
ஆசிய 2025 கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு நாடுகளில் நடைபெற உள்ளது. அந்தத் தொடரில் விளையாடுவதற்காக சூரியகுமார் தலைமையிலான இந்திய அணி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. அந்த அணியில் ரிங்கு சிங், ஜெய்ஸ்வால் போன்ற இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்காது என்று செய்திகள் வெளியாகியுள்ளன. அப்படிப்பட்ட சூழ்நிலையில் முன்னாள் வீரர் முகமது கைஃப் தம்முடைய இந்திய அணியை தேர்ந்தெடுத்துள்ளார்.
அந்த அணியில் ஜெய்ஸ்வாலை ஓப்பனிங் பேட்ஸ்மேனாக தேர்ந்தெடுக்காத அவர் கடந்த இங்கிலாந்து தொடரில் 754 ரன்கள் அடித்து அசத்திய சுப்மன் கில்லை தேர்ந்தெடுத்துள்ளார். அதே போல ரிங்கு சிங்கை தேர்ந்தெடுக்காத அவர் சிவம் துபேவை ஃபினிஷராக தேர்ந்தெடுத்துள்ளார். மேலும் கடந்த ஐபிஎல் கோப்பையை ஆர்சிபி வெல்ல உதவிய ஜிதேஷ் சர்மாவை அவர் பேக்-அப் விக்கெட் கீப்பராக தேர்ந்தெடுத்துள்ளார்.
அத்துடன் இங்கிலாந்து தொடரில் 23 விக்கெட்டுகள் எடுத்து அசத்திய முகமது சிராஜ் டி20 கிரிக்கெட்டில் விளையாடுவதற்கு தகுதியானவர் என்றும் கைஃப் கூறியுள்ளார். இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் பேசியது பின்வருமாறு. “கில் – ஜெய்ஸ்வால் ஆகியோரில் ஒருவர் மட்டுமே விளையாட முடியும். சுப்மன் கில் இங்கிலாந்து தொடரை சிறப்பாக அணுகி 2 – 2 என சமன் செய்ய உதவினார்”
“அங்கே 754 ரன்கள் அடித்த அவர் ஐபிஎல் தொடரிலும் குஜராத்துக்காக ரன்களை குவித்துள்ளார். எனவே அவர் இந்திய அணியில் இருக்க வேண்டும் என்று நான் கருதுகிறேன். பிளேயிங் லெவனில் இல்லாவிட்டாலும் அவர் பேக்-அப் வீரராக அணியில் இருக்க வேண்டும். இங்கிலாந்தில் வெளிப்படுத்திய செயல்பாடுகளுக்காக சிராஜ் மற்றும் கில் டி20 அணியில் விளையாடுவதற்கு தகுதியானவர்கள்” என்று கூறினார்.
ஆசிய கோப்பை 2025 முகமது கைப் இந்திய அணி விவரங்கள்:
சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா, திலக் வர்மா, சூரியகுமார் யாதவ் (கேப்டன்), அக்சர் படேல் (துணை கேப்டன்), ஹர்திக் பாண்டியா, சிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், ஜஸ்ப்ரித் பும்ரா, வருண் சக்கரவர்த்தி, சுப்மன் கில், முகமது சிராஜ், ஜிதேஷ் சர்மா
இதையும் படிங்க: கம்பீர் இந்த தவறுகளை செய்யலன்னா.. இந்தியா 3 – 1ன்னு இங்கிலாந்தை சாய்த்திருக்கும்.. மஞ்ரேக்கர் விமர்சனம்
இதைத் தொடர்ந்து வரும் செப்டம்பர் 9ஆம் தேதி ஆசிய கோப்பை துவங்குகிறது. இந்தியா தங்களுடைய முதல் ஐக்கிய அரபு நாடுகளை எதிர்கொள்கிறது. அடுத்ததாக பரம எதிரி பாகிஸ்தானை செப்டம்பர் 19ஆம் துபாயில் இந்திய அணி சந்திக்கிறது. கடைசி லீக் போட்டியில் ஓமன் அணியை இந்தியா எதிர்கொள்வது குறிப்பிடத்தக்கது.