இவரை ஏன் அணியில் சேக்காமல் இருந்தீங்க. சி.எஸ்.கே அணியை தேர்வினை குற்றம் சாட்டிய – முகமது கைப்

Kaif
- Advertisement -

நடப்புச் சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் 15-வது ஐபிஎல் தொடரில் சுமாரான ஆட்டத்தையே வெளிப்படுத்தி உள்ளது என்று கூறலாம். கடந்த மார்ச் மாதம் 26-ஆம் தேதி துவங்கிய இந்த தொடருக்கு ஒரு சில தினங்களுக்கு முன்னதாக தோனி கேப்டன் பதவியில் இருந்து விலகியதால் அணியின் கேப்டனாக ஜடேஜா நியமிக்கப்பட்டார். ஆனால் அவரது தலைமையில் முதல் 8 போட்டிகளில் விளையாடிய சென்னை அணியானது இரண்டு வெற்றிகளை மட்டுமே பெற்றது.

CSK Ms DHoni

- Advertisement -

இதன் காரணமாக தனது பதவியை ராஜினாமா செய்த ஜடேஜா மீண்டும் கேப்டன் பொறுப்பை தோனியிடம் ஒப்படைத்தார். அப்படி தோனி மீண்டும் கேப்டனாக பதவி ஏற்ற பின்னர் மூன்று போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை அணியானது இரண்டு வெற்றிகளை பெற்றுள்ளது. இந்த ஆண்டு பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பு குறைவு என்றாலும் தோனியின் தலைமையில் மீண்டும் சென்னை அணி தற்போது பலம் பெற்று காணப்படுகிறது.

அதேபோன்று சென்னை அணி இப்படி மீண்டும் பலமாக மாறியதற்கு தற்போது சென்னை அணியின் தொடக்க வீரர்களான ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் கான்வே ஆகியோரது சிறப்பான துவக்கமும் ஒரு காரணமாக இருந்து வருகிறது. ஆரம்பம் முதலேயே பேட்டிங்கில் சிறப்பாக விளையாடி வரும் காண்வே நடைபெற்று முடிந்த மூன்று போட்டிகளிலும் அரைசதம் அடித்து அசத்தியிருந்தார்.

Devon Conway

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான முகமது கைஃப் கான்வேவிற்கு துவக்கத்திலிருந்தே வாய்ப்புகள் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : இந்த ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் பெரிய ஸ்கோர் அடிக்க முடியாமல் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறிய கான்வேவை முதல் போட்டி முடிந்ததும் அணியில் நீககினர்.

- Advertisement -

இதுதான் சிஎஸ்கே அணி செய்த தவறு. அவருக்கு மட்டும் தொடர்ந்து வாய்ப்பு கிடைத்திருந்தால் நிச்சயம் சிஎஸ்கே-வுக்கு இன்னும் சில வெற்றிகள் கிடைத்திருக்கும். ஏனெனில் அனைத்து விதமான ஷாட்களையும் அவரால் விளையாட முடிகிறது. மைதானத்தின் அனைத்து திசைகளிலும் சிறப்பாக விளையாடி வரும் அவர் நிச்சயம் பவுலர்கள் கணிக்க முடியாத அளவிற்கு பேட்டிங்கில் அசத்தி வருகிறார் என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க : அடுத்த 10 ஆண்டிற்கான எதிர்காலமே நீங்க 4 பேர்தான்- சி.எஸ்.கே அணியின் குறிப்பிட்ட 4 பேரை வாழ்த்திய தோனி

மேலும் தொடர்ந்து பேசிய அவர் : முதல் போட்டிக்குப் பிறகு ஓரம்கட்டப்பட்ட கான்வே மீண்டும் தற்போது அணிக்கு திரும்பிய அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். தற்போது தொடர்ச்சியாக மூன்று அரை சதங்களை அவர் அடித்துள்ளார். சென்னை அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாகவும் அவர் உள்ளார். இவரை ஏன் தொடர்ச்சியாக அணியில் சேர்க்க வில்லை என்றும் கைப் கேள்வி எழுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement