ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் அதிக முறை சாம்பியன் பட்டம் வென்ற அணிகளில் ஒன்றான மும்பை இந்தியன்ஸ் அணியானது கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி புள்ளி பட்டியலில் கடைசி இடத்தினை பிடித்து வெளியேறியிருந்தது ரசிகர் மத்தியில் மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்திருந்தது. அதோடு ரோகித் சர்மா கேப்டன் பதிவியிலிருந்து நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக ஹார்டிக் பாண்டியா புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டதற்கும் எதிர்ப்பு கிளம்பி இருந்தது.
ரோஹித் சர்மா இதை செய்தே ஆகனும் : ரவி சாஸ்திரி
ஆனாலும் இந்தியாவில் தற்போது நடைபெற்று வரும் 2025 ஐபிஎல் தொடரிலும் ஹர்திக் பாண்டியாவே மும்பை அணியின் கேப்டனாக தொடர்வார் என்று நிர்வாகம் அறிவித்திருந்தது. ஆனால் இந்த ஆண்டும் மும்பை இந்தியன்ஸ் அணியானது மீண்டும் ஒருமுறை மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளது பலரது மத்தியிலும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த தொடரில் இதுவரை தாங்கள் விளையாடிய 5 போட்டிகளில் நான்கு தோல்விகளுடன் புள்ளி பட்டியலில் எட்டாவது இடத்தில் மும்பை அணி உள்ளது. இந்நிலையில் மும்பை அணி இப்படி தொடர்ச்சியான தோல்விகளை சந்தித்து வருவதற்கு மும்பை அணியின் துவக்க வீரரான ரோகித் சர்மா சரியான துவக்கத்தை கொடுக்காததும் ஒரு காரணமாக பார்க்கப்படுகிறது.
ஏனெனில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ரோகித் சர்மா ஐ.பி.எல் போட்டிகளில் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறுகிறார். அதிரடியாக துவக்கத்தை தர வேண்டும் என்று நினைத்து அவர் எளிதாக விக்கெட்டுகளை இழப்பதனாலே மும்பை அணி இப்படி ஒரு நிலையை சந்திக்கிறது என பலரும் விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியின் போது ரோகித் சர்மா விளையாடுகையில் வர்ணனையாளர் அறையில் இருந்து பேசிய இயான் பிஷப் கூறுகையில் :
ரோகித் சர்மா போன்ற ஒரு வீரர் இதுபோன்று 12 முதல் 15 ரன்கள் வரை எல்லாம் அடித்தால் அது அணிக்கு நல்லதல்ல என்று கூறினார். உடனே அந்த கருத்திற்கு பதிலளித்த ரவி சாஸ்திரி கூறுகையில் : ரோகித் சர்மா போன்ற ஒரு வீரர் 15-20 ரன்கள் வரை இந்த லெவலில் அடித்தால் அது சரியாக இருக்காது. ஐபிஎல் போன்ற தொடரில் ஒரு துவக்க வீரர் 40 முதல் 60 ரன்கள் வரை அடித்தால் தான் அது அந்த அணிக்கு பலம். ரோகித் சர்மா 400 ரன்களை ஒரு சீசனில் அடித்து நீண்ட காலம் ஆகிவிட்டது.
இதையும் படிங்க : மும்பை தோல்விக்கு ரோஹித்தை இம்பேக்ட் வீரராக அவமானப் படுத்துவதே காரணம்.. சஞ்சய் பங்கர் பேட்டி
என்னை பொறுத்தவரை டாப் ஆர்டரில் அதிரடியாக விளையாடுவது எவ்வளவு முக்கியமோ அதேபோன்று தொடர்ச்சியாக பெரிய அளவில் ரன்களை அடிக்க வேண்டும். அப்படி இருந்தால் தான் மும்பை அணிக்கு நல்லது இல்லையெனில் அது அந்த அணிக்கு பாதகம் தான் என ரவி சாஸ்திரி கூறியது குறிப்பிடத்தக்கது.



