- Advertisement -
ஆசிய கோப்பை

பும்ரா இருந்தாலே தோல்வின்னு சொல்றவங்க அதை பாத்துட்டு பேசுங்க.. இந்தியாவுக்கு அவர் வேணும்.. கைஃப் பதிலடி

இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரம் ஜஸ்ப்ரித் பும்ரா 2016ஆம் ஆண்டு தோனி தலைமையில் சர்வதேச அரங்கில் அறிமுகமானார். மிகவும் வித்தியாசமான ஆக்சனை வைத்து பவுலிங் செய்த அவரால் கடினமான டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட முடியாது என்று வர்ணிக்கப்பட்டது. ஆனால் 2018ஆம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான பும்ரா இன்று ஐசிசி தரவரிசையில் நம்பர் ஒன் பவுலராக முன்னேறி சாதனை படைத்துள்ளார்.

அந்தளவுக்கு கடந்த 7 வருடங்களுக்கும் மேலாக சிறப்பாக விளையாடி வரும் அவர் இந்தியாவின் நிறைய வெற்றிகளில் பங்காற்றி வருகிறார். குறிப்பாக கடந்த ஆஸ்திரேலிய தொடரில் மற்ற இந்திய பவுலர்கள் தடுமாற்றமாக பவுலிங் செய்தனர். அவர்களுக்கும் சேர்த்து 5 போட்டிகளிலும் முழுமூச்சுடன் பவுலிங் செய்த பும்ரா 32 விக்கெட்டுகள் எடுத்து ஆஸ்திரேலியாவுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தார்.

- Advertisement -

வைரத்தையே விமர்சிக்கும் உலகம்:

அதே காரணத்தால் கடைசிப் போட்டியில் காயமடைந்த அவர் முதுகில் அறுவை சிகிச்சை மேற்கொண்ட தம்மால் இங்கிலாந்தில் 3 போட்டிகளில் மட்டுமே விளையாட முடியும் என்று ஆரம்பத்திலேயே அறிவித்தார். துரதிஷ்டவசமாக அந்த 3 போட்டிகளிலும் இந்தியா வெற்றிக் காணவில்லை. அதனால் ஜஸ்ப்ரித் பும்ரா விளையாடும் டெஸ்ட் போட்டிகளில் இந்தியா தோல்வியை சந்திப்பதாக ஒரு புள்ளிவிவரத்தை வைத்துக்கொண்டு பல ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கலாய்த்தனர்.

அதே போல முழுமையாக விளையாடுங்கள் அல்லது ஓய்வு பெறுங்கள் என்று சொல்லாத குறையாக நிறைய முன்னாள் வீரர்கள் பும்ராவை விமர்சித்தனர். இந்நிலையில் ஜஸ்ப்ரித் பும்ராவை கண்மூடித்தனமாக விமர்சிப்பவர்களுக்கு முன்னாள் இந்திய வீரர் முகமது கைஃப் கொடுத்துள்ள பதிலடி பின்வருமாறு. “உங்களுடைய வாயை கவனமாக திறங்கள். ஏனெனில் இங்கிலாந்தில் ஜஸ்ப்ரித் பும்ரா விளையாடியப் போட்டிகளில் இந்தியா தோல்வியை சந்தித்ததாக நீங்கள் சொல்கிறீர்கள்”

- Advertisement -

கைஃப் பதிலடி:

“அப்படி சொல்லும் நீங்கள் பும்ரா விளையாடிய அனைத்து விதமான சர்வதேச போட்டிகளில் இந்தியா எத்தனை வென்றது என்பதையும் பார்த்து விட்டு பேசுங்கள். அவர் விளையாடிய போட்டிகளில் எத்தனை மேட்ச் வின்னிங் செயல்பாடுகள் இருந்தது? என்ற புள்ளிவிவரத்தையும் பாருங்கள். பும்ரா இந்தியாவின் வைரம். நீங்கள் புகார் செய்யும் அளவுக்கு எந்த அவர் மேலே கறையும் இல்லை”

இதையும் படிங்க: அகர்கர் சொல்றது முட்டாள்தனமான லாஜிக்.. அந்த 3 பேருக்கு பதில் ஸ்ரேயாஸை எடுக்கலாமே? ஸ்ரீகாந்த் கேள்வி

“பும்ரா டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட மாட்டார் என்று நான் ஏற்கனவே தெரிவித்துள்ளேன். ஆனால் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் அவரால் விளையாட முடியும். குறிப்பாக அடுத்த ஆசியக் கோப்பையில் எவ்வித பிரச்சனையுமின்றி அவர் 7 போட்டியில் 28 ஓவர்கள் வீசுவார். ஓமன் போன்ற பலவீனமான அணிகளுக்கு எதிராக அவரை ஓய்வெடுக்க வையுங்கள். 4 ஓவர்கள் வீசுவதில் அவருக்கு எந்த பிரச்சனையும் இருக்காது. ஆசியக் கோப்பை வெல்ல உங்களுக்கு பும்ரா தேவை. ஏனெனில் அவர் போட்டியை தலைகீழாக மாற்றக்கூடியவர்” என்று கூறினார்.

- Advertisement -