
இந்திய கிரிக்கெட் அணியின் இளம் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான சர்பராஸ் கான் இந்த ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் இடையில் அறிமுகமாகி இங்கிலாந்து அணிக்கு எதிராக மூன்று போட்டிகளில் விளையாடி மூன்று அரை சதங்களுடன் 200 ரன்கள் அடித்து அசத்தியிருந்தார். அதோடு உள்ளூர் கிரிக்கெட்டிலும் மலைபோல் ரன்களை குவித்த அவருக்கு தொடர்ச்சியான டெஸ்ட் வாய்ப்புகளை வழங்க வேண்டும் என்று பலரும் தங்களது ஆதரவினை தெரிவித்து வந்தனர்.
ஆனாலும் இந்திய அணியின் பேட்டிங் பலம் அதிகமாக இருப்பதன் காரணமாகவே கடந்த பல தொடர்களாக டெஸ்ட் அணியில் அவர் தொடர்ந்து இடம் பிடித்து வந்தாலும் பிளேயிங் லெவனில் அவருக்கு விளையாடும் வாய்ப்பு கிடைக்காமல் இருந்து வந்தது. இந்நிலையில் நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் இடம் பிடித்திருந்த சர்பராஸ் கானுக்கு சுப்மன் கில்லுக்கு ஏற்பட்ட காயம் காரணமாக விளையாடும் வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பை தற்போது அவர் மிகவும் கெட்டியாக பிடித்துக் கொண்டு நிரந்தர இடத்தை பிடித்து விட்டார் என்றே கூற வேண்டும்.
ஏனெனில் நியூசிலாந்து அணிக்கெதிரான இந்த முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சின் போது நான்காவது வீரராக களம் இறங்கிய அவர் ரன்கள் எதுவும் எடுக்காமல் டக் அவுட் ஆகியிருந்தாலும் இரண்டாவது இன்னிங்ஸின் போது இந்திய அணி 356 ரன்கள் என்கிற பின்னடைவை சந்தித்த வேளையில் இந்திய அணிக்கு தேவையான மிக முக்கியமான பார்ட்னர்ஷிப்பை அவர் விராட் கோலி மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோருடன் ஜோடி சேர்ந்து அமைத்திருந்தார்.
அந்த வகையில் இந்த போட்டியின் இரண்டாவது இன்னிங்சின் போது மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் 195 பந்துகளை சந்தித்து 18 பவுண்டரி மற்றும் மூன்று சிக்சர் என 150 ரன்கள் குவித்து அசத்தியிருந்தார். அவரது இந்து சிறப்பான ஆட்டம் காரணமாக இந்திய அணி இன்னிங்ஸ் தோல்வியிலிருந்து தப்பி 107 ரன்கள் முன்னிலை பெற்றது. இந்நிலையில் இந்த போட்டியின் இக்கட்டான சூழலில் மிகச் சிறப்பான முதிர்ச்சியான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவரது இந்த இன்னிங்ஸ்க்கு பல்வேறு வீரர்களும் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான முகமது கைப்பும் அவரை மிகவும் பாராட்டி பேசியுள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறியதாவது : சர்பராஸ் கான் தனது வாழ்க்கையில் ஏராளமான கடினமான சூழல்களை சந்தித்தவர். குழந்தை பருவம் முதல் எதுவுமே அவருக்கு சரியாக அமையவில்லை. ஃபிட்னஸ் விஷயத்திலும் அவர் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டார். ஆனாலும் உள்ளூர் கிரிக்கெட்டில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தொடர்ச்சியான சதங்களை விளாசி வந்தார். என்னை பொறுத்தவரை பிட்னஸ் அவருக்கு எப்போதும் ஒரு பிரச்சினையாக இருக்காது என்று நினைக்கிறேன்.
இதையும் படிங்க : 8 விக்கெட்ஸ்.. போராடி வீழ்ந்த இந்தியாவை.. அடக்கிய நியூசிலாந்து 36 வருடத்திற்கு பின் சாதனை வெற்றி
ஏனெனில் அவரது இயல்பான உடலமைப்பு அதுதான். என்னை பொருத்தவரை அவர் டெஸ்ட் கிரிக்கெட்க்கு பொருத்தமான வீர.ர் ஏனெனில் அவரால் இந்த உடல்மைப்பை வைத்துக் கொண்டும் ஒருநாள் முழுவதும் களத்தில் நின்று பேட்டிங் செய்ய முடியும். அவர் பேட்டிங் செய்யும் விதத்தை பார்த்தால் மிக அருமையாக இருக்கிறது. என்னை பொறுத்தவரை அவர் தொடர்ச்சியாக டெஸ்ட் அணியில் விளையாட வேண்டிய ஒரு வீரர் என்று தான் கருதுவதாக முகமது தெரிவித்துள்ளார் கைப் கூறியது குறிப்பிடத்தக்கது.