அடுத்த 10 ஆண்டிற்கான எதிர்காலமே நீங்க 4 பேர்தான்- சி.எஸ்.கே அணியின் குறிப்பிட்ட 4 பேரை வாழ்த்திய தோனி

CSK Ms DHoni
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் பதினைந்தாவது ஐபிஎல் தொடரானது தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் சில போட்டிகள் முடிவடைந்த பின்னர் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும் அணிகள் எவை என்று தெரிந்து விடும். ஆனால் இந்த ஐபிஎல் தொடரில் பிளே ஆப் சுற்றிற்கான வாய்ப்பில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியும் தேர்வாக வாய்ப்பு இல்லை என்பது ரசிகர்கள் மத்தியில் பெரிய வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

CSK MS Dhoni Ravindra Jadeja

- Advertisement -

மேலும் இரு பெரும் ஜாம்பவான் அணிகளுக்கு ஏற்பட்ட இந்த நிலைமையை நினைத்து அந்த அணியின் ரசிகர்கள் சற்று வருத்தத்தில் தான் உள்ளனர். இருப்பினும் எதிர்வரும் ஐபிஎல் தொடர்களுக்கான வீரர்களை இப்போதிலிருந்தே பலமாக கட்டமைக்க இந்த இரண்டு அணிகளும் முயன்று வருகின்றன. அந்த வகையில் தற்காலிக கேப்டனாக ஜடேஜாவை நியமித்த சென்னை அணியானது மிகப்பெரிய சறுக்கலை சந்தித்தது.

அதன் காரணமாக மீண்டும் தோனியின் தலைமையில் தற்போது சி.எஸ்.கே பயணித்து வருகிறது. ஆனாலும் அடுத்து சென்னை அணியை தலைமை தாங்கப்போவது யார்? என்ற கேள்வி தொடர்ந்து கொண்டேதான் வருகிறது. தற்போது 40 வயதை கடந்த தோனி ஓராண்டு விளையாடினாலே அது பெரிதான விடயமாக பார்க்கப்படும் வேளையில் அடுத்ததாக சென்னை அணியை வழிநடத்தப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் உள்ளது.

இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக நடைபெறவுள்ள போட்டிக்கு முன்னர் சிஎஸ்கே அணியானது டீம் மீட்டிங்கில் கலந்து கொண்டு உள்ளது. அதில் வீரர்கள், நிர்வாகிகள், ஊழியர்கள் என அனைவருமே கலந்து கொண்டுள்ளனர். அந்த மீட்டிங்கின் போது சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி 4 இளம் வீரர்களை பாராட்டி தனது ஆதரவினை தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. அந்த வகையில் தோனி கூறியதாவது : இந்த சீசனில் இன்னும் நமக்கு மூன்று போட்டிகள் தான் இருக்கிறது. நாம் இந்த மூன்று போட்டியிலும் இயல்பாக விளையாடி வெற்றி பெறுவோம். இனி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறுவது குறித்து கணக்கிடுவது என எந்த ஒரு அழுத்தமும் வேண்டாம்.

- Advertisement -

நாம் இயல்பாக விளையாடினாலே நமக்கு வெற்றிகள் கிடைக்கும். இந்த தொடரின் முடிவில் என்ன நடந்தாலும் நாம் ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும். அதனால் நம்முடைய இயல்பான ஆட்டத்தை அடுத்து வரும் போட்டிகளில் கொடுக்கலாம் என்று தோனி கூறியுள்ளார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் : சிஎஸ்கே அணி எப்போதுமே எதிர்காலத்தை கணக்கில் கொண்டுதான் சில முடிவுகளை எடுத்து வருகிறது. அந்தவகையில் அடுத்த 10 ஆண்டுகளுக்கான அணியை தான் தற்போது நாம் கட்டமைத்து வருகிறோம்.

இதையும் படிங்க : ஐபிஎல் வரலாற்றில் தோல்வியடைந்த போட்டிகயில் அதிகபட்ச ஸ்கோர் அடித்த – டாப் 6 பேட்ஸ்மேன்கள்

அதனால் இப்போதுள்ள தடுமாற்றம் நமக்கு இருந்தாலும் இனி வரும் காலத்தில் நமது அணி மீண்டும் பெரிய அளவில் ஆதிக்கத்தை செலுத்தும். சிஎஸ்கே அணிக்காக ருதுராஜ் கெய்க்வாட், முகேஷ் சவுத்ரி, தீக்ஷனா மற்றும் டேவான் கான்வே ஆகியோர் சிறப்பாக செயல்பட்டு வருவது மகிழ்ச்சியாக இருக்கிறது. நீங்கள் தான் சிஎஸ்கே அணியின் எதிர்காலம் உங்கள் மீது எனக்கு நிறைய நம்பிக்கை இருக்கிறது. அதனை நீங்கள் காப்பாற்றி அணியை முன் கொண்டு செல்ல வேண்டும் என்று தோனி பேசியதாக கூறப்படுகிறது.

Advertisement