ரிட்டையர்ட் அவுட் எதுக்கு? திவாட்டியா 5 சிக்ஸ் பறக்க விட்டதை மறந்துட்டிங்களே.. எம்ஐ, சென்னையை சாடிய கைப்

Mohammed Kaif
- Advertisement -

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் 5 போட்டிகளில் 4 தோல்விகளை பதிவு செய்துள்ளது. அதனால் 8, 9வது இடங்களைப் பிடித்துள்ள அவ்விரு அணிகளும் இப்படி தடுமாறுவது ரசிகர்களை ஏமாற்றமடைய வைத்துள்ளது. முன்னதாக இந்த வருடம் மும்பை, சென்னை அணிகள் ரிட்டையர்ட் அவுட் விதிமுறையை பயன்படுத்தியது வெற்றிக்கு கை கொடுக்கவில்லை.

அதாவது லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் திலக் வர்மா 25* (23) ரன்கள் எடுத்து வெற்றிக்காக போராடினார். இருப்பினும் அவரால் ஒரு கட்டத்திற்கு மேல் அதிரடியாக விளையாடி ரன்களை வேகமாக குவிக்க முடியவில்லை. அதனால் அவரை மும்பை அணி ரிட்டையர்ட் அவுட் முறையில் வெளியேற்றி புதிய பேட்ஸ்மேனை விளையாட வைத்தது வெற்றியைக் கொடுக்கவில்லை.

- Advertisement -

ரிட்டையர்ட் அவுட் எதுக்கு:

அதே போல சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக டேவோன் கான்வே நிதானமாக விளையாடி 69* (49) ரன்கள் எடுத்து வெற்றிக்குப் போராடினார். ஆனாலும் அவரால் முக்கிய நேரத்தில் அதிரடியாக விளையாடி ரன்களை குவிக்க முடியவில்லை. அதனால் சென்னை நிர்வாகம் அவரை ரிட்டையர்ட் அவுட் முறையில் வெளியேற்றி ஜடேஜாவை களமிறக்கியது வெற்றியைக் கொடுக்கவில்லை.

இந்நிலையில் ஐபிஎல் அணிகள் இப்படி ரிட்டையர்ட் அவுட் விதிமுறையை பயன்படுத்துவதை கைவிட வேண்டும் என்று முன்னாள் வீரர் முகமது கைஃப் கடுமையாக விமர்சித்துள்ளார். மேலும் 2020இல் பஞ்சாப் அணிக்காக ராகுல் திவாட்டியா 19 பந்தில் 8 ரன்கள் மட்டுமே எடுத்து தடுமாறினார். ஆனால் கடைசியில் 5 பந்துகளில் 5 சிக்சர் அடித்த அவர் ராஜஸ்தானின் வெற்றியைப் பறித்ததை கைப் சுட்டிக்காட்டியுள்ளார்.

- Advertisement -

கைப் விமர்சனம்:

அதற்கான காரணம் பற்றி கைப் தம்முடைய டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது பின்வருமாறு. “அணிகள் விரக்தியால் ரிட்டையர்ட் அவுட் விதிமுறையை அதிகமாக பயன்படுத்துகிறார்கள். ஆனால் அந்த விதிமுறை அரிதாகவே செயல்படக்கூடிய தந்திரமாகும். ஏனெனில் சந்திக்கும் முதல் பந்திலேயே சிக்ஸர் அடிக்கும் பேட்ஸ்மேன்கள் மிகவும் குறைவு”

இதையும் படிங்க: 217 ரன்ஸ்.. கெய்ல், ஹைடன், வில்லியம்சனை முந்தி சுதர்சன் அசத்தல் சாதனை.. ராஜஸ்தானை அடித்த குஜராத்

“பெரும்பாலான நேரங்களில் புதிதாக வருபவரை விட நன்கு செட்டிலாக இருப்பதன் காரணமாக களத்தில் போராடும் பேட்ஸ்மேனுக்கு தான் வெற்றியைப் பெற்றுக் கொடுக்க அதிக வாய்ப்பு இருக்கும். இங்கே 19 பந்துகளில் 8 ரன்கள் எடுத்த ராகுல் திவாட்டியா கடைசியில் 5 பந்துகளில் 5 சிக்ஸர் அடித்தார் என்பதை நினைவில் கொள்ளுங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

Advertisement