கம்பீர் இந்த தவறுகளை செய்யலன்னா.. இந்தியா 3 – 1ன்னு இங்கிலாந்தை சாய்த்திருக்கும்.. மஞ்ரேக்கர் விமர்சனம்

Sanjay Manjrekar 2
- Advertisement -

இங்கிலாந்தில் நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2 – 2 என்ற கணக்கில் சுப்மன் கில் தலைமையிலான இளம் இந்திய கிரிக்கெட் அணி சமன் செய்தது. குறிப்பாக கடைசி போட்டியில் 6 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி மிராக்கள் வெற்றி பெற்றது. அதனால் படுதோல்வியை சந்திக்கும் என்று கணித்த முன்னாள் இங்கிலாந்து வீரர்களுக்கு இளம் இந்திய அணி தக்க பதிலடி கொடுத்தது.

இந்நிலையில் அந்தத் தொடரில் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் சரியான பிளேயிங் லெவனை தேர்ந்தெடுத்திருந்தால் 3 – 1 என்ற கணக்கில் இந்தியா வென்றிருக்கும் என முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ரேக்கர் விமர்சித்துள்ளார். குறிப்பாக பஸ்பால் ஸ்டைலை பின்பற்றும் இங்கிலாந்து லார்ட்ஸ் போட்டியை தவிர்த்து மற்ற அனைத்து போட்டிகளிலும் அதிரடியாக விளையாடி ரன்களை குவிக்க முயற்சித்தது.

- Advertisement -

கம்பீர் செய்த தவறுகள்:

அங்கே குல்தீப் யாதவ் விளையாடியிருந்தால் இந்தியாவின் வெற்றி வாய்ப்பு அதிகமாகி இருக்கும் என்று மஞ்ரேக்கர் தெரிவித்துள்ளார். மேலும் தவறான வேகப்பந்து வீச்சு துறை குறித்தும் சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “கௌதம் கம்பீர் தேர்வில் ஜெய்ஸ்வால், கில், ராகுல், ரிஷப் பண்ட், வாஷிங்டன் சுந்தர் மட்டுமே தரமான எதிரணிக்கு எதிராக பாதுகாப்பான பந்தயங்களாக இருந்தார்கள்”

“ஆனால் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு துறையைப் பார்த்து நான் பயப்பட்டேன். குறிப்பாக கௌதம் கம்பீர் கையாண்ட வினோதமான தந்திரங்கள் மற்றும் பிளேயிங் லெவன், பவுலிங் மாற்றங்கள் ஆகியவை பயத்தைக் கொடுத்தன. ஒருவேளை அதை இன்னும் சிறப்பாக கட்டுப்படுத்தியிருந்தால் 3 – 1 என்ற கணக்கில் இந்தியா எதிரணியை தோற்கடித்திருக்கும்”

- Advertisement -

மஞ்ரேக்கர் விமர்சனம்:

“குல்தீப் யாதவ் தொடர் முழுவதும் விளையாடாதது கடைசி வரை அனைவருக்கும் பெரிய ஆச்சரியமாகவே இருந்தது. நீங்கள் பலவீனமான பௌலிங் அட்டாக்கை வைத்துக் கொண்டு எதிரணியிடம் மோதினீர்கள். மேலும் பேட்டிங்கில் நீங்கள் செய்த விசித்திரமான தேர்வுகள் தோல்வியை கொடுத்திருக்கலாம். இதே போன்ற அணுகுமுறையை கடந்த ஆஸ்திரேலிய தொடரில் பயன்படுத்தியதாலேயே இந்தியா தோல்விகளை விலையாக கொடுத்தது”

இதையும் படிங்க: ப்ரேவிஸை சிஎஸ்கே குறுக்கு வழியில் வாங்கியதா? அஸ்வின் கருத்தின் சர்ச்சைக்கு சென்னை நிர்வாகம் பதில்

“தொடர் சமனில் முடிந்ததால் ஏற்பட்ட மகிழ்ச்சியில் இந்த தவறுகள் பற்றி தேர்வுக்குழுவினர் மற்றும் பிசிசிஐ கேள்வி கேட்கவில்லை என்றால், இந்தியா மற்றொரு தொடரில் தடுமாற்றத்தை சந்திக்க நேரிடும். சொல்லப்போனால் அந்த தொடரில் 2 அணிகளுமே பலவீனமான பவுலிங் துறையைக் கொண்டிருந்தன” என்று கூறினார். அவர் கூறுவது போல ஒருவேளை இந்தியா கடைசிப் போட்டியில் தோல்வியை சந்தித்திருந்தால் கௌதம் கம்பீர் கடுமையாக விமர்சிக்கப்பட்டிருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement