கடந்த டிசம்பர் மாதம் சவுதி அரேபியாவில் 2025-ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான வீரர்களின் மெகா ஏலமானது கோலாகலமாக நடைபெற்று முடிந்தது. இந்த மெகா ஏலத்தில் பங்கேற்ற 10 அணியின் நிர்வாகங்களும் எதிர்கால திட்டத்தின் படி தங்களது அணிக்கு தேவையான வீரர்களை போட்டி போட்டு ஏலத்தில் விலைக்கு வாங்கி தங்களது அணியை பலப்படுத்தியது.
சன் ரைசர்ஸ் அணி மிகச்சிறப்பான முடிவு எடுத்துள்ளது :
அந்த வகையில் இந்த மெகா ஏலத்தில் பங்கேற்ற சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் பல முக்கிய வீரர்களை தங்களது அணிக்கு தேர்வு செய்தது. கடந்த 2016 ஆம் ஆண்டு சாம்பியன் பட்டத்தை வென்ற அந்த அணி எட்டு ஆண்டுகளாக கோப்பைக்காக காத்திருக்கும் நிலையில் எதிர்வரும் ஐபிஎல் தொடரை கைப்பற்றும் முனைப்புடன் பல முக்கிய வீரர்களை தங்களது அணியில் இணைத்தது.
அந்த வகையில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நடைபெற்று முடிந்த இந்த ஐபிஎல் மெகா ஏலத்தில் 10 கோடி ரூபாய்க்கு இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமியையும் தங்களது அணியில் வாங்கி இருந்தது.
கடந்த 2023-ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற 50 ஓவர் உலக கோப்பை தொடருக்கு பின்னர் காயம் காரணமாக இதுவரை விளையாடாமல் இருந்து வரும் முகமது ஷமி இந்த ஐபிஎல் தொடரில் அசத்தலான செயல்பாட்டை வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ஹைதராபாத் அணி முகமது ஷமியை வாங்கியது ஒரு “ஸ்மார்ட் மூவ்” என்று இந்திய அணியின் முன்னாள் வீரரான முகமது கைப் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : முகமது ஷமியை 10 கோடி ரூபாய்க்கு ஹைதராபாத் அணி வாங்கியது என்னை பொருத்தவரை ஒரு “ஸ்மார்ட் மூவ்” ஏனெனில் முகமது ஷமியால் இன்றளவும் வெள்ளை பந்தில் மிகச் சிறப்பாக செயல்பட முடியும். அதோடு போட்டியின் துவக்க ஓவர்களிலேயே விக்கெட்டை வீழ்த்தும் திறமை கொண்ட அவரை ஹைதராபாத் அணி வாங்கியுள்ளது நிச்சயம் அந்த அணிக்கு நல்ல துவக்கத்தை கொடுக்கும்.
இதையும் படிங்க : தனது அசத்தலான அறிமுகத்திற்கு பிறகு திருப்பதி கோயிலில் நேர்த்திக்கடனை செலுத்திய – நிதீஷ் ரெட்டி
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை தவறவிட்ட முகமது ஷமி நிச்சயம் விக்கெட் வேட்கையுடன் செயல்பட்டு சன் ரைசர்ஸ் அணிக்காக மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்துவார் என்றும் முகமது கைப் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.