இந்தியாவில் கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இதுவரை சாம்பியன் பட்டம் வெல்லாத அணிகளில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் ஒன்று. கிட்டத்தட்ட சி.எஸ்.கே, மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இணையான ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டுள்ள பெங்களூரு அணியானது இதுவரை சாம்பியன் பட்டத்தை வெல்லவில்லை என்றாலும் இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய ஆதரவையும் வரவேற்பையும் பெற்றுள்ள அணியாக திகழ்ந்து வருகிறது.
இந்த ஆண்டு ஆர்.சி.பி அணிதான் கோப்பையை கைப்பற்றும் : முகமது கைப்
கடந்த 2009, 2011 மற்றும் 2016 ஆகிய மூன்று சீசன்களில் அந்த அணி இறுதிப்போட்டி வரை முன்னேறி இருந்தாலும் தோல்வியையே சந்தித்து இருந்தது. இந்த 17 ஆண்டுகால ஐபிஎல் வரலாற்றில் ஒருமுறை கூட கோப்பையை வெல்லாத ஆர்சிபி அணி இந்த ஆண்டு நடைபெற்று வரும் 18-வது ஐபிஎல் கோப்பையை கைப்பற்றும் முனைப்புடன் தற்போது விளையாடி வருகிறது.
அந்த வகையில் நடப்பு 2025 ஐ.பி.எல் தொடரில் ரஜத் பட்டிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது இதுவரை தாங்கள் விளையாடியுள்ள 11 ஆட்டங்களில் 8 வெற்றிகளை பெற்று 16 புள்ளிகளுடன் புள்ளி பட்டியல் இரண்டாம் இடத்தினை பிடித்திருக்கும் வேளையில் இந்த ஆண்டுக்கான பிளே ஆப் வாய்ப்பை வெகு விரைவில் உறுதி செய்துவிடும்.
இந்நிலையில் இந்த ஆண்டு ஆர்.சி.பி அணி தான் ஐபிஎல் கோப்பையை கைப்பற்றும் என இந்திய அணியின் முன்னாள் வீரரான முகமது கைஃப் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : ஆர்.சி.பி அணி இந்த ஆண்டு அற்புதமாக செயல்பட்டு வருகின்றனர்.
எப்பொழுதுமே பேட்டிங்கில் பலமாக இருக்கும் ஆர்சிபி அணி இம்முறை பந்துவீச்சாளர்களையும் சிறப்பாக பயன்படுத்தி 170 முதல் 180 ரன்கள் கொண்ட இலக்கினையும் தடுத்து நிறுத்துகிறது. இந்த ஆண்டு விராட் கோலி அற்புதமான ஃபார்மில் இருக்கிறார். ரஜத் பட்டிதார் மிகச் சிறப்பாக கேப்டன்சி செய்கிறார். அதோடு ஆர்.சி.பி அணியின் பந்துவீச்சாளர்களும் தேவையான நம்பிக்கையை அளித்து வருகின்றனர்.
இதையும் படிங்க : கில்லுக்கு கேப்டன்சி பதிலா இந்த பொறுப்பை கொடுங்க.. சுதர்சனுக்கு நீண்ட வாய்ப்பு தரலாம்.. வாசிம் ஜாபர்
அதேபோன்று அணியில் இடம் பெற்றுள்ள ஒவ்வொரு வீரரும் தங்களது பங்களிப்பினை மிகச் சரியாக வழங்கி வருகின்றனர். எனவே இந்த ஆண்டு நிச்சயம் ஆர்.சி.பி அணியால் கோப்பையை வெல்ல முடியும் என்பதில் எனக்கு சந்தேகமே கிடையாது என முகமது கைப் கூறியுள்ளார்.



