கில்லுக்கு கேப்டன்சி பதிலா இந்த பொறுப்பை கொடுங்க.. சுதர்சனுக்கு நீண்ட வாய்ப்பு தரலாம்.. வாசிம் ஜாபர்

Wasim Jaffer
- Advertisement -

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியில் இருந்து கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் அடுத்தடுத்து ஓய்வு பெற்றுள்ளனர். 2027 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை தொடருக்கு கௌதம் கம்பீர் புதிய அணியை உருவாக்க விரும்புவதாக தெரிகிறது. அதனால் அவர்களை பிசிசிஐ கழற்றி விடுவதாக முடிவெடுத்தது. அதற்கு முன்பாக அவர்களாகவே ஓய்வு பெற்றது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது.

இதைத் தொடர்ந்து அவர்கள் இடத்தை நிரப்பப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது. இப்போதைய நிலையில் சுப்மன் கில் புதிய டெஸ்ட் கேப்டனாக நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஏனெனில் ஜஸ்ப்ரித் பும்ரா காயத்தை சந்திப்பவராக இருப்பதால் அவருக்கு பதில் சுப்மன் கில்லை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் புதிய கேப்டனாக நியமிக்க பரிந்துரை செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

- Advertisement -

விராட் கோலி இடத்தில்:

ஆனால் வெளிநாடுகளில் எப்போதுமே சிறப்பாக செயல்படாத அவரை கேப்டனாக தேர்ந்தெடுப்பது பல ரசிகர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் கடந்த ஆஸ்திரேலிய தொடரில் ஜெய்ஸ்வால் – ராகுல் ஓப்பனிங் ஜோடியாக அசத்தியதாக முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர் தெரிவித்துள்ளார். எனவே அவர்கள் இங்கிலாந்திலும் தொடர வேண்டும் ஜாஃபர் கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும் சுப்மன் கில்லுக்கு பேட்டிங் வரிசையில் விராட் கோலி விளையாடிய 4வது இடத்தில் விளையாடும் பொறுப்பை வழங்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார். 3வது இடத்தில் தமிழக வீரர் சாய் சுதர்சன் களமிறங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளும் ஜாஃபர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “சுப்மன் கில் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் துவக்க வீரராக விளையாடுகிறார்”

- Advertisement -

சுதர்சன் வேண்டும்:

“ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் கீழே சென்று 4வது இடத்தில் களமிறங்க வேண்டும். கேஎல் ராகுல் – ஜெய்ஸ்வால் ஆகியோர் கடந்த பார்டர் – கவாஸ்கர் கோப்பையில் சிறப்பாக செயல்பட்டார்கள். எனவே ராகுல் தொடர்ந்து அங்கேயே விளையாட வேண்டும் என்று நான் கருதுகிறேன். இதுவரை உடைக்கப்படாததை ஏன் நீங்கள் மாற்ற விரும்புகிறீர்கள்?”

இதையும் படிங்க: நான் இந்தியாவுக்கு விளையாட வரல.. டெல்லி அணியில் இருந்து வெளியேறிய வெளிநாட்டு வீரர் – விவரம் இதோ

“சாய் சுதர்சனும் இந்திய அணியில் தனக்கான இடத்தை உறுதி செய்துள்ளதாக தெரிகிறது. அவருக்கு மூன்றாவது இடத்தில் நீண்ட காலம் விளையாடுவதற்கான வாய்ப்பை வழங்க வேண்டும்” என்று கூறினார். இதைத் தொடர்ந்து இங்கிலாந்துக்கு எதிராக இந்தியா விளையாடும் தொடர் ஜூன் மாதம் இறுதியில் 2027 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக துவங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement