ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் ஒன்பதாம் தேதி அகமதாபாத் நகரில் 23வது போட்டி பற்றி நடைபெற்றது. அந்தப் போட்டியில் குஜராத்துக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் டாஸ் வென்ற ராஜஸ்தான் முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது. அதை அடுத்து விளையாடிய குஜராத்துக்கு கேப்டன் சுப்மன் கில் 2 ரன்னில் ஜோப்ரா ஆர்ச்சர் வேதத்தில் ஆரம்பத்திலேயே போல்டானார்.
இருப்பினும் மறுபுறம் தமிழக வீரர் சாய் சுதர்சன் நிதானம் கலந்த அதிரடியை வெளிப்படுத்தினார். அவருடன் ஜோடி சேர்ந்த ஜோஸ் பட்லர் இரண்டாவது விக்கெட்டுக்கு 80 ரன்கள் பார்ட்னர்ஷிப் அசத்திய போது 36 (25) ரன்களில் விக்கெட்டை இழந்தார். மறுபுறம் தொடர்ந்து அசத்திய சுதர்சன் அரை சதத்தை அடித்து ரன் குவிப்பில் ஈடுபட்டார்.
சுதர்சன் அசத்தல்:
அடுத்ததாக வந்த தமிழக வீரர் சாருக்கான் அவருடன் சேர்ந்து 3வது விக்கெட்டுக்கு 62 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார். அந்த வகையில் அசத்தலாக விளையாடிய போது அவர் 36 (20) ரன்னில் அவுட்டானார். அவருக்கு அடுத்ததாக வந்த ரூதர்போர்ட் 7 (3) ரன்னில் சந்திப் ஷர்மாவிடம் தமது விக்கெட்டை இழந்தார்.
இந்த பக்கம் தொடர்ந்து அசத்தலாக விளையாடி வந்த தமிழக வீரர் சாய் சுதர்சன் சதத்தை அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 8 பவுண்டரி 3 சிக்சருடன் 82 (53) ரன்னில் அவுட்டானார். அவருக்கு அடுத்ததாக வந்த ரசித் கான் அதிரடியாக 12 (4) ரன்கள் எடுத்து அவுட்டானார். மறுபுறம் மிரட்டிய ராகுல் திவாட்டியா 2 பவுண்டரி 2 சிக்சருடன் 24* (12) ரன்கள் விளாசி சூப்பர் ஃபினிஷிங் கொடுத்தார்.
கலக்கல் சாதனை:
அதனால் 20 ஓவரில் குஜராத் 217-6 ரன்கள் குவித்து அசத்தியது. ராஜஸ்தான் அணிக்கு அதிகபட்சமாக துஷார் தேஷ்பாண்டே 2, மஹீஸ் தீக்சனா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். முன்னதாக இந்தத் தொடரில் குஜராத் அணிக்காக தமிழக வீரர் சாய் சுதர்சன் தொடர்ச்சியாக பெரிய ரன்கள் குவித்து வருகிறார்.
இதையும் படிங்க: ரோஹித் சர்மா நீங்க இதை செய்ஞ்சே ஆகனும்.. அதுதான் மும்பை அணிக்கு நல்லது – ரவி சாஸ்திரி கருத்து
அந்த வகையில் இந்தப் போட்டியிலும் அடித்த 82 ரன்கள் சேர்த்து ஐபிஎல் தொடரில் அவர் 30 போட்டிகளில் 1307 ரன்களை 48.41 என்ற சராசரியில் குவித்துள்ளார். இதன் வாயிலாக ஐபிஎல் தொடரில் 30 போட்டிகளுக்கு பின் 2வது அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற சாதனையை சுதர்சன் படைத்துள்ளார். அந்தப் பட்டியல்:
1. ஷான் மார்ஷ்: 1338
2. சாய் சுதர்சன்: 1307*
3. கிறிஸ் கெயில்: 1141
4. கேன் வில்லியம்சன்: 1096
5. மேத்தியூ ஹைடன்: 1082



