- Advertisement -
இந்திய கிரிக்கெட்

நிச்சயமா சுப்மன் கில்லுக்கு இந்த விடயம் கில்டியா இருக்கும்.. ரோஹித் எந்த தவறும் செய்யல – முகமது கைப் கருத்து

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்ட போது கேப்டன் ரோகித் சர்மா நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக புதிய ஒருநாள் போட்டிகளுக்கான கேப்டனாக இளம் வீரர் சுப்மன் கில் அறிவிக்கப்பட்டார். ஏற்கனவே இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக இருக்கும் அவர் இந்திய அணியின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு ஒருநாள் போட்டிகளுக்குமான கேப்டனாகவும் அறிவிக்கப்பட்டார்.

சுப்மன் கில் அவரிடம் இருந்து நிறைய கத்துக்கனும் : முகமது கைப்

அதேவேளையில் கடந்த ஆண்டு டி20 தொடர் மற்றும் இந்த ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி என அடுத்தடுத்த ஐசிசி கோப்பைகளை கைப்பற்றி தந்த ரோகித் சர்மாவை கேப்டன் பதிவிலிருந்து நீக்கியது ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை அளித்திருந்தது. மேலும் ரோஹித் சர்மாவுக்கு முறையான மரியாதையை நிர்வாகம் வழங்கவில்லை என்றும் ரசிகர்கள் கொந்தளித்திருந்தனர்.

- Advertisement -

இருந்தாலும் தற்போது ரோகித் சர்மா ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாட இருப்பதால் எதிர்வரும் 2027 உலக கோப்பையை கருத்தில் கொண்டும், இந்திய அணியின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டும் சுப்மன் கில் கேப்டனாக நியமிக்கப்பட்டார். வெகுவிரைவில் அவர் மூன்று வகையான இந்திய அணிக்கும் கேப்டனாக மாறுவார் என்றும் பேசப்பட்டு வருகிறது.

இந்நிலையில் ரோகித் சர்மா அணியில் இருக்கும் போதே சுப்மன் கில்லுக்கு கேப்டன் பதவி வழங்கப்பட்டது அவருக்கு நிச்சயம் கில்டியாக இருக்கும் என இந்திய அணியின் முன்னாள் வீரரான முகமது கைஃப் சில கருத்துக்களை தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் :

- Advertisement -

இந்திய அணியின் புதிய ஒருநாள் கேப்டனாக இன்னும் திறமையாக செயல்பட சுப்மன் கில்லுக்கு நாட்கள் தேவைப்படும். ரோகித் சர்மா ஒரு கேப்டனாக எப்போதோ தன்னை முழுவதுமாக நிரூபித்து விட்டார். அவரின் தலைமையின் கீழ் விளையாடி வந்த கில் தற்போது அவருக்கே கேப்டனாக மாறியுள்ளதால் நிச்சயம் ஒரு கில்ட்டி அவரிடம் இருக்கும்.

இதையும் படிங்க : சங்ககாரா வாழ்நாள் சாதனையை உடைத்த கிங் கோலி.. சச்சினை முந்தி சேஸ் மாஸ்டராக 2 உலக சாதனை

அதோடு ரோகித் சர்மா எந்த தவறும் செய்யவில்லை. ஆனாலும் அணியின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அவரை பதவி நீக்கம் செய்திருக்கிறார்கள். இந்த நேரத்தில் சுப்மன் கில் அவருடன் இணைந்து விளையாடும் போது அவரிடம் இருந்து நிறைய கற்றுக்கொள்ள வேண்டும் என முகமது கைப் கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -