ஆஸியின் 8க்கு 4 பரிதாபம்.. தெ.ஆ கனவில் மீண்டும் குறுக்கே புகுந்த மழை? குரூப் பி செமி ஃபைனல் வாய்ப்பு இதோ

AUS vs RSA
- Advertisement -

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 ஒருநாள் கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. அதில் குரூப் ஏ பிரிவில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் செமி ஃபைனலுக்கு தகுதி பெற்றன. நடப்புச் சாம்பியன் பாகிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகள் அடுத்தடுத்த தோல்விகளால் வெளியேறின. அந்த நிலையில் பிப்ரவரி 25ஆம் தேதி ராவல்பிண்டியில் 7வது லீக் போட்டி நடைபெற்றது.

அதில் குரூப் பி பிரிவில் இடம் வகிக்கும் ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் மோதின. இந்திய நேரப்படி மதியம் 2 மணிக்கு துவங்கிய அந்தப் போட்டி மழையால் ஆரம்பத்திலேயே தாமதம் ஆனது. நேரம் செல்ல செல்ல முழுமையாக ஓயாத மழை சாரலாக தூவிப் போட்டியை துவங்குவதற்கு தாமதம் செய்தது.

- Advertisement -

குறுக்கே மழை:

இறுதியில் மாலை 6:00 மணி வரை மழை பெய்ததால் வேறு வழியின்றி இந்தப் போட்டி ரத்து செய்யப்படுவதாக நடுவர்கள் அறிவித்தனர். அதனால் தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய 2 அணிகளுக்கும் தலா 1 புள்ளி பகிர்ந்து கொடுக்கப்பட்டது. இதையும் சேர்த்து சாம்பியன்ஸ் டிராபியில் கடைசியாக ஆஸ்திரேலியா விளையாடிய 8 போட்டிகளில் 4வது போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது.

அந்த வகையில் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஆஸ்திரேலிய அணியின் போட்டிகளில் மழை பரிதாபத்தை ஏற்படுத்தி வருகிறது என்றே சொல்லலாம். இந்த நிலையில் குரூப் பி பிரிவில் தென்னாபிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் 2 போட்டிகளில் விளையாடி 3 புள்ளிகளுடன் முதல் 2 இடங்களில் உள்ளன. ரன் ரேட் காரணமாக தென்னாப்பிரிக்கா முதலிடத்தில் இருக்கிறது.

- Advertisement -

மழையில் தாக்கம்:

இங்கிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் ஒரு போட்டியில் விளையாடி தோல்வியை சந்தித்து ரன் ரேட் அடிப்படையில் 3, 4வது இடங்களில் இருக்கின்றன. தற்போதைய சூழ்நிலையில ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா அணிகள் செமி ஃபைனல் செல்வதற்கு தங்களுடைய கடைசிப் போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: அந்த பதவி எனக்கு கிடைத்தால் தயங்காமல் அதை செய்ய தயாராக இருக்கிறேன் – வெங்கடேஷ் ஐயர் அறிவிப்பு

மறுபுறம் இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான் அணிகள் செமி ஃபைனல் செல்ல தங்களது கடைசி 2 போட்டிகளில் ஒன்றாக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. மேலும் நாளை இங்கிலாந்து – ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் போட்டியில் தோற்கும் அணி வெளியேறும். அதே போல புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருந்தும் தென்னாபிரிக்கா தனது கடைக்கு போட்டியில் தோற்றால் தொடரிலிருந்து வெளியேறும் அபாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. 1992 முதல் ஐசிசி தொடர்களின் பலமுறை தென்னாப்பிரிக்காவின் கோப்பை கனவை மழை கெடுத்துள்ளது. அதே போல இம்முறையும் அந்த அணியின் சாம்பியன்ஸ் டிராபி கனவை மழையால் பாதிக்கப்பட்ட இப்போட்டி உடைக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

Advertisement