10 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று நடைபெற்ற போட்டியில் அரங்கேறிய வினோத நிகழ்வு – விவரம் இதோ

DC
- Advertisement -

தரம்சாலா நகரில் நேற்று நடப்பு 2026 ஆம் ஆண்டிற்கான ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 55-வது லீக் போட்டியானது நடைபெற்றது. இந்த போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகள் மோதிய வேளையில் இந்த ஆட்டத்தில் மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்திய அக்சர் பட்டேல் தலைமையிலான டெல்லி அணியானது 3 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தி அசத்தியது. அந்த வகையில் நேற்று நடைபெற்ற இந்தப் போட்டியின் போது டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

10 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த அரிதான நிகழ்வு :

இந்நிலையில் நேற்றைய இந்த போட்டியின் போது கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத ஒரு அரிதான நிகழ்வு இந்த போட்டியின் முதல் பாதியில் அரங்கேறியுள்ளது. அதுகுறித்த தகவல் வெளியாகி அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்து வருகிறது. அதாவது நேற்றைய போட்டியின் போது பஞ்சாப் அணிக்கு எதிராக பந்துவீசிய டெல்லி கேபிட்டல்ஸ் அணியானது:

- Advertisement -

ஒரு ஓவரை கூட சுழற்பந்து வீச்சாளரை வைத்து வீசாமல் 20 ஓவர்களையும் வேகப்பந்து வீச்சாளர்களை வைத்தே வீசியது. டெல்லி அணி சார்பாக மிட்சம் ஸ்டார்க், லுங்கி இங்கிடி, ஆகிப் நபி, முகேஷ் குமார், மாதவ் திவாரி ஆகிய ஐந்து வேகப்பந்து வீச்சாளர்கள் மட்டுமே தலா 4 ஓவர்கள் வீசினர். அக்சர் பட்டேல் இந்த போட்டியில் பந்து வீசவில்லை.

இதன் மூலம் கடந்த 2016-ஆம் ஆண்டிற்கு பிறகு 10 ஆண்டுகள் கழித்து இப்படி ஒரு அணி மொத்தமாக 20 ஓவர்களையும் வேகப்பந்து வீச்சாளர்களை வைத்து வீசியது இதுவே முதல் முறையாக மாறியுள்ளது. கடந்த 2016 ஆம் ஆண்டு பெங்களூரு அணிக்கெதிரான போட்டியில் ஹைதராபாத் அணி இப்படி ஒரு சாதனையை செய்து இருந்தது.

- Advertisement -

இதையும் படிங்க : பஞ்சாப் கிங்ஸ் அணிக்கெதிரான இந்த அருமையான வெற்றிக்கு இவர்களே காரணம் – அக்சர் படேல் பாராட்டு

இவ்வேளையில் தற்போது டெல்லி அணி அதனை நிகழ்த்தியுள்ளது. அதேபோன்று ஒட்டுமொத்தமாக ஐபிஎல் போட்டிகளில் இதுபோன்று வேகப்பந்து வீச்சாளர்கள் மட்டுமே 20 ஓவர்களை வீசுவது 13வது முறையாக அரங்கேறியுள்ளது. அதோடு போட்டியின் இரண்டாம் பாதியில் பந்துவீசிய பஞ்சாப் அணியும் தாங்கள் வீசிய 19 ஓவர்களையும் வேகப்பந்து வீச்சாளர்களை வைத்தே வீசியது குறிப்பிடத்தக்கது.

Advertisement