இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக 2025 ஆசிய கோப்பையில் விளையாட உள்ளது. அந்தத் தொடருக்கான இந்திய அணி விரைவில் வெளியிடப்பட உள்ளது. அந்த அணியில் ஓப்பனிங் பேட்ஸ்மேன்களாக சமீபத்திய தொடர்களில் அசத்திய சஞ்சய் சாம்சன் மற்றும் அபிஷேக் சர்மா ஆகியோர் தேர்வு செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதன் காரணமாக யசஸ்வி ஜெய்ஸ்வால் கழற்றி விடப்பட உள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. அதே போல டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய கேப்டனாக பொறுப்பேற்ற கில் தலைமையில் இங்கிலாந்தில் 2 – 2 (5) என்ற கணக்கில் இந்தியா தொடரை சமன் செய்தது. அத்தொடரில் 754 ரன்கள் குவித்த கில் பல சாதனைகளை புரிந்து இந்தியாவின் வெற்றிகளில் பங்காற்றினார்.
சுப்மன் கில் வேண்டாம்:
அதனால் ஒருநாள் கிரிக்கெட்டிலும் துணைக் கேப்டனாக நியமிக்க தேர்வுக்குழுவினர் விரும்புகிறார்கள். எனவே அவரை டி20 அணியில் பேக்-அப் ஓப்பனராக தேர்ந்தெடுக்க தேர்வுக்குழு முடிவு எடுத்துள்ளதாகவும் தெரிய வருகிறது. இந்நிலையில் டி20 கிரிக்கெட்டில் சுப்மன் கில்லை விட அதிரடியாக விளையாடும் ஸ்டைல் ஜெய்ஸ்வால் டிஎன்ஏவில் இருப்பதாக முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.
எனவே ஜெய்ஸ்வாலை டி20 அணியில் கழற்றி விடக்கூடாது என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “கடந்த தொடரில் 15 பேர் கொண்ட இந்திய டி20 அணியில் 3வது ஓப்பனிங் பேட்ஸ்மேன் இல்லை. அபிஷேக், சாம்சன் ஆகியோர் எப்போதுமே ஃபார்மை இழக்க மாட்டார்கள் என்று நம்மால் சொல்ல முடியாது. எனவே உலகக்கோப்பையையும் கருத்தில் கொண்டு நீங்கள் எக்ஸ்ட்ரா ஓப்பனரை வைத்திருப்பது முக்கியம்”
ஜெய்ஸ்வால் வேண்டும்:
“டி20 கிரிக்கெட்டை பொறுத்த வரை கில்லை விட ஜெய்ஸ்வால் கொஞ்சம் முன்னிலையில் இருக்கிறார். நம்முடைய அணியின் டிஎன்ஏவுக்கு அவருடைய டி20 பேட்டிங் விளையாடும் விதம் பொருத்தமாக இருக்கும். உங்களுடைய டெஸ்ட் கேப்டனாக இருக்கும் கில் ஒருநாள் கிரிக்கெட்டில் துணைக் கேப்டனாக இருக்கிறார். எனவே டி20 அணியில் அவரை பெஞ்சில் அமர வைப்பது நன்றாக தெரியாது”
இதையும் படிங்க: யாஷஸ்வி ஜெய்ஸ்வால் மட்டுமில்ல.. சுப்மன் கில்லுக்கும் அதே நிலைமை தான் – வெளியான தகவல்
“ஒருவேளை சம்சானுக்கு பதிலாக அவரை நீங்கள் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக விளையாட வைத்தால் யார் கீப்பிங் செய்வது? திலக், சூரியகுமார் 3, 4வது விளையாடுவார்கள் என்பதால் சாம்சன் 5வது இடத்தில் விளையாடுவது சரியாக இருக்குமா? அது நல்ல கலவையாக இருக்காது. இல்லையெனில் நீங்கள் ஐபிஎல் தொடரில் அசத்திய விக்கெட் கீப்பர் ஜிதேஷ் சர்மாவை மிடில் ஆர்டரில் விளையாட வைக்க வேண்டும்” என்று கூறினார்.



