ப்ரேவிஸை சிஎஸ்கே குறுக்கு வழியில் வாங்கியதா? அஸ்வின் கருத்தின் சர்ச்சைக்கு சென்னை நிர்வாகம் பதில்

R Ashwin
- Advertisement -

தென்னாப்பிரிக்காவை சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரர் தேவால்ட் பிரேவிஸ் 2022 அண்டர்-19 உலகக் கோப்பையில் அதிக ரன்கள் குவித்து அசத்தினார். அதனால் ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அவரை 3 கோடிக்கு வாங்கியது. ஆனால் அந்த அணியில் அவர் தொடர்ச்சியாக அசத்த தவறினார். அதனால் கழற்றி விடப்பட்ட அவரை 2025 ஐபிஎல் ஏலத்தில் எந்த அணியும் வாங்கவில்லை.

அந்த சூழ்நிலையில் 2.20 கோடிக்கு வாங்கப்பட்ட சிஎஸ்கே வீரர் குர்ஜப்நீத் சிங் காயத்தால் பாதியிலேயே வெளியேறினார். அவருக்கு பதிலாக மாற்று வீரராக வாங்கப்பட்ட பிரேவிஸ் அதிரடியாக விளையாடி தன்னை சிஎஸ்கே அணியின் வருங்கால நம்பிக்கை நட்சத்திரமாக அடையாளப்படுத்தினார். அது போக ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சில தினங்களுக்கு முன் 2வது டி20 போட்டியில் அபாரமாக விளையாடிய அவர் 125* (56) ரன்கள் குவித்தார்.

- Advertisement -

அஸ்வின் குற்றசாட்டு:

அதனால் தென்னாப்பிரிக்காவை வெற்றி பெற வைத்த பிரேவிஸ் சில சாதனைகளையும் படைத்தார். அப்போது பிரேவிஸை சிஎஸ்கே எக்ஸ்ட்ரா பணம் கொடுத்து வாங்கியதாக ரவிச்சந்திரன் அஸ்வின் தனது யூடியூப் பக்கத்தில் தெரிவித்தார். குறிப்பாக தம்முடைய தகுதியை அறிந்து பிரேவிஸ் எக்ஸ்ட்ரா பணம் கேட்டதாக அஸ்வின் கூறினார். அதற்கு மற்ற அணிகள் தயாராக இல்லாத நிலையில் சிஎஸ்கே எக்ஸ்ட்ரா பணம் கொடுத்து பிரேவிஸை வாங்கியதாக அஸ்வின் தெரிவித்தார்.

அதாவது சிஎஸ்கே அணி வெளியுலகிற்கு தெரியாமல் பிரேவிஸை அதிக பணம் கொடுத்து குறுக்கு வழியில் வாங்கியதாக அஸ்வின் சொன்னார். 2016 – 2017 காலகட்டங்களில் உரிமையாளர்கள் சூதாட்டத்தில் ஈடுபட்டதால் சிஎஸ்கே அணி தடை பெற்றது. அதனால் அஸ்வின் சொல்வது போல் சிஎஸ்கே குறுக்கு வழியில் சென்றிருக்கும் என்று எதிரணி ரசிகர்கள் விமர்சித்தனர்.

- Advertisement -

சிஎஸ்கே விளக்கம்:

இந்நிலையில் பிரேவிஸை ஐபிஎல் 2025 – 2027 விதிமுறைகளுக்கு உட்பட்டே வாங்கியதாக சிஎஸ்கே அணி தெளிவுபடுத்தியுள்ளது. இது பற்றி அந்த அணி வெளியிட்டுள்ள அறிக்கையில். “2025 ஐபிஎல் தொடரின் போது மாற்று வீரராக பிரேவிஸ் கையெழுத்திடும் போது உரிமையாளரால் எடுக்கப்பட்ட அனைத்து நடவடிக்கைகளும் விதிமுறைகளுக்கு முற்றிலும் இணங்குகின்றன என்பதை சென்னை சூப்பர் கிங்ஸ் திட்டவட்டமாக தெளிவுபடுத்துகிறது”

இதையும் படிங்க: சுப்மன் கில்லை விட ஜெய்ஸ்வாலிடம் அந்த டிஎன்ஏ இருக்கு.. கேப்டனுக்காக தப்பு பண்ணாதீங்க.. ஆகாஷ் சோப்ரா

“விதிமுறை 6.1 அல்லது 6.2க்கு ஏற்ப கையெழுத்திட்ட ஒரு வீரரின் சம்பளம் மாற்று வீரரின் சம்பளத்தை (2.20 கோடி) விட அதிகமாக இருக்காது. இது தொடர்புடைய பருவத்திற்கு காயமடைந்த/கிடைக்காத வீரருக்கு செலுத்தப்படும். ஒரு சீசனில் ஒரு மாற்று வீரர் தேர்வு செய்யப்பட்டால், அவர் பதிவு செய்யப்படுவதற்கு முன்னர் நடந்த வீரர் ஒப்பந்தத்தின் கீழ் வேறு ஏதேனும் பொருத்தமான விலக்குகள் நடந்த நிலையில், போட்டிகளை கணக்கில் எடுத்துக்கொண்டு அவருக்கு செலுத்தப்பட்ட லீக் சம்பளம் குறைக்கப்படும்” என்று கூறப்பட்டுள்ளது.

Advertisement