நான் இந்தியாவுக்கு விளையாட வரல.. டெல்லி அணியில் இருந்து வெளியேறிய வெளிநாட்டு வீரர் – விவரம் இதோ

DC
- Advertisement -

இந்தியாவில் கடந்த மார்ச் 22-ஆம் தேதி துவங்கிய நடப்பு 2025-ஆம் ஆண்டிற்கான பதினெட்டாவது ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது விறுவிறுப்பாக நடைபெற்று வந்த வேளையில் மார்ச் 8-ஆம் தேதி தரம்சாலாவில் நடைபெற்ற பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியின் போது பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான பதட்டமான போர் சூழல் காரணமாக அந்த போட்டி தடைபட்டதாகவும் அறிவிக்கப்பட்டது.

டெல்லி கேபிட்டல்ஸ் அணியில் இருந்து வெளியேறிய வெளிநாட்டு வீரர் :

மேலும் ஒரு வாரத்திற்கு ஐபிஎல் போட்டிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும் பி.சி.சி.ஐ அறிவித்திருந்தது. அதனை தொடர்ந்து தற்போது நாடு முழுவதும் உள்ள பதற்றம் தணிந்துள்ளதை அடுத்து மீண்டும் ஐபிஎல் போட்டிகள் வருகின்ற 17-ஆம் தேதி முதல் ஜூன் 3-ஆம் தேதி வரை நடைபெறும் என ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுவிட்டது.

- Advertisement -

அந்த வகையில் இந்த எஞ்சியுள்ள தொடரின் முதல் ஆட்டமாக பெங்களூரு மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையேயான போட்டி வருகின்ற மே 17-ஆம் தேதி சின்னசாமி மைதானத்தில் மோத இருக்கின்றன. இந்நிலையில் இந்தியாவில் நிலவிவரும் தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டும் சர்வதேச போட்டிகளின் அட்டவணையை பொருத்தும் பல்வேறு வீரர்கள் இந்த தொடரில் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

மேலும் இதுகுறித்து பேசியிருந்த பிசிசிஐ-யையும் எந்த ஒரு வீரரையும் வற்புறுத்தி இந்தியாவிற்கு அழைத்து வர மாட்டோம் என்றும் விருப்பம் உள்ள வீரர்கள் வந்து விளையாடலாம் என்றும் தெரிவித்துள்ளது. அந்தவகையில் பல்வேறு வெளிநாட்டு வீரர்கள் இந்த எஞ்சியுள்ள தொடரை தவற விடுவார்கள் என்று தெரிகிறது.

- Advertisement -

இந்நிலையில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் நட்சத்திர இளம் வீரரான ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஜேக் பிரேசர் மெக்கர்க் எஞ்சியுள்ள இந்த ஐ.பி.எல் தொடரில் இருந்து விலகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தனிப்பட்ட காரணங்களுக்காக இந்த தொடரில் இருந்து தான் விலகுவதாக அவர் அறிவித்துள்ளார்.

இதையும் படிங்க : என்னோட ரொம்ப நாள் ஆசை நிறைவேறல.. விராட் கோலியுடனான உறவு குறித்து – டேவிட் வார்னர் வருத்தம்

இதன் காரணமாக அவருக்கு பதிலாக வங்கதேச வேகப்பந்து வீச்சாளரான முஸ்தபிசுர் ரஹ்மானை அந்த அணியின் நிர்வாகம் மாற்று வீரராக ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த தொடரில் ஜேக் பிரேசர் மெக்கர்க் சில போட்டிகளிலேயே விளையாடி இருந்தாலும் அவருக்கு கிடைத்த அந்த வாய்ப்புகளை அவர் வீணடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement