ஐசிசி பணம் 383 கோடியில் பாதியை சுருட்டிட்டீங்களா? பாகிஸ்தான் வாரியத்துக்கு கைப் கேள்வி

Mohammed Kaif
- Advertisement -

ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபி 2025 ஒருநாள் கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நடைபெற்று வருகிறது. அதில் இந்தியா தங்களுடைய போட்டிகளை துபாயில் விளையாடி வருகிறது. அந்தத் தொடரில் நடப்புச் சாம்பியனான பாகிஸ்தான் முதல் 2 போட்டிகளில் நியூசிலாந்து மற்றும் இந்தியாவிடம் தோற்று 5 நாட்களுக்குள் பரிதாபமாக வெளியேறியது. நியூசிலாந்து, இந்திய அணிகள் செமி ஃபைனலுக்கு தகுதி பெற்று அசத்தியது.

அந்த நிலையில் பிப்ரவரி 25ஆம் தேதி ராவல்பிண்டி நகரில் 7வது லீக் போட்டி நடைபெற்றது. அந்தப் போட்டியில் வலுவான ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் மோதின. இருப்பினும் இந்திய நேரப்படி மதியம் 2.30 மணிக்கு துவங்கிய அந்தப் போட்டி ஆரம்பத்திலேயே மழையால் பாதிக்கப்பட்டது. மாலை 6 மணி வரை தொடர்ந்து லேசான சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது.

- Advertisement -

ஐசிசி பணம்:

அதன் காரணமாக போட்டி ரத்து செய்யப்படுவதாக அறிவித்த நடுவர்கள் இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு தலா ஒரு புள்ளியை பகிர்ந்து கொண்டுள்ளனர். முன்னதாக இம்முறை 29 வருடங்கள் கழித்து முதல் முறையாக ஒரு ஐசிசி தொடர் பாகிஸ்தானில் நடைபெறுகிறது. அதைக் கோலாகலமாக நடத்துவதற்காக பாகிஸ்தான் வாரியம் தங்கள் நாட்டில் இருக்கும் மைதானங்களை 383 கோடி ரூபாய் செலவில் புதுப்பித்தது.

அதற்கு ஐசிசி பெருமளவு நிதி உதவி செய்திருந்தது. அந்த சூழ்நிலையில் இந்தப் போட்டியில் மழை பெய்த போது பிட்ச் மற்றும் 30 யார்ட் பகுதிகள் மட்டுமே தார்ப்பாய் கொண்டு மூடப்பட்டிருந்தது. அதைப் பார்த்த முன்னாள் இந்திய வீரர் முகமது கைஃப் ஐசிசி கொடுத்த பணத்தில் பாதியளவு சுருட்டி விட்டீர்களா? என்று பாகிஸ்தான் வாரியத்தை மறைமுகமாக கேள்வி அனுப்பியுள்ளார்.

- Advertisement -

கைப் கேள்வி:

இது பற்றி ட்விட்டரில் அவர் புகைப்பட ஆதாரத்தை சேர்த்து பதிவிட்டுள்ளது பின்வருமாறு. “ராவல்பிண்டி மைதானம் முழுமையாக மூடப்படவில்லை என்பது வெட்கக்கேடானது. தென்னாபிரிக்கா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதும் இந்தப் போட்டி மிகவும் முக்கியமான ஒன்றாகும். இதை யாரும் கவனிக்காததால் இந்தப் போட்டி சாக்கடையில் போகலாம்”

இதையும் படிங்க: ஆஸியின் 8க்கு 4 பரிதாபம்.. தெ.ஆ கனவில் மீண்டும் குறுக்கே புகுந்த மழை? குரூப் பி செமி ஃபைனல் வாய்ப்பு இதோ

“ஐசிசி பணம் தொடரை நடத்தும் நாட்டின் வாரியத்தால் புத்திசாலித்தனமாக பயன்படுத்தப்பட்டதா?” என்று வினவியுள்ளார். அதாவது மைதானத்தை முழுமையாக மூடும் அளவுக்கு பாகிஸ்தான் வாரியம் ஐசிசி கொடுத்த பணத்தில் வசதிகளை செய்யவில்லையா என்று கைப் கேள்வி எழுப்பியுள்ளார். ஏனெனில் ஐசிசி தொடரில் ஒவ்வொரு போட்டியும் மிகவும் முக்கியம் என்று அவர் பாகிஸ்தான் வாரியத்தை சாடிள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement