ஐபிஎல் வரலாற்றில் தோல்வியடைந்த போட்டிகயில் அதிகபட்ச ஸ்கோர் அடித்த – டாப் 6 பேட்ஸ்மேன்கள்

pant
- Advertisement -

ஐபிஎல் போன்ற உலகத்தரம் வாய்ந்த டி20 தொடர்களில் இரு அணிகளைச் சேர்ந்த வீரர்களும் வெற்றியை ருசிப்பதற்காக தங்களது முழுத் திறமையை வெளிப்படுத்தி சம பலத்துடன் போராடுவார்கள். இருப்பினும் எப்போதாவது ஒரு போட்டியில் ஒரு அணிக்கு எஞ்சிய அனைத்து பேட்ஸ்மேன்களும் எதிரணியின் அபார பந்து வீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் சரணடைந்தாலும் ஒருசில பேட்ஸ்மேன்கள் மட்டும் சவாலை கொடுக்கும் எதிரணிக்கே கடும் சவாலாக நின்று வெற்றிக்காக போராடுவார்கள்.

- Advertisement -

ஆனாலும் கிரிக்கெட் என்பது அணி விளையாட்டு என்ற நிலையில் இதர பேட்ஸ்மேன்கள் கைகொடுக்க தவறுவதால் ஒருசில சமயங்களில் சதமடித்து முழுமூச்சுடன் போராடினாலும் கூட இறுதியில் அந்த அணி தோல்வியடைந்தால் அந்த குறிப்பிட்ட வீரரின் கடுமையான போராட்டம் வீணாவதை நிறைய முறை பார்த்துள்ளோம். அதனால் நிறைய முறை அவருக்காகவாவது வெற்றி பெற்றிருக்கலாம் என்று ரசிகர்களே மனமுவந்து கூறுவார்கள். அந்த வகையில் ஐபிஎல் வரலாற்றில் தோல்வி அடைந்த போட்டிகளில் அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த டாப் 5 பேட்ஸ்மேன்கள் பற்றி பார்ப்போம்:

6. விராட் கோலி (100): 2016 ஐபிஎல் தொடர் முழுக்க பெங்களூரு அணிக்கு அதுவும் கேப்டனாக முதல் கோப்பையை எப்படியாவது வென்றுவிட வேண்டும் என்ற நோக்கத்துடன் 973 ரன்கள் விளாசி முழு மூச்சை கொடுத்து விராட் கோலி போராடிய போதிலும் இறுதிப்போட்டியில் அதுவும் கடைசி 10 ஓவர்களில் இதர பேட்ஸ்மென்கள் கைகொடுத்த தவறியதால் அந்த அணி கோப்பையை கோட்டை விட்டது. அந்த வருடம் முழுவதுமாக அவர் செய்த போராட்டம் வீணானதை ரசிகர்கள் எப்போதுமே மறக்க முடியாது என்ற நிலையில் குஜராத்துக்கு எதிராக நடைபெற்ற ஒரு போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூருவுக்கு ஷேன் வாட்சன் 6 (6), டீ வில்லியர்ஸ் 20 (16) போன்ற நட்சத்திரங்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி கைவிட்டனர்.

Kohli-2

ஆனால் மறுபுறம் பேட்டிங்கில் மிரட்டிய விராட் கோலி சதம் அடித்து 100* (63) ரன்கள் விளாசியதால் அந்த அணி 180/2 ரன்கள் சேர்த்தது. இருப்பினும் ட்வயன் ஸ்மித் 32 (21) சுரேஷ் ரெய்னா 28 (24) தினேஷ் கார்த்திக் 50* (39) ஆகியோர் ஒன்றாக சேர்ந்து அவரின் போராட்டத்தை வீணடிக்கும் வகையில் குஜராத்துக்கு 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியைப் பெற்றுக் கொடுத்தனர்.

- Advertisement -

5. யூசுப் பதான்: 2010 ஐபிஎல் தொடரில் ராஜஸ்தானுக்கு எதிரான ஒரு போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சச்சின் தலைமையிலான மும்பை 20 ஓவர்களில் அதிரடியாக 212/6 ரன்கள் சேர்த்தது. அதை துரத்திய ராஜஸ்தான் ஆரம்பத்திலேயே விக்கெட்டுகளை இழந்து 66/4 என தடுமாறியபோது களமிறங்கிய யூசுப் பதான் ஒவ்வொரு பந்திலும் பட்டாசாக வெடித்து 9 பவுண்டரி 8 சிக்சருடன் வெறும் 37 பந்தில் சதமடித்து 100 ரன்கள் எடுத்தபோது துரதிஷ்டவசமாக ரன் அவுட்டானார்.

Yusuf 1

இறுதியில் வெறும் 4 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் தோற்க அவரின் போராட்டம் ரசிகர்களின் மனதை உடைக்கும் அளவுக்கு வீணானது. இருப்பினும் ஐபிஎல் கிரிக்கெட்டில் அதிவேகமாக சதமடித்த இந்திய பேட்ஸ்மேனாக அன்று அவர் படைத்த சாதனை இன்றும் நின்று பேசுகிறது.

- Advertisement -

4. ஹாசிம் அம்லா (104): 2017 ஐபிஎல் தொடரில் குஜராத்துக்கு எதிரான ஒரு போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப்புக்கு தொடக்க வீரராக களமிறங்கிய அதிரடி காட்டிய ஹாஷிம் அம்லா 8 பவுண்டரி 5 சிக்சருடன் சதமடித்து 104 (60) ரன்கள் விளாச அவருடன் ஷான் மார்ஷ் 58 (43) ரன்கள் எடுத்ததால் அந்த அணி 20 ஓவர்களில் 189/3 ரன்கள் எடுத்தது.

Hasim Amla KXIP PBKS

ஆனால் அதை துரத்திய குஜராத்துக்கு ட்வயன் ஸ்மித் 74 (39) ரெய்னா 39 (25) தினேஷ் கார்த்திக் 35* (23) ஆகியோர் சேர்ந்து தேவையான ரன்கள் எடுத்ததால் பஞ்சாப் 6 விக்கெட் வித்தியாசத்தில் தோற்க அமலாவின் ஆட்டம் வீணானது.

- Advertisement -

3. ஆண்ட்ரூ சைமன்ஸ் 117*: 2008 ஐபிஎல் தொடரில் ராஜஸ்தானுக்கு எதிராக முதலில் பேட்டிங் செய்த அப்போதைய டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்கு கில்கிறிஸ்ட் 13 (9) லக்ஷ்மன் 16 (16) ஷாஹித் அப்ரிடி 10 (4) என டாப் ஆர்டர் வீரர்கள் சொதப்ப மிடில் ஆர்டரில் அட்டகாசமாக பேட்டிங் செய்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் 11 பவுண்டரிகள் 7 சிக்சருடன் போராடி 117* (53) ரன்கள் எடுக்க அந்த அணி 214/5 ரன்கள் சேர்த்தது.

Andrew Symonds Deccan Chargers

ஆனால் அதை துரத்திய ராஜஸ்தானுக்கு கிராம் ஸ்மித் 71 (45) யூசுப் பதான் 61 (28) முகமது கைஃப் 34 (16) ஆகியோர் அதிரடியாக ரன்கள் எடுக்க இறுதியில் அதன் கேப்டன் ஷேன் வார்னே 22* (9) ரன்கள் விளாசி பினிஷிங் செய்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்ததால் சைமன்ஸ் போராட்டம் வீணானது.

2. ரிதிமான் சஹா (115): 2014 ஐபிஎல் தொடரில் கொல்கத்தாவுக்கு எதிரான மாபெரும் இறுதிப் போட்டியில் சேவாக் 7 (10) கேப்டன் ஜார்ஜ் பெய்லி 1 (2) ஆகியோர் ஏமாற்றிய நிலையில் மிடில் ஆர்டரில் பஞ்சாப் அணிக்கு பட்டையை கிளப்பிய ரித்திமான் சாஹா அதிரடியாக சதமடித்து கடைசி வரை அவுட்டாகாமல் 115* (55) ரன்கள் விளாசியதால் அந்த அணி 192/4 ரன்கள் எடுத்தது.

Wriddhiman Saha Manan Vohra

ஆனால் அதை துரத்திய கொல்கத்தாவிற்கு மனிஷ் பாண்டே 94 (50) உட்பட அனைவரும் தேவையான ரன்களை அடித்ததால் 19.3 ஓவரில் 200/7 ரன்களை எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது. இருப்பினும் பைனலில் சதமடித்த ஒரே இந்திய பேட்ஸ்மேனாக இன்று வரை சாதனை படைத்துள்ள சஹாவின் போராட்டம் அன்று பயனில்லாமல் போனது.

1. ரிசப் பண்ட் 128*: 2018 ஐபிஎல் தொடரில் ஹைதராபாத்துக்கு எதிரான ஒரு போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லிக்கு பிரிதிவி ஷா 9 (11) ஜேசன் ராய் 11 (13) ஷ்ரேயஸ் ஐயர் 3 (8) என 3 டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களும் அடுத்தடுத்து அவுட்டாக 41/3 என தடுமாறிய அந்த அணிக்கு மிடில் ஆர்டரில் இறங்கி சக்கை போடு போட்ட ரிஷப் பண்ட் 15 பவுண்டரி 6 சிக்சர்கள் பறக்க விட்டு மிரட்டலாக 128* (63) ரன்கள் சேர்த்ததால் 20 ஓவர்களில் 187/5 ரன்கள் எடுத்தது.

pant

இருப்பினும் அதை துரத்திய ஐதராபாத்துக்கு ஷிகர் தவான் 92* (50) கேன் வில்லியம்சன் 83* (53) ஆகிய இருவர் சேர்ந்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்ததால் இளம் காளையாக சீறிப்பாய்ந்து சதமடித்த ரிஷப் பண்ட் போராட்டம் வீணானது.

Advertisement