழங்கவில்லை. இந்த விவகாரம் குறித்த தனது கருத்தினை வெளிப்படுத்தியுள்ள இந்திய அணியின் முன்னாள் வீரரான முகம்மது கைப் கூறுகையில் : நான் நேரடியாக ஒரு கேள்வி கேட்கிறேன்.

நீங்கள் 5 பவுலர்களை மட்டுமே பயன்படுத்துவதாக முடிவு செய்தீர்கள். இதில் கடைசி கட்டங்களில் இந்த தொடரில் விளையாடாத யஷ் தாகூர் பந்து வீசினார். அவருடன் இணைந்து பகுதிநேர பந்துவீச்சாளரான ஸ்டாய்னிஸ் இறுதி ஓவர்களை வீசினார். ஆனால் முக்கிய பந்து வீச்சாளர்கள் யாரும் இறுதி கட்டத்திற்கு வரவில்லை. அதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. அதேபோன்று ஐபிஎல் போட்டிகளில் 200-க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை கைப்பற்றிய சாஹலுக்கு ஒரு ஓவர் கூட பந்துவீச நீங்கள் வாய்ப்பு வழங்கவில்லை.

- Advertisement -

இதையும் படிங்க : 10 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று நடைபெற்ற போட்டியில் அரங்கேறிய வினோத நிகழ்வு – விவரம் இதோ

210 ரன்களுக்கு மேல் அடித்தும், பவர்பிளே ஓவர்களுக்குள் 3 விக்கெட்டை எடுத்தும் நீங்கள் இந்த போட்டியில் தோல்வி அடைந்ததற்கு காரணம் உங்களது மோசமான கேப்டன்சி தான். அதேபோன்று நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான யுஸ்வேந்திர சாஹலுக்கு ஒரு ஓவர் கூட பந்துவீச வாய்ப்பு வழங்காதது நீங்கள் கேப்டன்சியில் செய்த மிகப்பெரிய தவறு என்றும் ஷ்ரேயாஸ் ஐயரை விமர்சித்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement